தமிழகத்தின் கோவை மாவட்டத்திற்குச் சான்றோர் பலரையும், அறிஞர் பலரையும் அளித்த பெருமை உண்டு; பெரியோர் பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பெருமையும் அம்மாவட்டத்திற்கு உண்டு; குறிப்பாக அங்கு வாழும் பேரறிஞர்களில் இருவர் குறிப்பிடத்தக்கவர்; ஒருவர் நூற்றாண்டைக் கடந்து வாழும் பொதுவுடைமை இயக்கத்தின் பெருந்தோழர் சி. சுப்பிரமணியம்; மற்றொருவர் 97 வயதை நெருங்கும் வரலாற்றுப் பேரறிஞர் ந.சுப்பிரமணியன்; இவர், பெரும்புலவரான ந. பலராமஅய்யர், சிவகாமி அம்மை என்ற இணையருக்கு மகனாக 1915-இல் சிதம்பரத்தில் பிறந்தவர்; பலராம அய்யர் பரிமாற் கலைஞரின் தலைமாணாக்கர்; இவர், கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்ததோடு சோதிடத்திலும் வல்லமை பெற்று இருந்தார்; தண்டியாசிரியர் இயற்றிய தசகுமார சரித்திரம், மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் ஆகிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு, ஆனந்தன் ரங்க கோவை என்ற நூலுக்கு அரிய உரையும் எழுதியுள்ளார்; இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்தியாவும் சுயாட்சியும் என்ற நூலையும் எழுதியுள்ளார்; பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும், பாடம் நடத்தி

யதோடு, தனிப்பட்ட முறையில் பற்பலருக்குத் தமிழ் பயிற்றுவித்ததால் இவரால் பல நூல்களைப் படைக்க முடியாது போயிற்று எனலாம்.

அவருடைய மகன் ந. சுப்பிரமணியன் காரைக் குடியிலுள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், பட்டப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பெற்றுள்ளார்; அண்ணாமலையில் வரலாற்றைச் சிறப்புப்பாடமாகக் கொண்டு முதுகலையில் முதல் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறியுள்ளார்.  இவர் அண்ணாமலையில் முதுகலை பயின்ற போது தான் தோழர் கே. பாலதண்டாயுதமும் இளங்கலை பயின்றிருக்கிறார்.  இவர்கள் பயின்ற காலத்தில் அண்ணாமலையில் தத்துவம், வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய துறைகளில் துறைபோய வல்லுநர்கள் இருந்திருக்கிறார்கள்; குறிப்பாக வரலாற்றுத் துறையில் சு. சத்தியநாத அய்யர், ஊ.ளு. சீனிவாஸாச் சாரியார், சு. பாஸ்கரன் போன்றோர் பேராசிரியர்களாக இருந்துள்ளனர்; இவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தியிருந்தாலும், சு. பாஸ்கரனின் ஆழ்ந்தகன்ற புலமையும், ஆங்கில மொழித்திறனும், கொள்கை உறுதியும் அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அக்காலத்திலேயே பாஸ்கரன் சொந்தத்தில் பெரும் நூலகத்தை (சென்னையில்) வைத்திருந்திருக்கிறார்; அதில் ஒரு பகுதியை அண்ணாமலை நகரில் தம் இல்லத்தில் அமைத்திருக்கிறார்; அந்நூல்களின் எண்ணிக்கை 10,000 என்றால் மொத்த நூல்களின் எண்ணிக்கை சொல்லாமலேயே விளங்கும்.  இவரே தம் வாழ்க்கையின் வழிகாட்டி என்கிறார் பேராசிரியர்; பெருங்குணமும், பெருந்தன்மையும் வாய்ந்த அவருக்கு அபாரமான நினைவாற்றலும் இருந்துள்ளது; அவரது ஆளுமை பேராசிரியரைப் பெரிதும் கவர்ந்துள்ளது;

