u.ve.saminathanஉ.வே.சா. நினைவுகள் - 20

[உ.வே. சாமிநாதையரின் சீவகசிந்தாமணிப் பதிப்பிற்குப் பொருளுதவி அளித்து ஊக்குவித்த பூண்டி அரங்கநாத முதலியாரும் சிலப்பதிகாரப் பதிப்பு வரவேண்டுமென்று தூண்டிப் பொருளுதவி செய்த கொழும்பு பொ. குமாரசாமி முதலியாரும்; பட உதவி: என் சரித்திர முதல் பதிப்பு - 1950]

உ.வே. சாமிநாதையர் தாம் பதிப்பித்து வெளியிட்ட ஒவ்வொரு நூலின் முகவுரையிலும் நூலின் வரலாறு, உரையாசிரியர் வரலாற்றுடன் ஏட்டுச் சுவடிகளின் அமைப்பைப் பற்றி எழுதிய பின்னர், பொருளுதவி செய்தவர்களைப் பற்றியும், பதிப்பிக்கும் காலத்தில் உடனிருந்து உழைத்தவர்களில் முக்கியமானவர்களைப் பற்றியும், இறுதியாகச்சுவடிகளின் விவரம் பற்றியும் எழுதி அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த அமைப்பு முறையினை அவரின் முகவுரைக் குறிப்பொன்றின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

...பழைய பிரதிகளுட்பல, இனி வழுப்படவேண்டுமென்பதற்கிடமில்லாமற் பிழைபொதிந்து, அநேகவருடங்களாகத் தம்மைப் படிப்போரும் படிப்பிப்போருமில்லை யென்பதையும் நூல்களைப் பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே விரதமாகக் கொண்ட சில புண்ணியசாலிகளாலேயே தாம் உருக்கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின.

ஒன்றோடொன்று ஒவ்வாது பிறழ்ந்து குறைவுற்றுப் பழுதுபட்டுப் பொருட்டொடர்பின்றிக்கிடந்த இப்பிரதிகளைப் பரிசோதித்த துன்பத்தை உள்ளுங்கால் உள்ளம் உருகும்... இந்தக் கையெழுத்துப் பிரதிகளையுதவியவர்கள்பால் மிக்க நன்றி பாராட்டுகிறேன்....

இதனைப் பதிப்பிக்குங்காலத்து எனக்குச் சிறிதும் கவலையுண்டாகாதபடி, சென்னை இராசதாணிக்கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர் ம-m--m-ஸ்ரீ இ. வை. அனந்தராமையரவர்களும், மயிலாப்பூர் பி. எஸ். ஹைஸ்கூல் முதல் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி, ம.வே. துரைசாமி ஐயரும், முதற்பதிப்பிற்கு உடனிருந்து உதவிய திருமானூர் ஸ்ரீ கிருஷ்ணையரவர்கள் குமாரர் சிரஞ்சீவி, கே. அருணாசல ஐயரும், சென்னை இராசதானிக் கையெழுத்துப் புத்தகசாலைத் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி, ஜி. சேஷாத்திரி ஐயரும் ஆராய்தல் ஒப்புநோக்குதல் முதலிய பேருதவிகளை உள்ளன்புடன் செய்து வந்தார்கள்...

இந்நூல் மூலமும் உரைகளும் கணேச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பெற்றன; அதற்குவேண்டிய அனுகூலங்களைச் செய்துகொடுத்த ம-m--m---ஸ்ரீ முருகேச முதலியாரவர்கள்பால் நன்றியறிவுடையேன்... தொழிலாளிகளுடைய முட்டுப்பாடு மிகுதியாகவுள்ள இக்காலத்தில் இப்புத்தகத்தின் ஏனைப்பகுதிகளைத் திருத்தமாக மிக்க விரைவில் நிறைவேறும்படி செய்வித்து உதவிய கமர்ஷியல் அச்சுக்கூடத்தாருடைய அன்புடைமை மிகவும் பாராட்டத்தக்கது...

