பிரம்மம், ஆன்மா இவை இரண்டும் வேதாந்தத்தின் தத்துவக் குழந்தைகள். பிரம்மத்தை முன்னர் சிறிது பார்த்தோம். பிரம்மத்துடன் ஆன்மாவை இப்பொழுது பார்ப்போம்.

ஆன்மா என்றால் என்ன?

உடலுக்குள் அழிவில்லாத, நிலை யான, உணர்ச்சி மிகுந்த ஒரு சக்தி இருக்கி றது. அது உடலுக்குள் இருந்தாலும், உடலில் இருந்து முற்றிலும் வேறான ஒன்று. அந்த சக்தி உடலில் இருக்கும்வரை, அது உடலுக்கு வெப்பத்தையும் செயல்திறனையும் தருகி றது. அந்த சக்தி அந்த உடலில் இருந்து வெளியேறி வேறு ஒரு உடலுக்குள் போய் விட்டால், இந்த உடல் குளிர்ச்சி அடைந்து செயலற்று இறந்து விடுகிறது. இந்த சக்தியே “ஆன்மா” அல்லது “ஆத்மா” என்று அழைக்கப்படுவதாக ஆரிய வேதாந்த நூல்கள் கூறுகின்றன.

புத்தர் இதை ஏற்றுக் கொள்ள வில்லை, முற்றிலுமாக நிராகரித்தார்.

ஆத்மா என்று எதுவும் இல்லை. ஆத்மா அழிவில்லாத நிலையான ஒன்று என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகில் எது ஒன்றும் நிலையானது அல்ல. அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது. இம்மாற்றம் அழிவில் (மரணத்தில்) முடிவுபெறும் என்ற வாதத்தை முன்வைத்து ஆன்மாவை (அனாத்மா) மறுத்தார் புத்தர்.

“ஆன்மவாதத்தைப் புத்தர் தத்துவ தரிசனத்திற்கு ஒரு பெரிய அடிமை விலங்காக எண்ணினார். உண்மையான அறிவைப் பெற ஆன்மவாதத்தை விட்டொழிக்க வேண்டும் என்று அவர் கருதினார்” என்கிறார் ராகுல் சங்கிருத்தியாயன்.

ஆன்மாவைப் பற்றி புத்தர் என்ன சொல்கிறார்?

“துறவிகளே! மனிதன் கந்தங்கள் எனப்படும் தாதுக் களின் சேர்க்கையால் இருக்கி றான். அதன் காரணமாக அவன் உருவத்தையும், உணர்ச்சியையும், சிந்தனைத் திறனையும், நல்லவை தீயவை குறித்து அறியும் ஆற்றலைப் பெற்றிருக் கிறான். மனிதனிடத்தில் சிந்தனையைத் தவிர, அதற்கு மாறாக, தனியான ஆன்மா என்று ஒன்றும் இல்லை. ஆன்மாவைத் தேடி அலைவது தவறு. அது தவறான வழியிலேயே நம்மைக் கொண்டு செல்லும்” & இது மகாவக்க.

“உடல் ஆன்மா அற்றது. உடலில் புனித ஆன்மா இருந்திருந்தால், இந்த உடல் நோய்க்கு உட்படாது இருக்க வேண்டும். மாறாக ஆன்மா அற்றதாக இருப்பதால் தான் உடல் நோய்க்கு உள்ளாகிறது” & இது சம்யுக்த நிகாய.

“மனிதன் பேதைமையாலும், மயக்கத் தாலும் தங்களிடம் ஆன்மா இருப்பதாக வும், அது எவ்விதச் சார்பும் இல்லாத தனித்துவமான ஒன்று என்று கனவு காண்கிறான். ஆனால் பகுத்து உணரும் நல்ல சிந்தனையாளன் அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறான். இதனால் இவன் உலகைப் பற்றிய சரியான சிந்தனை யைப் பெறுகிறான், சரியாக முடிவு செய்கிறான்” & ஜிலீமீ நிஷீsஜீமீறீ ஷீயீ ஙிuபீபீலீணீ - ஙிஹ் றிணீuறீ சிணீக்ஷீus

புத்தர் ஆன்மாவைக் கடுமையாக மறுக்கிறார் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன.

     இவைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு, சர்வபள்ளி டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன், “ஆன்மாவைப் பற்றிப் புத்தர் மவுனமாக இருப்பதற்குக் காரணம், அவர் உபநிடதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆன்மா குறித்து ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை” என்று மழுப்பலாகச் சொல்கிறார்.

அத்துடன் ஆன்மாவின் மூல இடம் “பரம்பொருள்” என்ற இடத்துக்கும் அவர் செல்கிறார். பரம்பொருள் இங்கே பிரம்ம மாக நிற்கிறது வேதாந்த வழிகாட்டலால்.

பிரம்மம், ஆன்மா ஆதிசங்கரர் என்ன சொல்கிறார்? “நீர் இல்லாத குடத்துக்குள் இருக்கும் வெற்றிடமும், அண்டவெளியில் இருக்கும் வெற்றிடமும் வேறுவேறு அல்ல, இரண்டும் ஒன்றே. அதுபோலவே மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவும், பிரம்மமும் ஒன்றே” என்கிறார் தன் அத்வைத வாதத்தால்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. நிலையற்ற மனிதனின் உடலில் இருக்கும் ஆன்மாவும் & பிரம்மமும் ஒன்று என்றால், பிரம்மமும், ஆன்மாவும் நிலையற்றவை என்றாகாதா? சங்கரரின் வாதம் முரண் படுகிறது.

கடல் வேறு, அலை வேறு. ஆனால் கடலின் ஓர் அங்கமாக அலை இருக்கிறது. அது கடலுக்குள் கலந்துவிடுகிறது. அதுபோல பிரம்மம், ஆன்மா வேறு வேறாகத் தோன்றினாலும், பிரம்மத்துள் ஆன்மா அடங்கும் என்று சொல்கிறார் அத்வைதத்தை உள்ளடக்கும் வசிஸ்டாத் வைத இராமானுஜர்.

இவர்களின் நோக்கம் உபநிடத வேதாந்தத்தில் சொல்லப்பட்டுள்ள பிரம்மம், ஆன்மா இவைகளை நிலை நிறுத்தி அதன்மூலம் ஆரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாக இருக்கிறது.

பிரம்மம், ஆன்மா இவைகளைப் புத்தர் முற்றிலுமாக நிராகரித்து ஒதுக்கிய தால், அடங்கிப் போயிருந்த இந்த பிரம்மாத்ம வாதத்தை பவுத்தத்தின் பெயராலேயே புனர்நிர்மாணம் செய்தார் நாகார்ஜுனர் & மகாயான பவுத்தத்தின் மூலம்.

“புத்தர் இறந்த சில நூற்றாண்டு களுக்குள், அவர் பெயரில் வழங்கும் கோட்பாடுகள் திடீரெனத் திசைமாறிப் போயின. இந்த மாற்றத்தின் ஓர் அம்சம், மனப்பூர்வமாகவே மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டதாகும்” என்ற தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் வாக்கு மூலம் சிந்தனைக்குரியதாகிறது.

அதாவது புத்தரின் மூல பவுத்தக் கோட்பாடுகளைத் திருத்தி, மாற்றி அல்லது புதிதாக நுழைத்து மூடநம்பிக்கைகளை பவுத்தமாக்கியது மகாயானம் என்ற இடத்துக்கு இட்டுச் செல்கிறார் தேவி பிரசாத்.

அதை உறுதி செய்யும் வகையில் மகாயான ஆத்மவாதத்தைப் பவுத்த நூல்களில் காணலாம். சிலவற்றைக் காண்போம்.

“நான் என்பது ஆளும் தலைவன், ஆன்மா. அவன் அன்றி வேறு தலைவன் இல்லை” & இது தம்மபதம்.

“தன் ஆத்மா, அரிய பொருள் என்று அறிந்து அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” & இதுவும் தம்மபதம்.

“யோகம், ஞானத்தை உணர்பவன் ஆத்மாவிற்கு உறைவிடம் தந்து அறிவில் வளர்வான்” & இதுவும் தம்மபதம்.

“ஆன்மாவைக் கொண்டே ஆன் மாவை விழிப்புறச் செய். தன்னைக் கொண்டே ஆன்மாவை ஆராய்வாய்” & இதுவும் தம்மபதம்.