அண்ணாமலை மாணவர்மன்றம் மாநிலப் புகழ்வாய்ந்தது.  அம்மன்றம் பலரை ஆங்கிலத்தில் அழகாகவும், தெளிவாகவும் பேசப் பயிற்றுவித்து இருக்கிறது; குறிப்பாக பேராசிரியர்களாகிய சங்கர சுப்பிரமணியன், அச்சுதன் நாயர்; ஜகநாதாச் சாரியார், சுந்தரராஜன் போன்றோரின் அழகிய ஆங்கிலப் பேச்சுகள் பற்பல பேச்சாளர்களை உருவாக்கியிருக்கிறது; ஆங்கிலத்தில் சிறந்த மேதை களாக விளங்கிய வெள்ளிநாக்கு சீனிவாச சாஸ்திரியும், நு. ரங்கநாதனும் துணைவேந்தர்களாகவும், ஆ.ளு. சுந்தரம் ஆங்கிலத்துறைத் தலைவராகவும் இருந்த சூழல் மாணவனாக இருந்த நம்பேராசிரியரையும் நன்கு செதுக்கியுள்ளது; சுந்தரம் அவர்கள் நுபேடiளா உடரb (ஆங்கில மன்றம்) அமைத்து வாரத்திற்கொரு

நாள் ஆங்கில இலக்கியம் குறித்து விவாதிக்கும் சூழலும், புதன்கிழமைதோறும் வெள்ளிநாக்கு சாஸ்திரியார் நடத்திய ஆங்கில இலக்கிய - இலக்கண வகுப்பும் மாணவர்களைச் செழுமைப்படுத்தி யுள்ளன; பேராசிரியரையும் செழுமைப்படுத்தி யுள்ளது; மூத்த தமிழறிஞராக விளங்கிய பேராசிரியர் அ. சிதம்பரநாதன் செட்டியார் சிறந்த ஆங்கிலப் பேச்சாளராக விளங்கியதற்கு இச்சூழலே காரணம் எனலாம்; ஏறக்குறைய இக்காலத்தில்தான் தோழர் பாலதண்டாயுதமும், எஸ்.ஆர். இராமகிருஷ்ணனும் ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர்களாக இருந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது;

பலராம அய்யரின் மகனாகவும் சிறந்த மாணவனாகவும் பேராசிரியர் இருந்ததால், அவர் சாஸ்திரியாரிடம் அன்புகொண்டு சில போது அவரைச் சந்திக்கலானார்; ஒருமுறை அவர்

செருப்புக் கடியால் சற்று ஊன்றி ஊன்றி நடந்து சாஸ்திரி யாரைச் சந்தித்தபோது, சாஸ்திரியார் அவரை நோக்கிக் காலில் என்ன காயமா? என்று வினவி யுள்ளார்; இவர், அவரை நோக்கி, ளுசை ளாடிந bவைந ளசை என்று கூறியுள்ளார்; சாஸ்திரியார் தம் பக்கத்திலிருந்த ஆங்கிலப் பேராசிரியர் சுந்தரத்தை நோக்கி “ளுhடிந bவைந.... ளரனேயசயஅ ளை வாளை வாந நுபேடiளா லடிர வநயஉh லடிரச bடிலள” என வினவியுள்ளார்; ஆங்கிலப் பேராசிரியர் அமைதியாக இருந்திருக்கிறார்; இவர் அச்சத்துடன் அவரை நோக்கி, “ஐயா அதற்கு என்ன சொல்ல வேண்டும்” என்று கேட்டுள்ளார்; சாஸ்திரியார் அவரைப் பார்த்து “ஐவ ளை nடிவ ளாடிந bவைந டமைந னடிப bவைந; லடிர ளாடிரடன ளயல ளாடிந யீinஉh” என்றாராம்; இது போன்ற அனுபவங்கள் அவரைக் கூர்மைப் படுத்தி உள்ளன.  ஒருமுறை வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய சாஸ்திரியார் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்பற்று என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, அப்பேச்சின் சுருக்கத்தை ஒரு கட்டுரை யாகத் தரவேண்டுமெனப் பணித்தாராம்.  மாணவர்கள் பலர் எழுதிக் கொண்டு வந்தனர்; அதில் ஒரு கட்டுரை சிறப்பாக இருந்ததெனப் பாராட்டி ரூ. 50/- பரிசளித்து உள்ளார்; அக்கட்டுரையை எழுதியவர் ந. சுப்பிர மணியன்; சாஸ்திரியாரின் மேசையில் எப்போதும் பெரிய அளவிலான வெப்ஸ்டர் அகராதி இருக்குமாம்; அதனைக் கண்ட இவரும், பெரிய அளவிலான வேறொரு ஆங்கில அகராதியைத் தம் மேசையில் வைத்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டுள்ளார்;

