இந்தியாவின் தலைநகரில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் என்று கூறி பாபா ராம்தேவ் நடத்திய நாடகத்தை பாதியிலேயே முடித்து ஹரித்துவாருக்கு அனுப்பியது டெல்லி போலீஸ்.

யோகா பயிற்சி நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டு விட்டு, சட்டத்திற்கு புறம்பாக பட்டினிப் போராட்டம் என்று பல்டி அடித்த ராம்தேவை போலிஸ் அகற்றியதை - இரண்டாவது எமர்ஜென்ஸி, இரண்டாவது ஜாலியன் வாலாபாக் என்றெல்லாம் கொந்தளிக்கின்றன இந்துத்துவா அமைப்புகள்.

இந்துத்துவா சிந்தனையில் தோய்ந்த வட நாட்டுக் காட்சி ஊடகங்களும், ராம் தேவை போலீஸ் அகற்றியதை பில்டப் செய்து செய்தி வெளியிட்டு இந்துத்துவா வின் பிரச்சாரத்திற்கு வலுசேர்த்து வருகின் றன.

காவல்துறையில் கொடுத்த வாக்குறுதிக்கு மாற்ற மாக, நாட் டின் சட்டத் திற்கு எதிராக செயல்பட்ட ராம்தேவை ஹீரோவாக காட்டத் துடிக்கின்றன இவ்வூடகங்கள்.

சட்டத்தை மதிக்காமல் - சட்டத்திற்கு சவால் விட்ட ராம்தேவ் தேசபக்தி மிகுந்தவராம்; காந்தியவாதியாம். சட்டத்தை மீறிய அவரை காவல்துறை அப்புறப்படுத்தி னால் அது எமர்ஜென்ஸியாம்; ஜாலியன் வாலாபாக் காம்.

ராம்தேவை தேசியவாதியாக காட்ட இந்துத்துவாவும், அதன் ஆதரவு ஊடகங்களும் பெரு முயற்சி எடுத்து வந்த நிலையில் நான் தேசியவாதியல்ல... பயங்கர வாதி என்று வாக்குமூலம் அளித் திருக்கிறார் பாபா ராம்தேவ்.

டெல்லி போலீசாரால் ஹரித் துவாருக்கு பேக்அப் செய்யப் பட்ட ராம்தேவ் அங்குள்ள அவ ரது ஆசிரமத்திலிருந்து கொண்டே தனது உண்ணாவிரத நாடகத்தை மீண்டும் தொடங்கி னார். இந்த உண்ணா விரதப் பந்தலிலிருந்து தான் அவர் காவி கட்டிய பயங்கரவாதியாக வெளிப்பட்டிருக்கிறார்.

“டெல்லியில் நாம் ஏமாந்து விட்டோம். இனி ஊழலுக்கு எதி ராக 11 ஆயிரம் பேர் கொண்ட புரட்சிப் படை ஒன்றை அமைத்து - மாவட்டந்தோறும் 20 பேரை அந்தப் படையில் சேர்ப்போம். அவர்களுக்கு யோகா, வேதம் மற் றும் தற்காப்புப் பயிற்சி அளிக்கப் பட்டு, ஆயுதங்களும் வழங்கப் படும்...'' என்று நாட்டின் இறை யாண்மைக்கும், தேச நலனுக்கும் எதிராகப் பேசியிருக்கிறார்.

ராம்தேவை ஆர்.எஸ்.எஸ். பின் னாலிருந்து இயக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் சொல்லி வந்ததை மறைக்க முயன்று தோற்றிருக்கி றார் ராம்தேவ்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நேரடிப் பிரதிநிதியாகத்தான் ராம்தேவ் செயல்படுகிறார் என்பதற்கு அவ ரது பயங்கரவாதப் பேச்சே சான் றாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட் டத்தைத்தான் அவர் முன் வைத் துப் பேசியுள்ளார் என்பது ஆர். எஸ்.எஸ்.ûஸ குறைந்தபட்சம் அறிந்தவர்களுக்கும் தெரியும்.

ஊழலை ஒழிக்க வேதம் எதற்கு? தற்காப்புக் கலைகள் எதற்கு? யோகா எதற்கு? ஆயு தங்கள்தான் எதற்கு?

இங்கேதான் ராம்தேவின் முகமூடி கிழந்து ஆர்எஸ்எஸ்ஸின் பயங்கரவாதக் கோர முகம் வெளிப்படுகிறது. ஆர்எஸ்எஸ் தனது தொண்டர்களுக்குத் தரும் பயிற்சிதான் யோகாவும், வேத மும், ஷாகா என்கிற குண்டாந் தடி பயிற்சியும், ஆயுதப் பயிற்சி யும்!

