maniyarasan karuchettaithamilar feb14திராவிட இயக்கத்தால்தான் தமிழ்த்தேசியம் வளரவில்லை என்றும், தமிழ் மொழி உணர்வு பின்னடைந்ததற்குப் பெரியார்தான் காரணம் என்றும், சின்னஞ்சிறு அமைப்புகள் பல திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

அவற்றுள் ஒன்றுக்குத் தலைவரான தோழர் பெ.மணியரசன், அதனையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

திராவிட இயக்கத்தையும், பெரியாரையும் தாக்காமல் அவரால் எழுதவோ, பேசவோ இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்று நண்பர்கள் நம்மிடம் கேட்கின்றனர்.

எதிரி அல்லாதவர்களை எதிரிகளாகக் காட்டுவதன் மூலம், உண்மையான எதிரியைத் தப்பிக்க விடுவதுதான் அதன் நோக்கமாக இருக்க முடியும். திராவிட எதிர்ப்பு மறைமுகமான பார்ப்பனிய ஆதரவே.

இவ்வாறு உண்மைப் பகை இலக்கின் மீது நம் கவனம் சென்றுவிடாமல், வேறு திசையில் அதனைத் திருப்பிவிடுவது குறித்து, உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்கி தன்னுடைய ‘அமெரிக்காவிலே’ என்னும் நூலில் கீழ்க்காணுமாறு எழுதியிருக்கிறார்.

“நீருக்கு மேலே ஏராளமான மரத்தூள்களைத் தூவிவிட்டால், நீருக்கு அடியிலே மிதந்துபோய்க் கொண்டிருக்கிற பெரிய கட்டை கண்ணுக்குத் தெரியாது”

 

Pin It