செவ்விசை என்றால் இப்போதெல்லாம்
மாண்டலின் உண்டு; கிதார் உண்டு.
சாக்ஸஃபோன் கூட உண்டு. இனி
எதுவெல்லாம் செவ்விசைக் கருவி
என்றாகுமோ தெரியாது. ஆனால்
இப்போதும் சரி அப்போதும் சரி
செவ்விசை என்றால், நீதான்
உண்டு, சாரங்கி.
வெயில் வரைந்த ஓவியத்தில் அங்கும்இங்கும் தாவுகிறது நிழற்பறவை.