உன் இலட்சியக்
கனவுகளை
கல்லறையாக்காதே
உன் கனவுகள்
விடிந்தால் மறையும்
நிலவல்ல!
உன்
வெப்பக்கதிர்கள் பட்டு
பனித்துளியாய்
போர்த்தியுள்ள
துயரங்கள் மறையட்டும்
நீ இலட்சியப்
பூவாய் மலர்ந்தால்
உன்னில் தேசம் மணக்கும்
இதை உணர்ந்தால்
நீயே உனக்குத் தோழன்!
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.