1891 ஏப்ரல் 14 அன்று மத்திய பிரதேச மாநிலத்தின், போருக்கான இராணுவத் தலைமையகம் உள்ள மாவ் என்ற ஊரில் தாயார் பீமாபாய், தந்தை சுபேதா மேஜர் ராம்ஜீ சக்பால் ஆகியோரின் 14ஆம் மகனாகப் பிறந்தார் அம்பேத்கர்.

ஈடு இனையற்ற சிந்தனையாளர், அறிஞர், சமூக நீதிப் போராளி, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பகுத்தறிவாளர் அவர்.

அவரின் புகழை அழிப்பதற்கென்றே, இன்று பா.ஜ.க., இந்து பரிவாரங்கள் அவரைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

 உத்தர பிரதேசத்தில் காவி வண்ணம் பூசுகிறார்கள் அம்பேத்கருக்கு. பிரதமர் மோடியோ விழுந்துவிழுந்து உருகுகிறார் அம்பேத்கர் பெயரைச் சொல்லி.

அவரை இந்துவாகக் காட்டும் நாடகம் இது.

ஆனால் அவரோ சாகும் போது கூட இந்துவாகச் சாகாமல், பவுத்தராகவே மறைந்தார்.

இந்து மதத்தைக் கடைசி வரை எதிர்க்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.

1956இல் அக்டோபர் 14ஆம் நாள் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்.

அன்று காலை 9.30 மணிக்கு குசிநாராவில் இருந்து வந்த துறவி பிக்கு மாகாஸ்தவிர் சந்திரமணி முன்னிலையில், இந்துத்துவத்திற்கு எதிராக 22 உறுதி மொழிகளைச் சொல்லி பவுத்தத்தை ஏற்றுக்கொண்டார் நாகபுரியில்.

அப்போது அவருடன் பவுத்தம் ஏற்ற மக்கள் தொகையினர் ஏறத்தாழ 5 லட்சம் பேர்.

1956 டிசம்பர் 6ஆம் நாள் டெல்லி அலிப்பூர் சாலையில் உள்ள அவரது வீட்டில், உறங்கும் போது மரணத்தைத் தழுவினார் டாக்டர் அம்பேத்கர்.

அம்பேத்கரை நெஞ்சில் ஏந்துவோம்! அவரின் வழி நடப்போம்.

Pin It