“ஆன்மாவை இகழாமல், இகழச் செய்யாமல் வாழ்பவன் உண்மைப் பொருளைக் காண்பான்” & இது சூக்த நிபாத.

“ஆன்மாவையே தீபமாகக் கொண்டு, அதனையே சரணடைந்து, தர்மத்தையே தீபமாகக் கொண்டு, அதனையே சரணடைந்து முன்னேறுங்கள்” & இது சம்யுக்த நிகாய.

“ஆன்மாவின் வெளிச்சத்தில் நட. தர்மத்தை விளக்காகக் கொள். இதனையே சரண்புகுவீர். இதனைக் கடைப்பிடியுங்கள். பயிலுங்கள். சாவே இல்லை என்ற குன்றில் ஏறி நிற்பீர்கள்” & இது திக் நிகாய. இதில் சாவே இல்லை என்ற வாதம், புத்தருக்கு நேர் எதிராக அமைகிறது. இது மகாயானம்.

புத்தரின் தேரவாத மூலபவுத்தம் பிரம்மத்தை, ஆன்மாவை, மறுபிறப்பை, கர்மவினை என்ற வினைப்பயனை மறுத்துப் பவுத்தத்தை பகுத்தறிவுச் சிந்தனையோடு உருவாகியது.

நாகர்ஜுனரின் மகாயான எதிர்பவுத்தம் மேற்சொன்னவைகளை உள்ளடக்கி மூடச் சிந்தனையோடு வளர்ந்தது.

பிரம்மம், ஆன்மா இரண்டையும் தீண்டாமையைத் தோற்றுவித்த வடிவமாகப் பார்க்கிறார் பேராசிரியர் ந.முத்துமோகன். அவரின் கூற்று சரி என்றாலும், அதை ஆதிக்கத்தின் உருவமாகப் பார்ப்பது இன்னும் பொருத்த மாக இருக்கும்.

ஆரியர்கள் இறைவனு டன் தொடர்பு கொண்டவர் களாகத் தம்மை சொல்லிக் கொள்வதால் அவர்களுக்குத் தீண்டாமை இல்லை.

சத்திரியர், வைசியருக்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அவர்களுக்கும் தீண்டாமை இல்லை.

சூத்திரர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக தீண்டாமைக்கு உள்ளாகிறார்கள்.

மேற்சொன்ன சதுர்வர்ணத்தில் தீண்டாமை வேறுபடுவதால், பிரம்மம், ஆன்மா இவை தீண்டாமையைத் தோற்றுவித்தன என்பதில் சற்று நெருடல் ஏற்படுகிறது.

பிரம்மம், ஆன்மா இவை இரண்டும் ஆதிக்கத்தின் வடிவம் என்றால் பொருந் தும். ஆரியர் அல்லாத ஒட்டு மொத்தத் திராவிடர்களையும் அறியாமைக்கு உள் ளாக்கி. கடவுள் பயத்தை உண்டுபண்ணி, ஆரியத்தின் யாகம், சடங்குகள், பூசைகள், சாத்திரங்கள் இவைகளை ஏற்கச் செய்து, ஆரியர்க்குத் திராவிடரை அடிபணியச் செய்யும் சூழ்ச்சியின் வழியே இந்த பிரம்மம், ஆன்மா என்ற அதிகார வடிவம்.

அதனால்தான் உபநிடத வேதாந் தத்தின் பிரம்மத்தையும், ஆன்மாவை முழுமையாக உள்ளடக்கிய பிரம்மாத்ம மகாயானம், ஆரிய வாதத்தை முன்னெடுத் துத், திராவிடப் பவுத்தத்துடன் போராட் டத்தை நிகழ்த்தத் தொடங்கியது.

கி.மு. 6ஆம் நூற்றாண்டில் ஆரியத் திற்கு எதிராக முதல் போராட்டத்தைத் தொடங்கினார் புத்தர்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டில் திராவிடத் திற்கு எதிரான போராட்டத்தைத் தொடங் கினார் நாகார்ஜுனர். அதன் வடிவமே அத்வைத “பிரம்மாத்ம மகாயானம்”.

இன்றும் போராட்டம் தொடரத்தான் செய்கிறது.

- தொடரும்

Pin It