அங்கீகாரம் ரத்தானதன்
அடையாளமாயிருக்கலாம்

பக்குவமானதொரு
பழிவாங்கும் முயற்சியாயிருக்கலாம்

இடஒதுக்கீட்டிற்கான பட்டியலில்
இறுதியிலிருந்திருக்கலாம்

தேட வைப்பதற்கான
தேர்ந்த யுக்தியாயிருக்கலாம்

முக்கியத்துவம் இழந்ததன்
முன் மொழிவாயிருக்கலாம்

தகுதிபடுத்திக்கொள்ள
தரப்பட்ட வாய்ப்பாயிருக்கலாம்

எதுவுமே காரணமில்லை
என்பதே கூட காரணமாயிருக்கலாம்

ஒரு பெயர் விடுபடுவதற்கு

 - க.ஆனந்த்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.