கண்ணாடி மீன்கள் வாழ்கின்றன
சிரிப்பதில்லை
ஏன் சிரிப்பதில்லை என்ற உங்கள் கேள்வியை
அவை புரிந்துகொள்கின்றன
ஆனால் பதிலளிப்பதில்லை
ஒவ்வாத நீரைப்பற்றி
மீன்களைத் தவிர
யாரும் புரிந்துகொள்வதில்லை.
அதன் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும்
திகைப்பை
நீங்கள் இயல்பானது என்றால். . .
ஆனால் அவை மீன்கள்
வேறு என்னதான் செய்யும்?

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.