mountain 350இன்றைக்கு நம் பிள்ளைகள் அனைவரும் படித்தவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் இந்நிலையை அடைவதற்கு நாட்டில் நடந்த போராட்டங்கள் எண்ணிறந்தன.

ஒரு கால கட்டத்தில் நம்மை எல்லாம் பள்ளியில் சேர்க்கவே மாட்டார்கள். அப்படியே பெரு முயற்சி செய்து சேர்ந்தாலும், உங்களுக்கெல்லாம் படிப்பு வராது, நீங்களெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்பார் ஆசிரியர்.

என்ன வேடிக்கை என்றால், நம் நாட்டிற்குள் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்துக் கொண்டு உள்ளே வந்தவர்கள்தாம், நம்மைப் பார்த்து ‘நீங்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்றனர்.

ஆப்ரிக்கக் கவிதை ஒன்று உண்டு. ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டது பற்றியது அது! அந்தக் கவிதை சொல்லும், “அவர்கள் உள்ளே வரும்போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது, எங்கள் கைகளில் நாடு இருந்தது.

பிறகு அவர்கள் கைகளுக்கு நாடு போய்விட்டது. எங்கள் கைகளுக்கு பைபிள் வந்துவிட்டது” என்று. நம் கதையும் அதுதான். “அவர்கள் உள்ளே வரும்போது அவர்கள் கைகளில் மாடு இருந்தது நம் கைகளில் நாடு இருந்தது. பிறகு நாடு அவர்கள் கைகளுக்குப் போய்விட்டது. மாடு நம் கைகளுக்கு வந்து விட்டது.

இந்நிலையை மாற்ற இம்மண்ணில் திராவிட இயக்கம் போராடியது. திராவிட இயக்கத்தால் பயன் பெற்று, படிப்பைப் பெற்ற பலர் இன்று திராவிட இயக்கத்தைக் குறி வைத்துத் தாக்கிக் கொண்டுள்ளனர்.

(02.02.2015 அன்று, சென்னை, ராணி சீதை அரங்கில், திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய சுபவீ உரையிலிருந்து)

Pin It