1937-ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றதும் உரிய பணி கிடைக்காததால் கோவை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சில ஆண்டுகள் எழுத்தராகவும் பின், துணைப்பதிவாளராகவும், உயர்வுபெற்று, கோவை, பொள்ளாச்சி, ஓசூர், தாளவாடி, மங்களூர் போன்ற பகுதிகளில் 1956-வரை பணியாற்றியுள்ளார்; இளமை தொட்டு இவருக்குத் தமிழ்ப்பற்று இருந்தமையும், தந்தையின் புலமையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சூழலும் இவரது தமிழ்ப்பற்று மேலும் கிளைத்தது.  இதன்காரணமாகத் தாமே முயன்று படித்து 1948-ஆம் ஆண்டில் வித்துவான் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்; தமிழிலும் நற்புலமை இவருக்கு இருந்ததால் துணைப்பதிவாளராக இருந்துகொண்டே ஆசிரியர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் வித்துவான் தேர்வுக்காகத் தமிழைக் கற்பித்துள்ளார்; பல இடங்களில் பலருக்குக் கற்பித்ததால் இவரது புகழ் பரவியுள்ளது.

இவரது ஆற்றலை உணர்ந்த அப் போதைய கல்வியமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார், பதிவுத்துறையோடு இவரது புலமை அடங்கிவிடக் கூடாதென எண்ணி, அவரைத் தமிழ்க் கலைக் களஞ்சியத்துறையில் பணிபுரியப் பரிந்துரைத்துள்ளார்.  இந்தப் பரிந்துரையும், அவருடைய பேராசிரியரான பாஸ்கரனின் பரிந்துரையும் அப் பணியில் அவரை அமர்த்திற்று.  அங்கு 1951-ஜூன் முதல் 1953 ஜூன் வரை பணியாற்றி, அரசியல் வரலாறு, பண்பாடு, மொழி ஆகியன குறித்துக் கட்டுரைகள் வரைந்துள்ளார்; பிறதுறைகளைப் பற்றிப் பலரிடமிருந்து கட்டுரை பெற்றுக்கலைக் களஞ்சிய வெளியீட்டுக்குத் துணைபுரிந்துள்ளார்கள்.  ஸ25-6-1953 - அன்று சென்னை ஜெயின் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியர் பணியை ஏற்று 1959-வரை திறம்படப் பணியாற்றியுள்ளார்; தம் அரிய பணியாலும் உழைப்பாலும் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார்; கல்லூரி முதல்வர் நரசிம்ம அய்யங்கார் பெரிதும் விரும்பும் பேராசிரியராக இருந்துள்ளார்; இக்கல்லூரிக்கு ஒருபோது வருகை புரிந்த ஏ.எல்.முதலியாரும் இவரைப் பாராட்டியுள்ளார்; அக்காலத்தில் மாணவர்களுக்காக வரலாற்றுப் பெருமக்கள், தமிழ் நாட்டுத் தலை நகரங்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்காக இவர் ஆங்கிலத்தில் எழுதிய ஆஹசூ ஹசூனு ழஐளு றுடீசுடுனு என்ற நூல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது; இந்நூலைப் படித்து விட்டு சர்.சி.பி. இராமசாமி அய்யர் கடிதம் மூலம் இவரைப் பாராட்டியுள்ளார்; இக்கல்லூரியில் மாணவர்களுக்கு வரலாற்றைப் போதித்ததைத் தான் தம் வாழ்நாளின் பேரின்பமாக இருந்ததென அவர் நினைவுகூர்கிறார்.  இங்குப் பணியாற்றும் போது தான் முனைவர் பட்டத்துக்காக மூன்றாண்டு கடுமையாக ஈடுபட்டு ளுஹசூழுஹஆ ஞடீடுஐகூலு என்னும் புகழ்மிகு நூலை எழுதி 1958-இல் டாக்டர் பட்டம் பெற்றார்; இங்கிலாந்தில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் களான டெர்ரட், எ.எல்.பாஷம் ஆகியோர் இந் நூலைப் பெரிதும் பாராட்டியுள்ளனர்; இந்நூலே பிற்காலத்தில் தமிழில் சங்ககால வாழ்வியல் என்னும் பெயரில் என்.சி.பி.எச். நிறுவனம் வெளியிட்டு உள்ளது.  சங்ககாலத்தவரின் அரசியல், வாழ்வியல், பண்பாடு, கலை, கல்வி குறித்து விரிவாகவும் ஆழமாகவும் வெளிவந்த நூல் இந்நூலே ஆகும்; இந்நூலைக் காட்டிலும் சிறந்தவொரு நூல் இன்று வரை வெளிவராதது குறிப்பிடத்தக்கது; பேராசிரியர் வரலாற்றிலும், இலக்கியத்திலும் ஆழங்கால் பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும்.