இம்முயற்சியிற் புகுத்தி நடத்தி ஊக்கமளித்து என்னைப் பாதுகாக்கும் தமிழ்த் தெய்வத்தை அனவரதமும் வந்திக்கின்றேன் (முகவுரை, புறநானூறு மூலமும் உரையும், இரண்டாம் பதிப்பு, 1920).

சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்ட அச்சுநூல்கள் அனைத்திலும் இந்த முறைமை மாறாமல் இடம்பெற்றிருக்கும். பழைய நூலொன்று அச்சுருவாகி வெளிவருவதற்கு அந்நூலிற்குரிய சுவடிகள், அச்சுவடியைப் பெயர்த்தெழுத, ஒப்புநோக்க வேண்டிய புலமையுடைய அன்பர்கள், பெயர்த்தெழுதிய பின்னர் அச்சிட்டு வெளியிடுவதற்கு வேண்டிய பொருளுதவிகள் ஆகியன மிகத் தேவையானதாகும்.

இவைகளன்றி ஒரு பழம்நூலைப் பதிப்பித்து வெளியிட்டுவிட முடியாது. இந்தத் தேவையை நன்குணர்ந்த சாமிநாதையர் இவற்றிற்குத் துணைநின்றவர்களின் பெயர்களைச் சுட்டி நன்றி சொல்லி எழுதும் வழக்கத்தை முகவுரைகளின் வழியாகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.

சிலபோழ்து சுவடிகள், உடனிருந்து உதவி செய்ய வேண்டிய அன்பர்கள் கிடைத்துவிட்ட நிலையில் நூலை அச்சிட்டு வெளியிட வேண்டிய பொருளுதவி இல்லாமல் குறித்த நேரத்தில் வெளியிடக் கருதிய நூலைக் காலதாமதமாக வெளியிட வேண்டிய சூழலையும் சாமிநாதையர் எதிர்கொண்டிருக்கிறார்.

பொருளின் தேவையையும் அதைப் பெறுவதற்குரிய வழியையும் இளமை முதலே சாமிநாதையர் அனுபவபூர்வமாக உணர்ந்தறிந்தவர் என்பதால் சில நேரங்களில் மட்டுமே இத்தகைய சூழலைச் சந்தித்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

சாமிநாதையர் நூற்பதிப்புத்துறையில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் பதிப்பித்து வெளியிடக் கருதிய நூலின் விவரத்தை விளம்பரமாக அச்சிட்டு, வேண்டிய கனவான்களுக்கு அனுப்பிவைத்து முன்பணம் பெறும் வழக்கமொன்று பதிப்பாசிரியர்களிடம் இருந்தது.

பதிப்பாசிரியர் அச்சிட்டு அனுப்பிய விளம்பர விவரத்தைப் பார்த்துவிட்டு இத்தனை பிரதிகள் வேண்டுமென்ற கருத்துடன் கனவான்கள் கையொப்பமிட்டு உரியவருக்குப் பணத்தை அனுப்பி வைப்பர்; பதிப்பாசிரியர்களே நேரில் சென்று விளம்பரச் செய்தியைக் காட்டிவிட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்வதும் உண்டு.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பதிப்பாசிரியர்கள் நிதித் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும் பொருட்டு மேற்கொண்ட முயற்சிகளுள் இந்தக் கையப்பமுறை முக்கியமானதாக இருந்தது. சாமிநாதையர் சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் காலத்தில் இந்தக் கையொப்ப வழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.

சீவகசிந்தாமணியை ஆராய்ந்து அச்சிட்டு வெளியிடக் கருதிய காலத்தில்‘பதிப்பிக்கப் பணம் வேண்டுமே; அதற்கு என்ன செய்வது!’ என்ற கவலை சாமிநாதையருக்கு ஏற்பட்டிருந்தபோது அவருடைய நண்பர்கள் “தமிழன்புடைய தக்க கனவான்களிடத்தில் சென்று சிந்தாமணியைப் பதிப்பிக்கும் செய்தியைக் கூறிக் கையப்பம் பெற்று முன்பணம் வாங்கிக்கொண்டு பதிப்பிக்கத் தொடங்கலாம்” என்ற வழியைச் சொல்லியிருக்கிறார்கள்.

