மண்பானையிலிருந்து வழியும் நீருடன்
ஒவ்வொரு செடிக்கும்
குடுகுடுவென நடக்கிறான்
கூன் துறவி.
யாருமற்ற பெருவனத்தின் நடுவே
அவனது சிறுகுடில்
பாசிக்குளத்தில் மிதக்கும்
பழுப்புநிற தக்கைபோல் காட்சியளிக்கிறது.
சிறு விளக்கொளியில் எழுதுகிறான்.
"தனிமையை ஒரு நாளேனும் உணர்ந்துவிட
வேண்டும் என்று நினைத்து தோற்கிறேன்.
செடிகள்,கொடிகள்,மரங்கள்,,
இன்னும் இன்னும் இன்னும்"
சிறு விளக்கின் தலையில் வந்தமர்ந்த
இரவுப்பூச்சி
பட் பட் பட் என சப்தமிடுகிறது.

- நிலாரசிகன்

Pin It