1

உன்
கையைப் பிடித்து
நடக்கும் பொழுது
கடல் துளியாகிறது
நீ
இல்லாமலிருந்தால்
துளியும்
கடலாகிறது
நான் சாவதற்கு...

2

யாருமற்ற
வீட்டில்
ஓடிக் கொண்டே இருக்கும்
கடிகாரம் போல்
வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்
நீ
இல்லாத உலகத்தில்...

- துரை.மூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.