இது நல்ல வழியென்று உணர்ந்த சாமிநாதையர் அதன் பொருட்டு ஒரு விளம்பரம் அச்சிட்டு அன்பர்களுக்கெல்லாம் அனுப்பியிருந்தார். அதன்வழி வேண்டிய நிதியும் அவருக்குக் கிடைக்கப்பெற்றது.

சாமிநாதையர் திருவாவடுதுறைக்குச் சென்று ஆதினகர்த்தரவர்களிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்து அவரிடம் முதற்கையொப்பம் பெற்றுச் சில பிரதிகளுக்குரிய பணத்தைப் பெற்றுவந்திருக்கிறார்.

அப்போது, கும்கோணத்தில் மட்டும் சற்றேறக்குறைய எழுபது அன்பர்களிடம் கையொப்பம் வாங்கியிருக்கிறார் சாமிநாதையர். தஞ்சைக்கும், திருச்சிராப்பள்ளிக்கும் சென்று அன்பர்கள் பலருடைய உதவியைப் பெற்றிருக்கிறார். திருச்சிராப்பள்ளியில் தியாகராச செட்டியாருடைய உதவியினால் இருபத்தைந்து பேர்களிடம் கையொப்பம் பெற்றிருக்கிறார்.

சாமிநாதையர், சீவகசிந்தாமணிக்குப் பூண்டி அரங்கநாத முதலியாரிடம் கையொப்பம் வாங்கலாமென்ற எண்ணத்தோடு சென்னையிலிருந்த அவர் வீட்டிற்குச் சென்று,

“நந்தாத வான்பொ ருளைப்புல வோர்க்கு
நயந்தளிக்கும்
சிந்தா மணியைப் பலரு மெளிதுறச் செய்திடுவாய்
மந்தாரத் தோடெழிற்சந்தானம் போலிரு
வான்பொருளை
வந்தார்க் களித்திடு மால்ரங்க நாத மகிபதியே”

என்ற கட்டளைக் கலித்துறைப் பாடலைப் பாடிக்காட்டி நூறு ரூபாய்க்கான கையொப்பத்தைப் பெற்றுவந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கையொப்பப் புத்தகத்தைச் சாமிநாதையரிடமிருந்து வாங்கிவைத்துக்கொண்டு பம்மல் விஜயரங்க முதலியார், ராஜா ஸர் சவலை ராமசாமி முதலியார், சூளை சிங்கார முதலியார் முதலிய கனவான்களிடமும் கையொப்பங்களை வாங்கித் தந்து உதவியிருக்கிறார் அரங்கநாத முதலியார்.

சீவகசிந்தாமணி அச்சிடும் பொருட்டுப் பலரும் முன் பணம் கொடுப்பதாகக் கையொப்பமிட்டிருந்த போதிலும் சிலர் மட்டுமே உரிய காலத்தில் பணம் அனுப்பியிருந்தனர். கையொப்பமிட்ட கனவான்களுக்கு மீண்டும் கடிதம் எழுதிக் கேட்டுப் பணத்தைப் பெற்றிருக்கிறார் சாமிநாதையர். ஒருவழியாகச் சீவகசிந்தாமணி அச்சுருவாகி (1887) வந்த பின்னர் கையொப்பமிட்ட கனவான்களுக்கும் பிறருக்கும் சீவகசிந்தாமணி நூலை அனுப்பிவைத்திருக்கிறார்.

