சென்ற மாதம் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களை இழந்தோம். இந்த மாதம் தமிழ் உணர்வாளர் ஓசூர் மூவேந்தன் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ்ப் பதிப்புக்கு ஆசிரியராக இருந்த மணவை முஸ்தபா, தமிழில் கலைச்சொற்களைக் கொண்டு வந்ததில் முதல் வரிசையில் இருப்பவர். நல்ல மொழிபெயர்ப்பு நூல்களையும் அவர் தந்துள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2006--11 ஆம் ஆண்டுகளில், தமிழக அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு அரும்பணி ஆற்றியவர்.

ஓசூர் பகுதியில் கடந்த பல்லாண்டுகளாகத் தமிழ்ப் பணி ஆற்றி வந்தவர் மூவேந்தன். அங்குள்ள அனைத்துச் தமிழ்ச் சங்கங்கள், திராவிட இயக்கங்கள் ஆகியனவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். நம் கருஞ்சட்டைத் தமிழர் இதழை அப்பகுதியில் பலருக்கு அறிமுகம் செய்தவர்.

இருவரின் இறப்பும், தமிழுக்கு இழப்பு!

***

திராவிடம் வாழும்!

திராவிடக் கட்சிகளின் பணி முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. திராவிடம் ஒரு சக்தி. அத ஒன்னும் பண்ண முடியாது. பிரபந்த காலத்துல இருந்து திராவிடம் இருக்கு. தமிழ் வாழ்த்து இருக்கும் வரை திராவிடம் இருக்கும். அது ஒரு இன உணர்வு.

நடிகர் கமல்ஹாசன்

(புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில்)

Pin It