இந்திய வரலாற்று ஆய்வுக்கழகம் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய நூல்களில் இந்திய அளவில் தெரிந்தெடுக்கப்பெற்ற முதல் இரு நூல்களில் ஒன்றாகச் சங்ககால வாழ்வியல் இடம் பெற்றது; இதுவொன்றே அந்நூலின் பெருமைக்குச் சான்றாகும்.  இந்தியாவில் மட்டுமேயன்றி இந்திய வரலாறு கற்பிக்கப்படும் உலகப் பல்கலைக் கழகங் களிலும் இந்நூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; 13-12-1959 அன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராகப் பணியேற்றுப் பின்னர் 1967- முதல் 1970 வரை துணைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.  இங்குப் பணியாற்றியபோது இந்திய வரலாறு என்னும் நூலை எழுதினார்; இந்திய வரலாற்றை இனிய தமிழில் அறிமுகம் செய்திருந்தது; இந்நூலைச் சக்தி கோவிந்தன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்; ஆங்கிலத்தில் இவர் எழுதிய பல்லவர்கால இலக்கியங்களுக்கு முற்பட்ட வரலாற்று அட்டவணை (ஐசூனுநுஓ டீகு ழஐளுகூடீசுஐஊஹடு ஆநுகூநுசுஐஹடு ஐசூ ஞசுநுஞஹடுடுஹஏஹசூ டுஐகூநுகூசுஹகூருசுநு) என்னும் நூல் ஓர் அரிய நூல்.  இந்நூல் இலக்கிய ஆராய்ச்சியாளர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஒரு கையேடாக விளங்குவது; இந்நூல் வெளிவந்ததும் நல்ல பாராட்டுதலைப் பெற்றது; இந்நூலின் சிறப்பை அறிந்த கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் வீடுதேடி வந்து பேராசிரியரைப் பாராட்டியுள்ளார்; இதனைப் போன்றே அவர் எழுதிய இந்து முக்காலி (ழஐசூனுரு கூசுஐஞடீனு) மிகமுக்கியமான நூல்; ஆய்வுச் செறிவுடைய இந்நூல்முதலில் 65 பக்கங்களுடன் தான் வெளிவந்துள்ளது; இந்நூல் பேரறிஞர் பலரைக் கவர்ந்ததுபோன்று கடுமையான தாக்கு தலுக்கும் உள்ளானது; பேராசிரியர் தம்மனத்தில் தோன்றியதை யாருக்கும் அஞ்சாது கூறுபவர்; யாருக்காகவும் பின்வாங்காத இயல்பினர்; போன போக்கிலேயே போகாமல் எதனையும் நுணுகி ஆய்பவர்; தம் கருத்தை மற்றவருக்காக மறைத்துக் கொள்வதைச் சிறிதும் விரும்பாதவர்; இத்திறனைத் தம் தந்தையார் வழிபெற்றவர் இவர்; இந்தப் பண் பால் இவருக்குச் சில தொல்லைகளும் ஏற்பட்டன.

