பசி வந்தபோது
என் தாத்தாவிடம்
நிலம் இருந்தது

பசி வந்த போது
என் அப்பாவிடம்
நெல் இருந்தது

பசி வருகிறபோது
என்னிடம்
ரேசன் அரிசி இருக்கிறது

இனி...

பசி வரும்போது
என் மகனிடம் இருக்கும்...
ஆயுதம்.

- கண்மணிராசா

More articles by கண்மணிராசா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.