ஈழத்தமிழர் இன்னலைத் துடைக்கத் தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கப் பட்ட டெசோ அமைப்பு, தொடர்ந்தும் தொய்வில்லாமலும் தன் பணிகளை ஆற்றிவருகிறது. இந்த மார்ச் மாதத்தின் முதல் பாதியில் மட்டுமே அடுத்தடுத்து பல தொடர் நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.

மார்ச் 5ஆம் நாள் காலையில், தளபதி ஸ்டாலின் தலைமையில், டெசோ உறுப்பி னர்களும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் கலந்து கொண்ட இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. அதேநாள் அதேநேரம் தில்லி நாடாளுமன்றத்திற்கு வெளியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈழ ஆதரவு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மார்ச் 7 அன்று தில்லியில் உள்ள அரசமைப்புச் சட்ட அரங்கில் அனைத்துக் கட்சிகளின் கருத்தரங்கை டெசோ நடத்தியது. அன்று பகல் நாடாளுமன் றத்தில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு கொண்டு வந்த ஈழ ஆதரவு தீர்மானத்தையயாட்டி, நான்கு மணிநேரம் விவாதம் நடை பெற்றது. பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்தியாவின் பெரிய கட்சிகள் அனைத்தையும் ஈழத்திற்கு ஆதரவாக உரையாற்ற வைத்த பெருமை டெசோவையே சாறும்.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி, மார்ச் 12 அன்று தமிழகம் முழுவதிலும் பொது வேலை நிறுத்தத்தையும் டெசோ நடத்தியது. இவ்வாறாக ஈழச் சிக்கலை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவதையும், அதனை வெகுமக்களிடம் கொண்டு செல்வதையும் டெசோ தன் பணியாகக் கொண்டு தளர்வின்றி செயல்பட்டு வருகிறது.

Pin It