03.01.2026 அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு TAPS அறிவித்தார் முதல்வர். 01.04.2003 இல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் CPS என்ற, ஓய்வூதியமே இல்லாத, ஒரு திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடைமுறைப்படுத்தினார். அன்றைய காலகட்டத்தில் இதனை எதிர்த்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, ஜாக்டோ ஜியோ போராட்டங்களை எஸ்மா, டெஸ்மா, பணி நீக்கம் போன்ற அடக்குமுறைகளைக் கொண்டு முடக்கியது.

மீண்டும் 2017 இல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் களம் கண்டபோது அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் ஓய்வூதியம் வழங்க 100% சாத்தியம் இல்லை என்றும், வெறும் கண் துடைப்பிற்கு ஓய்வூதிய குழுக்களை அமைத்து அக்குழு அறிக்கையே இதுவரை சமர்ப்பிக்காமல் விட்டது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கை, ஓய்வூதியம் கானல் நீராய் போனது.

 இன்றைய முதல்வர் அவர்கள் மூத்த IAS அதிகாரி உயர்திரு ககன் தீப்சிங் பேடி தலைமையில் ஓய்வூதிய குழு அமைத்து அது, ஆறு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பித்தது. 2026 புதிய ஆண்டின் தொடக்கத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆவண செய்து அதனை நடைமுறைப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்திட்டத்தில் 50 சதவீத ஓய்வூதியம், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளதை வரவேற்கிறோம். ஊதியத்தில் ஊழியரின் பங்களிப்பு 10% ஓய்வு பெறும் போது திரும்பப் பெறும் வகையில் மாற்றத்தை கொண்டு வருவார் எனவும் நம்பிக்கை இருக்கிறது.

மேலும் தமிழ்நாடு ஓய்வூதிய குழு தலைவர் உயர்திரு ககன்தீப் சிங்பேடி IAS அவர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தோம். தமிழ்நாடு ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் கூட அறிவிக்கலாம் என்ற கருத்தையும் முன்மொழிந்தோம்.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

என்பதற்கு சான்றாக வையகமே போற்றும் தமிழகத்தில் ஆட்சியை சிறப்புற செய்து வரும் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம்.

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நலனில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் அக்கரை காட்டும் என்பதற்கு சான்றுகள் பல உண்டு,

முழு ஓய்வூதியம் பெற 33 வயதை 30 வயதாகக் குறைத்தது,

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியது,

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டங்களின் போது கொண்டுவரப்பட்ட டெஸ்மா (TESMA) மற்றும் எஸ்மா (ESMA) சட்டங்கள் நீக்கப்பட்டு, பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கழக ஆட்சியில் வழங்கப்பட்டன.

பத்தாண்டுகள் முடித்தால் தேர்வு நிலையும் (Selection Grade),

 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் (Special Grade) வழங்கி ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.

பதவி உயர்வு இன்றி 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஒரு கூடுதல் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை, கருணைக்கொடை, 15 நாள் ஈட்டிய விடுப்பு அரசுக்கு சரண்டர் செய்து காசாக்கும் திட்டம் மேற்கண்டவை அனைத்தும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடுதான்.

உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வுகள், பண்டிகைக் கால முன்பணத்திற்கு வட்டியை ரத்து செய்தது.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.

36 மாதங்கள் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்ததை 12 மாதங்களாகவும் பின்னர் 10 மாதங்கள் அல்லது கடைசி மாதத்தில் பெறும் சம்பளத்தில் 50% ஓய்வூதியம் என்பதைக் கொண்டு வந்தது,

45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் இருந்த காலம் வரை ஊதியம் வழங்க நிரந்தரம் செய்யப்பட்டது.

நகர ஈட்டுபடி (City allowance), மலைப்பகுதியில் பணிபுரிபவர்களுக்கு குளிர்காலப்படியும் , மலைப்படியும் வழங்கப்பட்டது.

6 வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களைப் போல ஓய்வூதிய சலுகைகளை வழங்கியவர் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு எண்ணிலடங்கா சலுகைகளையும், திட்டங்களையும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து வழங்கி அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இருக்கிறது. தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழக அரசின் தற்போதைய முதல்வர் TAPS தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவித்து சிறப்பு சேர்த்துள்ளார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு SCA பெஸ்ட் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பேராசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- இல.ரவி, மாநிலத் தலைவர், பெஸ்ட் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பேராசிரியர்கள் கூட்டமைப்பு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.