சாமிநாதையர் இந்தக் கையொப்ப வழக்கத்தை நெடுங்காலம் பின்பற்றவில்லை. சிந்தாமணிக்குப் பின்னர் பத்துப்பாட்டைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் “காலேஜ் பண்டிதர் சாமிநாதையர் பத்துப்பாட்டை அச்சிடுவதாகச் சொல்லிக் கையப்பம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இது பணம் சம்பாதிக்கும் வழியென்று தோற்றுகிறது” என்ற வீண் வதந்தி பரவுவதைக் கண்ட சாமிநாதையர் அதுமுதல் கையொப்பம் மூலமாக முன்பணம் பெறுவதை நிறுத்திக் கொண்டார்; நூற்பதிப்புப் பணிக்குத் தேவையான நிதியுதவிப் பெறுவதற்கான வேறுவழிகளைக் கண்டடைந்தார்.

தமிழின் தலைசிறந்த நூல்களாக விளங்கிய சீவகசிந்தாமணியையும் (1887), பத்துப்பாட்டையும் (1889) சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுப் புகழடைந்த சாமிநாதையருக்கு ஜமீன்தார்களும், கனவான்களும் தாமாக முன்வந்து நிதியுதவி அளிக்கத்தொடங்கினர்.

சாமிநாதையரும் அவர்களின் உதவிக்குத் தக்க உழைப்பைச் செலுத்திப் பழந்தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டுத் தமிழுக்குத் தொண்டாற்றினார். அந்தவகையில் சாமிநாதையரின் பதிப்புப் பணிக்கு உதவிய அன்பர்களின் பெயர்கள் நூற்பதிப்பு வாரியாக இங்குத் தரப்படுகிறது.

சங்க இலக்கியங்கள்

1. திருப்பாதிரிப்புலியூர் ம-m--m---ஸ்ரீ ஸாது - சேஷையர்

2. திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர்

3. மதுரை (டிப்டி கலெக்டர்) ம-m--m---ஸ்ரீ ம. தில்லைநாயகம்பிள்ளை

4. தஞ்சாவூர் (ஜில்லா கோர்ட்டு வக்கீல்) ம-m--m---ஸ்ரீ கீ. சி. சீநிவாசபிள்ளை

5. சிவகங்கை (ஸப்டிவிஷன் சிறுவயல் ஜமீன்தார்) ம-m--m---ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர்

6. சோழன்மாளிகை (மிராசு) ம-m--m---ஸ்ரீ இரத்தினம் பிள்ளை (பத்துப்பாட்டு, முதல் பதிப்பு, 1889)

7. ஸ்ரீஸேதுஸம்ஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச்சங்கத்துத் தலைவர்களும், சென்னைச் சட்ட நிரூபணசபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய ம-m--m---ஸ்ரீ, பா. இராஜராஜேசுவர சேதுபதி மகாராஜா (பத்துப்பாட்டு, இரண்டாம் பதிப்பு, 1918)

8. திருவாவடுதுறை யாதீனத்துத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர்

9. திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமிகள்

10. ஸ்ரீஸேதுஸம்ஸ்தானாதிபதிகளாகிய கௌரவம் பொருந்திய மகாராஜராஜஸ்ரீ ஷண்முக ராஜேசுவர நாகநாத சேதுபதி மகாராஜா

11. கொழும்பு, ஸ்ரீமான் டாக்டர் கு. ஸ்ரீகாந்த முதலியார்

12. பெரும்பன்றியூர் ஸ்ரீமான் கி. வி. பெரியசாமி முத்தைய உடையார் (பத்துப்பாட்டு, மூன்றாம் பதிப்பு, 1931)

13. ம-m--m---ஸ்ரீ கே. சுந்தரராம ஐயர்

14. சிறுவயல் ஜமீந்தார் ம-m--m---ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவர்

15. ம-m--m---ஸ்ரீ அ. இராமநாதசெட்டியார் (புறநானூறு, முதல் பதிப்பு, 1894)

16. ஸ்ரீஸேதுஸமஸ்தானத் தலைவர்களும், மதுரைத்தமிழ்ச் சங்கத்து அக்கிராசனாதிபதிகளும், சென்னைச் சட்ட நிரூபணசபை யங்கத்தினர்களுமாகிய இரணியகர்ப்பயாஜி ரவிகுலதிலக முத்துவிஜயரகுநாதராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா (புறநானூறு, இரண்டாம் பதிப்பு, 1923)