இவருடைய தந்தையார் எத்துணை உறுதி வாய்ந்தவர் என்பதை ஒரு நிகழ்ச்சியால் அறியலாம்; காரைக்குடியில் அவர் வாழ்ந்தபோது பெருஞ் செல்வர் பற்பலருக்குத் தமிழ் கற்பித்துள்ளார்; அவர்கள் பலவாறு வலியுறுத்திப் பணம் கொடுக்க முயன்றும் அவர் அறவே மறுத்திருக்கிறார்.  அவரிடம் காரைக்குடியிலிருந்த வள்ளல் அழகப்ப செட்டியார், நாகப்ப செட்டியார், மேலக் கொரட்டியார் தேவ ராயன் செட்டியார் போன்றோர் தமிழிலக்கியம் பாடம் கேட்டுள்ளனர்.  இவர்கள் எல்லோரும் பணம் தர முயன்றபோது, தம் ஆசிரியர் பரிதிமாற் கலைஞர் “செந்தமிழைச் செம்பொற்காசுக்கு விற்க மாட்டேன்” என்று அடிக்கடி கூறியதை அவர் களுக்கு நினைவுறுத்தி அவர்கள் உதவியை மறுத்து உள்ளனர்.  இதனை இறுதிவரை அவர் கடைப் பிடித்துள்ளார்; அவர் எதையும் வெளிப்படை யாகப் பேசுபவர்; தந்தையைப் போன்றவரே நம் பேராசிரியரும், இந்து முக்காலி என்னும் நூலுக்குத் தமிழகத்தில் சிலர் மாறான போக்கில் விமர்சித் தாலும், மேனாட்டு, ஆய்வாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. 

இந்நூலை அவருடைய பேராசிரியர் பாஸ்கரனும், நீலகண்ட சாஸ்திரியும் பெரிதும் பாராட்டியுள்ளனர்; இந்நூல் அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்துள்ளது; இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டெரெட் சிறந்த நூலெனப் பாராட்டி அதற்கு ஓர் அணிந்துரையையும் அளித்து உள்ளார்.  வரலாறு குறித்துச் சில புதுமுடிவுகளைக் கொண்ட இந்நூல், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உரையாற்ற பேராசிரியருக்குப் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை மாவட்ட ஆட்சியாளராக இருந்த (1968) பத்ரிநாத் என்பவரும் அந்நூலைப் படித்துப் பாராட்டிய தோடு பின்னர் பேராசிரியருடன் நட்பையும் வளர்த்துக்கொண்டுள்ளார்.  இந்நூலைப் போன்ற சில புதுச் சிந்தனைகளையும் விளக்கங்களையும் கொண்ட நூல்கள் இன்னும் சில உள, அவை ஆநுஹசூஐசூழு டீகு ஐசூனுஐஹசூ ழஐளுகூடீசுலு, க்ஷசுஹழஆஐசூ ஐசூ கூழநு கூஹஆஐடு ஊடீருசூகூசுலு, நுளுளுஹலுளு ஐசூ ளுடீஊஐடீடுடீழுலு ஹசூனு ஞடீடுஐகூஐஊளு, கூஹஆஐடுஐஹசூ ழஐளுகூடீசுஐடீ ழுசுஹஞழலு ஆகியவையாகும்.

