அம்மாவின் கண்ணீர் உப்பேறி கறைபடிந்த

எழுத்துக்களை முன் போல் காணமுடிவதில்லை

துணை எழுத்துக்களின் துணையில்லாமல்

நலம் பேணும் கடைசிதம்பியின் விசாரிப்புகளும்

விவாதங்களுடனும், விளக்கங்களுடனும்

நீளும் நண்பணின் மடல்களும் நின்று போயின

 விரலசைவில் சுலபமாய் "ஹலோ'க்கள்

தொலைபேசியின் கவர்ச்சி சிணுங்கலில்

தபால்காரரின் மணியோசை மெலிந்துபோனது

ஊர்கள் சுருங்கி, உலகம் சுருங்கி

ஒயர்களாய் நெளிந்தன

எண்களை சுழட்ட, சுழட்ட

சேமிப்பில் கரைந்தவை சில நூறு மட்டுமல்ல

ஞாபகங்களாய் வைத்திருக்க

காலவரிசைப்படி கடிதங்களும்தான்

- நெய்வேலி பாரதிக்குமார்

More articles by நெய்வேலி பாரதிக்குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.