1

மிகச்சமீபமாய்
எங்கெல்லாம்
ஒளிந்திருக்கிறோம்..
கட்டில் அடி
வேப்பமர முதுகு
அம்மாவின் முந்தானை
இன்ன பிற...
எனினும்,
இப்போதெல்லாம்
ஒளிந்துகொள்கிறோம்
மிகச்சமீபமாய்
பிரச்சனைக்கு பின்னால்.


2

முழுமை

பிறந்தநாள்
அலங்காரப் பலூன்களை
ஒவ்வொன்றாய்
உடைத்துக்கொண்டு வருகையில்
முழுமையானது முடிவில்
யாதுமற்ற வெற்றிடம்.

முதல் பூக்ஷ

சாமிக்கென்று வைத்திருந்த
ரோஜாச்செடியின் முதல் பூவை
கேட்டு வாங்கிக்கொண்டாள்
எதிர்வீட்டுச் சிறுமி.
வருத்தமில்லை சாமிக்கு.

Pin It