சென்னைப் பல்கலையில் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது, இவரது திறனை நன்கறிந்த மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தெ.பொ.மீ அப் பல்கலையில் வரலாற்றுத் துறைத் தலைவராகப் பணியேற்கக் கேட்டுள்ளார்; பேராசிரியரும் மகிழ்ந்து பொறுப்பேற்றுள்ளார்; பேராசிரியர் அங்கும் புது வரலாற்றைப் படைத்தார்; அக்காலத்தில் தமிழகப் பல்கலைக் கழகங்களில் தென்னிந்திய வரலாறு மட்டுமே பாடமாக இருந்தது; இவர்தான் முதன் முதலில் தமிழக வரலாற்றைப் பாடமாக வைத்தார்; அவ்வாறு வைத்ததோடு மட்டுமேயன்றித் தமிழக வரலாறு என்னும் நூலையும் முதன்முதலில் எழுதி யளித்துள்ளார்.  இதனைப் போன்றே இந்தியா விலேயே வரலாற்றுவரைவியலை (ழஐளுகூடீசுஐடீ ழுசுஹஞழலு) மதுரைப் பல்கலையில் பாடத்திட்டமாக அமைத்து அதற்கான முதல் நூலையும் இவரே படைத்து உள்ளார்.  இவரது இம்முயற்சிக்குப் பின்னரே இந்தியப் பல்கலைக்கழகங்கள் வரலாற்று வரை வியலைப் பாடமாக அமைத்தன.  மதுரையில் 1-7-70 முதல் 30-6-1976 வரை சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற ஒருதிங்களிலேயே வடகிழக்கு மாநிலமான ஷில்லாங்கில் பேராசிரியராகப் பணி புரியும் வாய்ப்பு ஏற்பட்டது; ஷில்லாங் பல்கலையின் முதல் துணை வேந்தரான டி. எஸ். தேவநேசன் (தமிழர்) இவரை விரும்பிப் பேராசிரியராக அமருமாறு கேட்டுள்ளார்; இவரும் அவரது அன்பான அழைப்பை ஏற்று அப்பல்கலையில் 1-7-1976 முதல் 31-7-79 வரை பணியாற்றியுள்ளார்; அங்குப் பல ஆய்வுப் பொழிவு களை நிகழ்த்தி வழிகாட்டியதோடு பல நல்ல நூல் களையும் எழுதியுள்ளார்; ழஐளுகூடீசுலு டீகு ளுடீருகூழ ஐசூனுஐஹ (3 ஏடிட) ஹசூ ஐசூகூசுடீனுருஊகூஐடீசூ கூடீ கூஹஆஐடு டுஐகூநுசுஹகூருசுநு, ழஐளுகூடீசுலு டீகு கூஹஆஐடுசூஹனுரு (ஏடிட ஐஐ) ஆகிய நூல்களையும், தமிழில் சங்ககால வாழ்வியல் (மொழியாக்கம்) வரலாற்று வரைவியல் என்னும் நூல்களையும் படைத்து உள்ளார்; இங்குப் பணியாற்றும் காலத்தில் ஐஊழசு-இல் இருமுறை ஆய்வாளராக (குநுடுடுடீறு) இருந்து உள்ளார்; ஷில்லாங்கில் பணியாற்றியபோது, மார்க்சிய சிந்தனையாளரும், வரலாற்று வல்லுநருமான நூருல் ஹாசனோடும் எ.எல்.பாசம் பேரன்றோடும் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது;

ஷில்லாங்கில் மூன்றாண்டுகள் பணியாற்றி மீண்டும் ஓய்வு பெற்று மதுரையில் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு 1983-ஆண்டுமுதல் உடுமலைப் பேட்டையில் வாழ்ந்து வருகிறார்.  ஓய்வு பெற்று விட்டாலும் ஓய்வறியாது உழைக்கிறார்; 97 வயதைக் கொண்ட இப்பெரியார் இப்போதும் தொன்னூல் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்; பழைய நூல்களைப் புதுக்கியும் விரித்தும் வெளியிடுவதோடு பல புதுநூல்களையும் படைத்துக்கொண்டிருக் கிறார்; சிறந்த நூல்களை மொழிபெயர்த்துக் கொண்டும் இருக்கிறார்; விக்டர் ஷியுகோ எழுதிய லெஸ்மிசிரபிளைத் தியாகம் என்ற பெயரிலும், டுமாஸ் எழுதிய கவுன்ட் ஆப் மான்டோ கிரிஸ்டை வஞ்சம் என்ற பெயரிலும் கார்லைல் எழுதிய ஒரு நூலைப் பிரெஞ்சுப் புரட்சி என்ற பெயரிலும் மொழிபெயர்த்துள்ளார்; மேலும் சேக்ஸ்பியரின் மெர்சன்ட் ஆப் வெனிஸ், கிங்லியர், ஒத்தல்லோ, ஆன்டோனி அண்டு கிளியோபாட்ரா, ரோமியோ அண்டு ஜுலியட், ஜுலியசீசர், மாக்பெத், ஹாம்லெட், ஆகிய நூல்களை முழுமையாக மொழிபெயர்த்து உள்ளார்; அனைத்தும் நூலாக வெளிவந்துள்ளன. 