17. கும்பகோணம் கவர்ன்மெண்ட் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் திரிசிரபுரம் வித்துவான் ஸ்ரீ தியாகராச செட்டியார்

18. கும்பகோணம் காலேஜ், சரித்திர உபந்யாஸகர் ம-m--m---ஸ்ரீ கே. சுந்தரராமையர் (ஐங்குறுநூறு, முதல் பதிப்பு, 1903)

19. ஸ்ரீஸேதுஸம்ஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்களும் சென்னைச் சட்ட நிரூபணசபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய ம-m--m---ஸ்ரீ பா. இராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா (ஐங்குறுநூறு, இரண்டாம் பதிப்பு, 1920)

20. ஸ்ரீஸேது ஸம்ஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர்களும், சட்ட நிரூபணசபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய ம-m--m---ஸ்ரீ பா. இராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா (பதிற்றுப்பத்து, இரண்டாம் பதிப்பு,1920)

21. திருப்பனந்தாள் காசிமடத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சாமிநாத ஸ்வாமிகள் (பதிற்றுப்பத்து, மூன்றாம் பதிப்பு, 1941)

22. கொழும்பு நகரத்துப் பிரபுசிகாமணி, கௌரவம் பொருந்திய ஸ்ரீமான், பொ. குமாரசாமி முதலியார்

23. ஸ்ரீ ஸேதுஸம்ஸ்தானாதிபதிகளும் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர்களும் சென்னை சட்ட நிரூபணசபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய மஹாராஜஸ்ரீ பா. இராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா (பரிபாடல், முதல் பதிப்பு, 1918)

24. சென்னை சர்வகலாசாலையின் பொருளுதவியைப் பெற்றுத் தந்தவர், தமிழ்ப்பாடபுத்தக சபையின் தலைவர் ஸ்ரீமான் டி. சிவராம சேதுப்பிள்ளை (குறுந்தொகை, முதல் பதிப்பு, 1937) காப்பியம்

25. சென்னை, நியூயிங்க்டன் ஸ்கூல் மதபோதகாசிரியர் ம-m--m---ஸ்ரீ தி. அ. கிருஷ்ணையர்
26. கும்பகோணம், தஞ்சை, கோட்டூர், திரிசிரபுரம், யாழ்ப்பாணம், சென்னபட்டணம், திருநெல்வேலி, ஊற்றுமலை, சோழன் மாளிகை முதலிய இடங்களிலுள்ள செல்வப்பொருளோடு கல்விப் பொருளும் ஒருங்குடை கனவான்கள் பலர் (சீவகசிந்தாமணி, முதல் பதிப்பு, 1887)

27. சென்னை, நியூயிங்க்டன் ஸ்கூல் மதபோதகாசிரியர் ம-m--m---ஸ்ரீ தி. அ. கிருஷ்ணையர் (சீவகசிந்தாமணி, இரண்டாம் பதிப்பு, 1907)

28. ஸ்ரீ ஸேதுஸம்ஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்களும், சென்னைச் சட்டநிரூபணசபையங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய மஹாராஜராஜஸ்ரீ பா. இராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா (சீவகசிந்தாமணி, மூன்றாம் பதிப்பு, 1922)

29. கொழும்பு நகரத்துப் பிரபுசிகாமணி ம-m--m---ஸ்ரீ பொ. குமாரசாமி முதலியார்

30. திருப்பாதிரிப்புலியூர் ம-m--m---ஸ்ரீ ஸாதுசேஷையர்

31. சிறுவயல் ஜமீந்தார் ம-m--m---ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவர்

32. திருவாவடுதுறையாதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிர்

33. திருவண்ணாமலையாதீனம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகதேசிகர்

