தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்று பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை வற்புறுத்தவும், அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருக்கும் தமிழர்களுக்கு மறு வாழ்வு அளித்து அனைத்து உரிமைகளையும் வழங்க வழி காணவும், மற்ற நாடுகளுடன இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலி தாவை இதுநாள்வரை தமிழர் விரோதியாகக் கருதி விமர்சித்தும், அர்ச்சித்தும் வந்த தமிழ் அமைப்புகளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது இந்தத் தீர்மானம். இதனை வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் என்று வர்ணிக்கிறார் கள் அவர்கள்.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஜெயலலிதா, “தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல; யாரையும் தாழ்த்துவதல்ல என் றார் பேரறிஞர் அண்ணா. இப்ப டிப்பட்ட உயரிய எண்ணம் கொண்ட தமிழர்கள் உலகமெங் கும் பரவி இருக்கிறார்கள்.

மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக் கும், தமிழ் நாட்டுத் தமிழர்களுக் கும் இடையே தொப்புள் கொடி உறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று...'' என்று அட்ட காசமாக அறிமுக உரை நிகழ்த்தி யதை புளங்காகிதத்தோடு சொல் கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட ராஜபக்ஷேவுக்கு எதிராக இந்தத் தீர்மானத்தின் போது பேசிய துரைமுருகனும் தீர்மானத்தை வரவேற்பதாக கூறி னார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் திமுகவைத் தாக்கிப் பேசியதற்கு பதில் சொல்ல வாய்ப்பு தரப்படாததால் ஒட்டு மொத்த திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இத னால் இலங்கை அரசுக்கு எதி ரான தீர்மானத் தின்போது திமுக வெளிநடப்பு செய்தது என்கிற செய்திதான் மக்கள் மத்தியில் பதிவாகிப் போனது.

தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் ராஜ பக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்றெல்லாம் குரலுயர்த்தி வந்த நிலையில், ஒருபடி மேலே போய் இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வர வேண் டும் எனப் பேசி - தான் மேற் கொள்வது ஆக்கப்பூர்வமான நட வடிக்கை என்பதை வெளிப்படுத் தியுள்ளார் ஜெயலலிதா.

அதற்கு வியாக்கியானம் தந்தி ருக்கும் அவர், “இலங்கைத் தமி ழர்களுக்கு சிங்களவர்களோடு அனைத்து உரிமைகளையும், குடி யுரிமைகளையும் வழங்க வேண் டும் என்று இந்தியா சொன்னா லும், யார் சொன்னா லும் இலங்கை மதிப்பதில்லை. அத னால் இலங்கையை வழிக்கு கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைதான். இத் தடையைக் கொண்டு வந்தால் குறுகிய காலத்திலேயே நாம் சொல்வதைக் கேட்கும் நிர்ப்பந் தம் இலங்கை அரசுக்கு ஏற்ப டும்...'' என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் இதுபோன்ற பேச்சுகள் உலகத் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதே சமயம், ஜெயலலி தாவின் தமிழர் ஆதரவுப் பேச்சு கள் இயல்பாகவே திமுக மீது உல கத் தமிழர்களுக்கு வெறுப்புணர் வையும், கோபத்தையும் ஏற்படுத் தியுள்ளது. 5 ஆண்டுகால திமுக அரசு, தமிழர் பிரச்சினையில் அக் கறை காட்டாமல் இருந்ததற் கான கைமாறை இப்போது பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினையை மிகச் சரியான முறையில் கையா ண்டிருக்கிறார் ஜெயலலிதா என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவை ஒட்டுமொத்த தமிழர்களுக்கு விரோதமானவ ராக பலர் நினைத்துக் கொண் டிருந்தனர். ஆனால் அவர் தமி ழீழ பிரச்சினையில் நடுநிலையான நேரான பார்வையைக் கொண்டி ருக்கிறார் என்பதை சட்டமன்றத் தீர்மானம் தெளிவாக்குகிறது.

தமிழீழப் பிரச்சினையில், 1980 களில் ஜனநாயப் போராட்ட வழிமுறைகள் திசைமாறி ஆயுதப் போராட்டம் என்கிற விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் தலை தூக்கி - அது சகோதரர்களுக்கி டையில் படுகொலைகளை அரங் கேற்றக் காரணமாக இருந்ததை யும், இதன் உச்சகட்டமாக இந் திய நாட்டின் இறையாண்மைக் கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் முன் னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை அமைந்ததையும், இதனையடுத்து விடுதலைப் புலி களுக்கு இருந்த அனுதாபம் கடு மையான எதிர்ப்பாக மாறியதை யும் எடுத்துக் காட்டியுள்ள ஜெய லலிதா, புலிகளின் தடைக்கு தனது வற்புறுத்தலே காரணம் என்பதையும் கூறி விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பது வேறு, ஈழத் தமிழர்களை ஆதரிப் பது என்பது வேறு என்பதை இனம் பிரித்துக் காட்டியிருக்கிறார்.

திமுக என்பது தமிழர்களுக்கான கட்சி, தமிழர் நலன்களுக்காக செயல்படுகின்ற கட்சி என்கிற மாயை ஜெயலலிதாவின் தீர்மானத்தால் தகர்த்தெறியப்பட் டிருக்கிறது. இதுபோன்ற கருத்துகள்தான் உலகத் தமிழர் மத்தியில் இன்று பேசப்படுகிறது.

- அபு

ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி தந்த தீர்மானம்

இலங்கை மீதான பொருளாதாரத் தடை குறித்த தமிழக அரசின் தீர்மானம் பரபரப்புச் செய்தியாக வெளியானதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி அவசரமாக ஒரு குழுவை ராஜபக்ஷேவைச் சந்தித்துப் பேச இலங்கைக்கு அனுப்பியிருந்தது மத்திய அரசு.

இக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புத்துறைஅதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் ராஜபக்ஷேவைச் சந்தித்து, தமிழக மீனவர் மீதான தாக்குதல், ஈழத் தமிழர்கள் மறு குடியமர்த்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதித்துள்ளனர். கடந்த காலங்களில் இப்படி பலமுறை மத்திய அரசு நியமித்த குழுவினர் ராஜ பக்ஷேவைச் சந்தித்திருக்கின்றனர். ஆயினும் ராஜபக்ஷேவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

பொருளாதாரத் தடை குறித்த தமிழக அரசின் தீர்மானம் ராஜபக்ஷேவை சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறது. பொருளாதாரத் தடை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புக்கவெல்ல, “இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறான அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டிருக் கும் வேளையில் இவற்றில் ஏற்படக் கூடிய முரண்பாடுகளை இந்திய மத்திய அர சாங்கத்துடன்தான் இலங்கை கையாளுமே தவிர மாநில அரசாங்கங்களுடன் அல்ல...'' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தீர்மானம் ராஜபக்ஷேவுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

Pin It