ஆர்எஸ்எஸ் என்கிற நாக்பூர் நாசகார அமைப்பின் பல்வேறு கிளைகள் பல வடிவங்களிலி இயங்கி இந்திய இறையாண்மை யைக் கெடுத்து - இந்தியாவை காவி நாடாக மாற்றத் துடித்துக் கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட கிளை அமைப்புகளில் ஒன்றுதான் பாபா ராம்தேவ் நடத்தி வரும் பசுவதைக்கு எதி ரான இயக்கம்.

மாட்டிறைச்சி உண்ணும் பிற் படுத்தப்பட்ட ஏழை, எளிய மக் களை தூய்மையற்றவர்கள் என்று கூறியும், மாட்டிறைச்சி உண்ணு கின்ற இஸ்லாமியர்களுக்கு எதி ராக பகையுணர்வையும் தூண்டி விட “பாரத ஸ்வாபிமான் யாத்ரா'' என்ற பெயரில் யோகாப் பயிற்சி என்ற போர்வையில் ராம்தேவ் கடந்த காலங்களில் யாத்திரை மேற்கொண்டபோதே சமூக ஆர்வலர்களும், ஜனநாயக சக்திகளும் இவரைக் குறித்து எச்சரிக்கை செய்தன.

ஆனால் மத்திய அரசு இவரை அடையாளங்காணத் தவறி விட் டது. இப்போது ராம்தேவே தன்னை இந்துத்துவ பயங்கரவா தியாக வெளிப்படுத்திக் கொண் டிருக்கிறார்.

அதே சமயம் தும்பை விட்டு வாலைப் பிடிப்பதையே வழக்க மாகக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர், ராம்தேவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டுகிறார்.

“கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் புத்தூரில் அகில பார திய பிரதிநிதி சபாவின் கூட்டம் நடைபெற்றது. இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்மட்டக் குழுவா கும். இக்கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக எந்த அமைப்பு போராட் டம் நடத்தினாலும் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அது மட்டுமின்றி, கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஊழல் எதிர்ப்பு முன்னணி ஒன்றை ஆர்எஸ்எஸ் அறிவித்தது. அதில் ஒரு புரவல ராக பாபா ராம்தேவ் இடம் பெற்றுள்ளனர். இதிலிருந்தே ராம்தேவின் பின்னணியில் ஆர் எஸ்எஸ் இருப்பதை அறிந்து கொள்ளலாம்...'' என்கிறார் உள் துறை அமைச்சர்.

ஆக, ஆர்எஸ்எஸ் என்ற பயங் கரவாத அமைப்புதான் ஊழல் எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பை பின்புலமாக வைத்து ராம்தேவை ஆன்மீகவாதியாக, தேசியவாதியாக, தேசப்பற்று மிக்க உத்தமராக களத்தில் இறக்கி விட்டுள்ளது என்பதை மத்திய அமைச்சர் பட்டவர்த்தன மாக்கியுள்ளார்.

ஆயினும் உளவுத்துறை தந்த மேற்கண்ட தகவலின் அடிப்படையில் அப்போதே ராம்தேவின் நடவடிக்கைகளை கண்காணித்தி ருக்க வேண்டும்.

அப்போதெல்லாம் விட்டு விட்டு, மத்திய காங்கிரஸ் அர சுக்கு ராம்தேவ் குடைச்சல் கொடுத்தவுடன், இப்பொழுது அவரை அடக்கத் திணறுகிறது. இதைத்தான் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மத்திய அரசு என விமர்சிக்கிறோம்.

எது எப்படியோ, ராம்தேவ் ஆர்எஸ்எஸ்ஸின் காவி ஏஜெண்ட் என்பதை இப்பொழுது தெளிவாக மத்திய அரசு உணர்ந்து கொண் டிருக்கிறது. அதனால் ராம்தே வின் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஆயுதப் போராட்ட பேச்சை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் - அவரையும், யோகா வகுப்புகள் என்ற பெயரில் அவர் செயல்படுத்தி வரும் ஆர்எஸ்எஸ்ஸின் செயல் திட்டங் களையும் முடக்க முழு மூச்சில் தயாராக வேண்டும்.