34. திருப்பனந்தாட் காசிமடாதிபதி ஸ்ரீமத் சாமிநாத தம்பிரான்

35. கொழும்பு, ம-m--m---ஸ்ரீ பொ. குமாரசாமி முதலியார்

36. தஞ்சை, ம-m--m---ஸ்ரீ கே. கல்யாணசுந்தர ஐயர்

37. புதுக்கோட்டை சின்ன அரண்மனைத் துரையவர்களாகிய ம-m--m---ஸ்ரீ பாலசுப்பிரமணியரகுநாத தொண்டைமான்

38. பாலைக்காடு, ம-m--m---ஸ்ரீ ப. ஐ. சின்னஸாமி-பிள்ளை

39. தேவிக்கோட்டை, ம-m--m---ஸ்ரீ வீர. லெ. இராமநாதசெட்டியார்

40. தேவிக்கோட்டை, ம-m--m---ஸ்ரீ வீர. லெ. சிந்நயச்செட்டியார்

41. தேவிக்கோட்டை, ம-m--m---ஸ்ரீ அழ. அரு. இராமசாமிச் செட்டியார்

42. தேவிக்கோட்டை, ம-m--m---ஸ்ரீ அழ. சுப. சு. சுப்பிரமணியச்செட்டியார்

43. வீடூர், ம-m--m---ஸ்ரீ உலோ. சந்திரநாதசெட்டியார் (சிலப்பதிகாரம், முதல் பதிப்பு, 1892)

44. ஸ்ரீசேது ஸம்ஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச்சங்கத்துத் தலைவர்களும், சென்னைச் சட்டநிரூபணசபை அங்கத்தினர்களுமான கௌரவம்பொருந்திய மகாராஜராஜஸ்ரீ பா. இராஜராஜேசுவர சேதுபதி மகாராஜா (சிலப்பதிகாரம், இரண்டாம் பதிப்பு, 1920)

45. ஸ்ரீசேது ஸம்ஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச்சங்கத்துத் தலைவர்களும், சென்னைச் சட்டநிரூபணசபை அங்கத்தினர்களுமான கௌரவம்பொருந்திய மகாராஜராஜஸ்ரீ பா. இராஜராஜேசுவர சேதுபதி மகாராஜா (சிலப்பதிகாரம், மூன்றாம் பதிப்பு, 1927)

46. பாலவநத்தம் ஜமீந்தார், இராமநாதபுர ம-m--m---ஸ்ரீ பொ. பாண்டித்துரைத் தேவர்

47. ஹைகோர்ட்டு வக்கீல், எழும்பூர், ஸ்ரீமத். உ. வே. K. இராஜகோபாலாசாரியர்

48. சிவகங்கை, சிறுவயல் ஜமீந்தார் ம-m--m---ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் (மணிமேகலை, முதல் பதிப்பு, 1898)

49. ஸ்ரீ ஸேதுஸம்ஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச்சங்கத்துத் தலைவர்களும், சென்னைச் சட்ட நிரூபணசபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய மஹாராஜராஜஸ்ரீ, பா. இராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா (மணிமேகலை, இரண்டாம் பதிப்பு, 1921)

50. திருப்பனந்தாளாதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான்

51. ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சாமிநாதத் தம்பிரான்

52. ஸ்ரீஸேதுஸம்ஸ்தானாதிபதியும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர்களும், சென்னைச் சட்டநிரூபணசபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய மஹாராஜராஜஸ்ரீ பா. ராஜராஜேசுவர சேதுபதி மஹாராஜா

53. கொழும்பு, ஸ்ரீமான் டாக்டர் கு. ஸ்ரீகாந்த முதலியார்

54. பெரும்பன்றியூர், ஸ்ரீமான் கி.வி.பெரியசாமிமுத்தைய உடையார் (பெருங்கதை, முதல் பதிப்பு, 1924) இலக்கணம்

55. பாலவநத்தம் ஜமீந்தார் இராமநாதபுரம் ம-m--m---ஸ்ரீ பாண்டித்துரைத் தேவர் (புறப்பொருள் வெண்பாமாலை, முதல் பதிப்பு, 1895)

