முள்வேலி முகாமுக்குள் மனிதம் தொலையும் இவ்வாழ்வில், வாழ்தல் கொடூரம் என்கிற அர்த்தத்தை உணர்த்தியும் அது குறித்து பேசாத எழுத்துக்களை கவிதை என்று எப்படிச் சொல்ல?

சக மனிதனை எல்லா வழிகளிலும் ஏமாற்றிப் பிழைக்க அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும் மாயவித்தைச் சொற்களுக்கு எதிராக எதிர்ச் சொற்களை உருவாக்காத எழுத்துகள் கவிதைக்குள் இருந்தா லென்ன? இல்லாவிட்டாலென்ன?

அடுக்கடுக்கான ஊழலும், அதற்கெதிரான குரலுக்கு அடக்குமுறையும் எழுகிறபோது, வழக்க மான வாழ்க்கைச் சூழலுக்குள் அடைபட்டுக் கிடக்கிற சாதாரண மனிதனுக்கு, அவன் குரலை உயர்த்த, அகரம் கற்றுத் தராத எழுத்து, அட்டவணைக்கு மாற்றாக போர்க்குரல் எழுத்துகளை உருவாக்கும் வல்லமை கவிதையின் எந்த வரியிலாவது உருவாக்கும் ஒருவனை மாமனிதன் என கவிதை கொண்டாடட்டும்!

குழந்தைகளின் மென்மனதைச் சிதைக்கும் வன் ஆயுதங்களுக்கு எதிர்க்குரலாக எழும் ஒரு குரலுக்கு ஆதரவாக எழும் கைகளை கவிதையென கொண்டாடும் கவிதை மனங்கள் திக்கெட்டும் பிறக்கட்டும்.

கவிதை என்ன செய்யும்?

கவிதை எதையாவது செய்யும்

கவிதை எதையும் செய்யும்

Pin It