பிரபஞ்சமெங்கும் குவிகின்றன
பூப்கொத்துகள்
தென்னங்கீற்றுகளின்
சலசலப்புக்கு இடையே
ரம்மியமாய் ஒலிக்கின்றன
வாழ்த்துகள்
உனது பயண இடைவெளியின்
நான்காம் பரிமாணத்தில்
உருப்பெற்றது நம்நட்பு
ஒவ்வொரு மனிதனுக்குமான
தேடல்
இசை, இலக்கியம், ஓவியம், காதல்
காமம், ஞானம், நட்பு, பந்தமென
முற்றுப்புள்ளி இடுகின்றன
காலடிச் சுவடுகளைத்
தொட்டுத் தொட்டுச் சொல்லும்
கடலலைகள்
உனக்கும் எனக்குமான தேடல்
காலத்துக்கும் வெளிக்கும்
இடையேயான நீட்சியில்...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.