வேறு வேறு ஊரில்
வாழ நேரும் தம்பதிகள்
கொடுத்து வைத்தவர்கள்
கூடவேயிருந்து
ஒருவரையருவர்
காயப்படுத்துபவர்களைவிட

வேறு வேறு ஊரில்
வாழ நேரும் தம்பதிகள்
இரங்கத் தக்கவர்கள்
கூடவேயிருந்து
அன்பையும் ஆறுதலையும்
பரிமாறுபவர்களைவிட
எப்படியோ
பிரிய வேண்டியிருக்கிறது
அல்லது
கூட வேண்டியிருக்கிறது

கூடியும் பிரிந்தும்
பிரிந்தும் கூடியும்
தம்பதியாக வேண்டியிருக்கிறது
தன் பொருட்டும் பிறர் பொருட்டும்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.