“...இப்பல்லாம்
யாரு சாதி பாக்குறா?”
சாதியினை ஒழித்த
அக்கரகாரத்து வீராதிவீரர்கள்
வினா எழுப்புகிறார்கள்?

வெண்மணிச் சாம்பலில்
உத்தபுரம் சுவர்களில்
மேலவளவின் இரத்தக் கறையில்
பாப்பாபட்டியில் தீட்டாகிப் போன நாற்காலிகளில்
திண்ணியத்தின் மலங்களில்
இன்னும்...
இன்னும்...
நாறுகிறது சாதி!
...............................
..................................
“இப்பல்லாம்
யாரு சாதி பாக்குறா?”

சாதித் தமிரோடு கேட்கும்   எவரையும்
திருப்பிக் கேளுங்கள்

“யாரு சாதி பாக்கல?”

- மங்கலம் பிரபாகரன்

Pin It