மதவாதமும், வன்முறையும் தான், பாகிஸ்தானை விட இந்தி யாவை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் வைத்திருக்கிறது என்று சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் என் கிற சர்வதேச அமைப்பின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த மதவாதத்திற்கும், வன்மு றைக்கும் ஊற்றுக் கண் ஆர்எஸ் எஸ் என்ற பயங்கரவாத அமைப் புதான் என்பதை விளங்கி அந்த அமைப்பை தடை செய்தால் தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கு மத்திய அரசு தயாரா?

- ஃபைஸல்

சட்டம் நிமிர்ந்து நிர்க்குமா?

ஆயுதப் படையை அமைப்பேன் என்று பயங்கரவாதி ராம்தேவ் அறிவித்தவுடன், காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆயுதப் படை அமைப்பதாக இருந்தால் சட்டம் தனது கடமையை செய் யும் என்று உள்துறை மந்திரி ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார். இது தேச விரோத நடவடிக்கை, மத்திய அரசு நடவடிக்கை எங்கே கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக படை அமைப்பது குறித்த விஷயத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துவிடுமோ என பயந்த யோகா, தான் அமைக்கப்போகும் படை குறித்து ஒரு பல்டி விளக்கம் அளித் துள்ளார். "தீவிரவாதிகளையோ, நக்சலைட்டுகளையோ, மாவோயிஸ்டுகளையோ நான் உருவாக்கப்போவதில்லை. நாட்டின் நலன்களை பாதுகாக்கும் தேசியவாத படையை மட்டுமே நான் அமைக்கப்போகிறேன். அது, சுய பாதுகாப்புக்கான படை. எங்களுடைய பெண்களை யாரும் அவமானப்படுத்தினால், அவர்களே சுயமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டாமா? டெல்லியில் நடந்தது போல சம்பவம் மீண்டும் நடந்தால் எங்களுடைய ஆண்கள் பாதுகாத்து கொள்ள வேண்டாமா?

நான் கூறிய வார்த்தைகளை சரியாக அர்த்தம் கொள்ள வேண்டும். நான் என்ன கூறினேன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுயமாக பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன். சாஸ்திரம் என்றால் அறிவு என்று பொருள். சஸ்திரம் என்றால் சுயபாதுகாப்பு என்று பொருள். இந்த அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்...'' என்று விளக்கம் என்ற பெயரில் பயத்தில் உளறியுள்ளார்.

யோகாவின் வாதப்படி பார்த்தாலும் இவர் நாட்டின் நலன்களை பாதுகாக்கும் தேசியவாத படையை அமைக்கப் போகிறேன் என்பது அப்பட்டமான பொய்யாகும். ஏனெனில் நாட்டு நலன்களை பாதுகாக்கத்தான் ராணுவமும்-காவலர்களும் லட்சக்கணக்கில் உள்ளபோது இவர் படை திரட்ட வேண்டிய அவசியமென்ன? மேலும் இவரது நோக்கம் அதுவல்ல என்பது அடுத்த வரியிலேயே புலப்பட்டு விடு கிறது. அதாவது டெல்லியில் இவரது அரசியல் உண்ணாவிரதத்தை அதிரடியாக போலீசார் அப்புறப்படுத்தியது போன்று, இவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் போலீசார் குறுக்கிட்டால் அவர்களோடு மோதுவதற்குத்தான் படை திரட்டுகிறார் என்பது அவரது சுய பாதுகாப்பு' வார்த்தையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இவ்வாறு சுய பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஷாகா' நடத்து வதில் கைதேர்ந்தவர்கள் சங்பரிவார்கள் என்பதும், அதில் பயிற்சி பெற்றவர்களால் தான் பாபர் மஸ்ஜித் இடிப்பு மற்றும் குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலைகள் நடந்தேறின என்பதையும் நாட்டு மக்கள் மறந்து விடவில்லை. யோகாவின் வாதப்படி ஒவ்வொரு சாராரும் தற்காப்புப்படை வைத்துக் கொள்ள கிளம்பினால் நாடு என்னாகும் என்பதை சிந்திக்க வேண்டும். தற்காப்புக்காக அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்தாலே லபக்' என்று பாய்ந்து பிடித்து உள்ளே போடும் சட்டம், இந்த யோகா சாமி யாரின் ஆயுதபடை விஷயத்தில் உஷாராக இருப்பதோடு, கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயங்கக் கூடாது. சட்டம் நிமிர்ந்து நிற்குமா? சாமியாருக்கு வளைந்து கொடுக்குமா?

-முகவை அப்பாஸ்

Pin It