56. ஸ்ரீஸேது ஸம்ஸ்தானாதிபதிகளும் மதுரைத் தமிழ்ச்சங்கத்துத் தலைவர்களும் சென்னைச் சட்ட நிரூபண சபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய ம-m--m---ஸ்ரீ பா. இராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா (நன்னூல் மயிலைநாதர் உரை, முதல் பதிப்பு, 1918)

57. ஸ்ரீஸேதுஸம்ஸ்தானாதிபதிகளும் மதுரைத் தமிழ்ச்சங்கத்துத் தலைவர்களும் சென்னைச் சட்டநிரூபண சபையின் அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய மகாராஜராஜ ஸ்ரீ. பா. ராஜராஜேஸ்வர சேதுபதி மஹாராஜா

58. மதுரைத் தமிழ்ச்சங்கத்துக் கௌரவ காரியதரிசியும் மதுரை ஹைகோர்ட்டு வக்கீலுமான ஸ்ரீமத். டி. ஸி. ஸ்ரீநிவாஸையங்கார் (மதுரையில் 8 - 6 - 25 - ல் நடந்து தமிழ்ச்சங்கவிழாவில் உ.வே.சா. விற்குப் பொருளுதவி செய்தோர் விவரங்கள், நன்னூல் பதிப்பு முகவுரையில் கீழ்வருமாறு உள்ளன)

59. ஸ்ரீ காஞ்சி காமகோடிபீடாதிபதிகளான ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமிகள்

60. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்

61. குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை யாதீனகர்த்தர்

62. திருப்பனந்தாளிலுள்ள காசிமடத்துத் தலைவர்

63. இராமநாதபுரம் கௌரவம் பொருந்திய சேதுபதி மஹாராஜா

64. சென்னை, ஸ்ரீமான் ஸர். கே. ஸ்ரீநிவாஸையங்கார்

65. சென்னை, ஸ்ரீமான் ஸர். ஸி. பி. ராமஸ்வாமி ஐயர் K.C.I.E. (எக்ஸிக்யூடிப் கௌன்ஸில் மெம்பர்)

66. சென்னை, ஸ்ரீமான் ஸர். எம். ஸி. டி. முத்தைய செட்டியார்

67. சென்னை, ஹைகோர்ட் ஜட்ஜ் ஸ்ரீமான் கனம் வி. வி. ஸ்ரீநிவாஸையங்கார்

68. சென்னை, ஹிந்து பத்திராதிபர் ஸ்ரீமான் எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார்

69. சென்னை, சுதேசமித்திரன் பத்திராதிபர் ஸ்ரீமான் ஏ. ரங்கசாமி ஐயங்கார்

70. சென்னை, ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் கே. பாலசுப்பிரமணிய ஐயர்

71. சென்னை, ஸ்ரீமான் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்

72. கோயம்புத்தூர், ஸ்ரீமான் ராவ்பகதூர் டி. ஏ. ராமலிங்க செட்டியார், M.L.C.

73. மதுரை, ஹைக்கோர்ட் வக்கீல் ஸ்ரீமான் டி. ஸி. ஸ்ரீநிவாஸையங்கார்

74. மதுரை, ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் கே. வி. ராமஸ்வாமி ஐயர்

75. மதுரை, ஹைகோர்ட் வக்கீல், ஸ்ரீமான் கே. ஆர். வேங்கடராமையர்

76. மதுரை, வக்கீல் ஸ்ரீமான் ஏ. வைத்தியநாதையர்

77. சிவகங்கை, வக்கீல் ஸ்ரீமான் முகுந்தராஜ ஐயங்கார்

78. திருநெல்வேலி, வெள்ளக்கால், ஸ்ரீமான் வெ. ப. சுப்பிரமணிய முதலியார்

79. குமாரமங்கலம், ஜமீந்தார் ஸ்ரீமான் டாக்டர் சுப்பராயன்

80. தேவகோட்டை, ஸ்ரீமான் அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியார்

