வாழ்க்கை - 1

எரிக்கும் வன்மங்கள்
எவ்வளவோ முரண்பாடுகள்...
மோதிக் கொள்ளும்
சாத்தியங்களுடன்
நேரெதிர் சந்திப்பில்
முகம் பார்த்தும்,
காயமேதுமின்றியே
விலகிப் போகும்
கணங்களில்தான்-
கனிந்து கொண்டிருக்கிறது...
வாழ்க்கை.

வாழ்க்கை - 2

இல்வாழ்க்கை
எனப்படுவது யாதெனில்...
யாரொருவரின் குரல்
உயரும் போதெல்லாம்,
மற்றொருவரின் குரல்
உள்ளீடாய் கலந்திருப்பதாக
நம்பப்படுவதே.

- மு.முருகேஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.