இலக்கு அடைந்தாயிற்றா,
சிரித்துக்கொள், நன்றாக - மழித்த
நிலையில் இன்னும்

அத்தனை அழகு, நீ
பயனற்ற அந்தப்
புருவங்கள்.

- போதி - கிஷூ

****

இந்தச் சரீரம் மாசுபடுத்தாது
அந்த மலர் சொரியும் மலைச்சாரலை
தோண்டாதே அங்கே குழி;

சமாதிச் சுடருக்கு என்ன
வேண்டிக் கிடக்கிறது?
அடுக்கிய கட்டைகள்,

போதும்.

மரணம் - செய்கியோகூ - செய்கியோ

****

மனிமில்லை புத்தா இல்லை
இருத்தலில்லை சிதறிக்
கிடப்பவை சூன்யத்தின் எலும்புகள்
இந்தப் பொன் சிங்கம்
ஏன் தேடிப் பிடிக்க வேண்டும்
அந்த நரிக்

குகையை?

- போதி - டீகன்

****

வரும்போது போகும்போது விட்டுச்
செல்வதில்லை காட்டு நீர்ப்பறவை

ஒரு சுவடு;
தேவையும் இல்லை. அதற்கு

ஒரு வழிகாட்டி

- டோஜன், 1200 - 53

****

எழுபத்தி இரண்டு ஆண்டுகள் அடக்கி
வைத்திருந்தேன் இந்த எருதை நன்றாக.

இன்று
மீண்டும் ‘ப்ளம்’ மரம் பூத்திருக்க
பனிப்பொழிவில் அலையவிட்டேன்.

அதை.
- ரோகுயோ 1384 - 1455

தமிழில் சி.மணி

Pin It