உலகின் மிகச் சிறந்த தத்துவமேதையான பெர்ட் ராண்ட் ரசல் மீது இவர் மிகுந்த ஈடுபாடுடையவர்; ரசல் தொண்ணூறுவயதில் தம் வாழ்க்கை வரலாற்றை (மூன்று தொகுதிகள்) எழுதியது போன்றே இவரும் தொண்ணூறு வயதைக் கடந்தும் எழுதிக் குவித்துக் கொண்டே இருக்கிறார்; இக்கட்டுரையாளனின் விருப்பத்தை ஏற்று இப்போது ரசலின் ஒரு நூலை மொழிபெயர்த்து வருகிறார்; இவரும் தம் வாழ்க்கை வரலாற்றை என் வாழ்க்கை வரலாறு என்னும் பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார்; தமிழ்நாடு, கல்வியுலகம், தமிழுலகம் குறித்தும் தலைவர்கள், அறிஞர்கள் பேராசிரியர்கள், புலவர்கள், வரலாற்று ஆசிரியர்கள் குறித்தும் அரிய குறிப்புகளும், செய்தி களும் அடங்கிய அரிய நூலாக அந்நூல் விளங்கு கிறது; பேராசிரியரைப் புரிந்துகொள்ள அந்நூல் ஒரு கைவிளக்கு எனலாம்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை - 594

என்னுங் குறட்பாவுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் பேராசிரியர்.  முதுமை, நூறாண்டை நெருங்கினும் சிறிதும் சோர்வில்லாமல் ஊக்கத்தோடு உழைக் கிறார்; எழுந்து சரியாக நடமாட முடியவில்லை யெனினும் தவமுனிவரைப்போல் எழுத்துத் தவத்தை இடையீடில்லாமல் மேற்கொண்டு வருகிறார்; இந்த வயதிலும் சிந்தனைத் தடுமாற்றம் இல்லாமல் அவர்வேகமாக எழுதுவது பார்ப்போரை வியக்கச் செய்யும்; சமுதாயத்திற்கு ஏதாவது செய்து கொண்டு இருக்க வேண்டும் என்ற நல்லுணர்வே அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது; அவரது ஆராய்ச்சி முடிபுகளில் சிலவற்றை நம்மால் ஏற்க முடியாமல் இருக்கலாம்; ஆனால், அம்முடிவுக்காக அவர் கையாளும் முறையும், துணிவும் போற்றத்தக்கன; நிற்க அதற்குத் தக” என்பதற்கேற்ப வாழ்ந்து வருபவர்; தளர்ச்சியும் அயற்சியும் சிறிதும் அவரிடம் இல்லை; அன்றலர்ந்த தாமரை போன்றே அவர்முகம்

எப்போதும் காட்சி அளிக்கிறது; எளிமையும் தூய்மையும் கொண்ட இப்பெரியாரைத் தமிழகம் இன்னும் சரியாக உணரவில்லை; தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் புலமைபெற்று வரலாறு, அரசியல், ஆட்சியியல், மானிடவியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளில் எண்ணற்ற நூல்களைக் கற்று வர லாற்றைப் படைத்துக் கொண்டிருக்கும் இவரைச் சங்கத்தமிழ்த் தொடரால் “நூலறி புலவர்” என வாழ்த்தலாம் அன்றோ! வாழ்க பேராசிரியர் பல்லாண்டு; பல்லாண்டு.

Pin It