களம்

கொலைக்களம்
ஒன்றின் முன்னின்று...
பெரும் துவக்குகள் துப்பும்
துவக்கியொன்றினைக் கொண்டு
கொன்று குவிக்கிறாய்
எம்மக்களை

அக்கொலைக் களத்தின்
பின்னின்று...
பேரிடி முழுங்க
பெருங்கவலையியற்றி
எம்மொழி கொண்டு...
உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறாய்
அம்மக்களை...

தாராள உலகம்

எம்முயிர் மண் கொல்லும்
பெரும்கொல்லிகளை அளித்த
எவனோவொரு நாட்டவனுக்கு
கடன் அழுது தீர்க்க...
மலட்டு விதை விதைத்து...
காத்திருக்கிறேன்...
 கொம்பை மறந்த
காளையொன்றினைப் போல்...
அறுவடை ஒன்றிற்கு...

- புன்னகை சேது

Pin It