கவ்வி கவ்வி விளையாடுகிறது
காலம்

விடாது என்றிருக்கையில்
விட்டு விடுகிறது

ஓடி விளையாட நேரம் தந்து
தேடி வந்து கவ்வுகிறது

கவனமாகத்தானிருக்கிறது
காயம் ஏற்படுத்தக்கூடாதென்று

விடுபடத்திமிறுகையில் தான்
விழுந்து விடுகிறது
மெலிதான கீறல்

தப்பும் முயற்சிகளனைத்தும்
முடிகின்றன
மாட்டிக்கொள்வதாய்

கவ்வும் பாவனையுடனே
நகர்த்திக் கொண்டுவந்து விடுகிறது
நெடுந்தூரம்

ஓடுகிற வேகத்திற்கு
ஈடுதந்து விரித்துக்கொள்கிறது
தன் எல்லைகளை

எப்போது கவ்வுமோ
எனும் அச்சத்துடனே
எப்போதும் ஓட வைத்தாலும்

அவ்வளவாக
அழுத்தம் தராத
அந்தக் கவ்வலில்
இருக்கத்தான் செய்கிறது
அப்படியொரு கருணை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.