Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

கருஞ்சட்டைத் தமிழர்

subaveerapandian 350சென்னை பெரியார் திடலில் சனவரி 16,17,18 ஆகிய நாள்களில் நடைபெற்ற திராவிடர் திருநாள் தொடக்க விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசியது:

திராவிடர் கழகம் சார்பில், சென்னை, பெரியார் திடலில், மூன்று நாள்கள் திராவிடர் திருவிழா இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. திரும்பும் திசையெல்லாம் மக்கள் வெள்ளம். பறை முழக்கம், உரி அடித்தல், சிலம்பாட்டம், கானுயிர் கண்காட்சி எனத் தமிழர் பண்பாட்டின் அனைத்து அடையாளங்களோடும் அவ்விழா நடைபெறுகின்றது.

ஆனாலும் திராவிடர் என்ற சொல் இடம் பெற்றுவிட்டதால், அது தமிழர்க்கு எதிரானது என்றும். திராவிடக் கூச்சல் என்றும் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரான சொல்லே அன்றி, தென் இந்தியாவிற்கு மாற்றுச் சொல் அன்று எனப் பலமுறை விளக்கிய பின்னும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதற்குத்தான் கூச்சல் என்று பெயர்.

சென்ற ஆண்டு விழாவில், நெய்தல் நிலத்தின் தோற்றம் அங்கு உருவாக்க்கப்பட்டிருந்ததைப் போல, இவ்வாண்டு ஒரு முல்லை நிலத்தையே அங்கு பார்க்க முடிந்தது. முல்லை நில உயிரினங்கள், வனத்தின் அமைப்பு, காடு சார்ந்த பொருள்கள் என ஒரு தமிழ் மண்ணை இளைஞர்கள் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருந்தனர். இவற்றை எல்லாம் பாராட்ட மனம் இல்லையானாலும், இழிவு படுத்தாமலாவது இருக்கச் தமிழ்த் தேசியர்கள் சிலர் கற்றுக் கொள்ள வேண்டும்.

திராவிடத்தை எதிர்த்துப் பார்ப்பனர்களும், தமிழ்த் தேசியர் எனத் தம்மை அழைத்துக் கொள்வோர் சிலரும் வரிந்து கட்டி நிற்கின்றனர். இன்னொரு பக்கம், கருத்துரிமையை மறுக்கும் வன்முறையாளர்களின் கை ஓங்கியுள்ளது. பெருமாள் முருகனைத் தொடர்ந்து, துரை குணா சாதியவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். சாதி, மத வெறியர்களின் ஆதிக்கப் போக்கு மீண்டும் தலை தூக்குகிறது.

இந்நிலையில் கருஞ்சட்டைப் படையினர் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய மிகப் பெரும் தேவை எழுந்துள்ளது. ஒரே கட்சியாக இணைய வேண்டும் என்பதில்லை. திராவிட இயக்கத்தினரின் பெரும் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது.

ஆசிரியர் ஐயா வீரமணி, அண்ணன் கொளத்தூர் மணி, நண்பர் கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் இக்கருத்தினை ஏற்றிட வேண்டும் என்பது திராவிட உணர்வுள்ள தமிழர்கள் அனைவரின் விருப்பமுமாகும்!

ஏற்கனவே, அனைத்துத் திராவிடர் இயக்கங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து இளம் திராவிடர் இயக்கம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது நமக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது.

இவ்வாண்டு, நாம் முனைந்து பணியாற்றிட வேண்டிய ஆண்டு. சமூக மாற்றத்திற்குத் திராவிடர் கழகங்களும், அரசியல் எழுச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகமும் களத்தில் இறங்கிப் பணியாற்றவில்லை என்றால், காவியும், இருளும் நம் நாட்டைச் சூழ்ந்து கொள்ளும்!

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 gurunathan 2015-03-24 19:28
அடடே!
இத்தனை காலம் திமுக அப்படி என்ன அரசியல் எழுச்சி செய்தது என்பதை சுபவீ விளக்கினால் நலம்.
மோடியோடு கூட்டணி அமைக்க திமுக துடித்தபோது சுபவீ அவர்கள் மயக்கத்தில் இருந்தார் போல.
எப்படியாவ்து திமுகவை ஆட்சிக்கட்டிலில ் ஏற்ற துடிக்கும் சுபவீக்கு வாழ்த்துககள்.
ஆனால் அதில் சமூகநீதி, காவி எதிர்ப்பு இவற்றையெல்லாம் சேர்த்துக்கொள்வ து காவிகளின் பிரச்சாரத்தையே வலுப்படுத்தும். .
Report to administrator
0 #2 gurunathan 2015-03-24 19:43
சுபவீ அவர்களே,
அரசியல் எழுச்சிக்கு திமுகதான் வேண்டுமா?
புதிய தமிழகமோ, விடுதலை சிறுத்தைகளோ அரசியல் எழுச்சி பெற வேண்டாமா??
Report to administrator

Add comment


Security code
Refresh