81. தேவகோட்டை, ஸ்ரீமான் ராம. அரு. அரு. ராம. அருணாசலஞ் செட்டியார்

82. தேவகோட்டை, ஸ்ரீமான் ராம. மெ. சித. வைரவன் செட்டியார்

83. தேவகோட்டை, ஸ்ரீமான் மெ. அரு. நா. இராமநாதன் செட்டியார்

84. தேவகோட்டை, ஸ்ரீமான் மெ. அரு. அரு. அருணாசலஞ் செட்டியார்

85. தேவகோட்டை, ஸ்ரீமான் உ. ராம. உ. மு. லக்ஷமணன் செட்டியார்

86. தேவகோட்டை, ஸ்ரீமான் தி. ராம. தி. சுப்பிரமணியன் செட்டியார்

87. தேவகோட்டை, ஸ்ரீமான் நாகு. அ. ராம. கிருஷ்ணன் செட்டியார்

88. காரைக்குடி, ஸ்ரீமான் ராவ்பகதூர் ஆவி. பள. சிதம்பரஞ் செட்டியார்

89. காரைக்குடி, ஸ்ரீமான் மெ. செ. மெ. மெ. சொக்கலிங்கஞ் செட்டியார்

90. கோட்டையூர், ஸ்ரீமான் பெ. மு. அ. வெள்ளையப்ப செட்டியார்

91. கோட்டையூர், ஸ்ரீமான் அ. க. ராம. மெ. கி. மெய்யப்ப செட்டியார்

92. கண்டனூர், ஸ்ரீமான் தெ. அரு. சித. அருணாசலஞ் செட்டியார்

93. கண்டனூர், ஸ்ரீமான் ராமநாதன் செட்டியார்

94. கண்டனூர், ஸ்ரீமான் வயி. அ. ராம. அண்ணாமலை செட்டியார்

95. பட்டமங்கலம், ஸ்ரீமான் அ. வீர. அ. அடைக்கப்ப செட்டியார்

96. ராமச்சந்திரபுரம், ஸ்ரீமான் பி. கு. நா. குமரப்ப செட்டியார்

97. நாட்டரசன்கோட்டை, ஸ்ரீமான் சு. ப. ராம. ராம. ராசாமி செட்டியார்

98. கீழைச்செவ்வற்பட்டி, ஸ்ரீமான் அள. அ. அரு. அண்ணாமலை செட்டியார்

99. கீழைச்செவ்வற்பட்டி, ஸ்ரீமான் எ. நா. காசி­விசுவநாதன் செட்டியார்

100. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையார்

101. கொத்தமங்கலம், ஸ்ரீமான் சி. ராம. மு. அண்ணாமலை செட்டியார்

102. கோனார்பட்டு, ஸ்ரீமான் ஷண்முகஞ் செட்டியார்

103. கண்டரமாணிக்கம், ஸ்ரீமான் பள. சு. பள. கருப்பன் செட்டியார்

104. ஆத்திக்காடு தெற்கூர், ஸ்ரீமான் கரு. முத்து. தியாகராஜ செட்டியார்

105. பலவான்குடி, ஸ்ரீமான் வெ. சு. முத்துவள்ளியப்ப செட்டியார்

106. பலவான்குடி, ஸ்ரீமான் ராம. கு. ராம. ராமசாமி செட்டியார்

107. பலவான்குடி, ஸ்ரீமான் ராம. கும. சு. குமரப்ப செட்டியார்

108. நடராஜபுரம், ஸ்ரீமான் வீரப்ப செட்டியார்

109. ஷண்முகநாதபுரம், ஸ்ரீமான் செ. ராம. சித. சிதம்பரஞ் செட்டியார்

110. திருப்புத்தூர், ஸ்ரீமான் சுப்பையா பிள்ளை

111. சாயல்குடி, ஜமீன்தார் ஸ்ரீமான் ஷண்முக கருத்துடையார் சேர்வைகாரர்

(நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை, முதல் பதிப்பு, 1925)

- முனைவர் இரா. வெங்கடேசன்