தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:

எடப்பாடி ஆட்சியும் திமுக ஆட்சியும் ஓர் ஒப்பீடு

  • கடந்த 2016–21, அ.தி.மு.க. ஆட்­சி­யில், தொழில் முதலீட்டிற்காகப் போடப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் எவ்­வ­ளவு தெரியுமா? 471. இதுவே நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், ஆயி­ரத்து 190 புரிந்துணர்வு ஒப்­பந்­தங்கள் போட்­டி­ருக்­கி­றோம்! கடந்த கால அ.திமு.க. ஆட்சியில் ஈர்த்த முத­லீடு – நான்கு இலட்­சத்து 13 ஆயி­ரத்து 414 கோடி ரூபாய்­தான். ஆனால், நம்­மு­டைய ஆட்சிக் காலத்தில், 12 இலட்­சத்து 54 ஆயி­ரத்து 133 கோடி ரூபாய்க்­கான முதலீடுகளை ஈர்த்­தி­ருக்­கி­றோம்! மூன்று மடங்கு அதி­கம்!
  • 2016–21–இல் அ.தி.மு.க. ஆட்­சி­யில், புதி­தாக நான்கே நான்கு சிப்காட் தொழிற்­பூங்­காக்­க­ளை­தான் தொடங்­கி­னார்­கள். ஆனால், நாம் 33 புதிய சிப்­காட் தொழிற்­பூங்­காக்­க­ளைத் தொடங்கி இருக்­கி­றோம்!
  • ஸ்டார்ட்–­­அப் நிறு­வ­னங்­களை எடுத்து­க் கொண்டால், 2021 வரைக்­கும் இருந்த எண்ணிக்கை: 2 ஆயி­ரத்தி 45. இப்­போது 13,500–க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்–­­அப் நிறு­வ­னங்­கள் நம்­மு­டைய ஆட்­சி­யில் இருக்­கி­றது!
  • அடுத்து வேளாண் துறை, 2016–21–இல், 57.26 இலட்­சம் ஹெக்டேராக இருந்த மொத்த சாகு­ப­டிப் பரப்பை, இப்­போது 62.32 லட்சம் ஹெக்டேராக உயர்த்தி இருக்கிறோம்! ஐந்து ஆண்­டு­க­ளில் 5 லட்­சம் ஹெக்­டேர் உயர்ந்­தி­ருக்­கி­றது.
  • கடந்த ஆட்­சிக்­கா­லத்­தில் ஒரு இலட்­சம் விவ­சா­யி­க­ளுக்­குத் ­தான் இல­வச வேளாண் மின் இணைப்பு கொடுத்­தார்­கள். ஆனால், நம்முடைய ஆட்­சி­யில், இரண்டு இலட்சத்­திற்கும் அதி­க­மான விவ­சா­யி­க­ளுக்கு இல­வச வேளாண் மின் இணைப்பு கொடுத்­தி­ருக்­கி­றோம்.
  • 2016–21–இல், அண்­ணல் அம்­பேத்­கர் அய­லக உயர்கல்வி உதவித்தொகை திட்­டத்­தில் படித்த மாண­வர்­க­ளின் எண்ணிக்கை எவ்­வ­ளவு தெரி­யுமா? இரண்டே இரண்டு பேர்­தான்! ஆனால், நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்சியில் 386 மாண­வர்­க­ளுக்கு, 160 கோடி ரூபாய் உத­வித்­தொகை கொடுத்து படிக்­கி­றார்­கள்!
  • அதே­போன்று, ஆதி­தி­ரா­விட மக­ளிர் நன்­னி­லம் நில உடை­மைத் திட்­டத்­தில் அ.தி.மு.க. ஆட்­சி­யில் பய­ன­டைந்த பெண்­கள் 40 பேர்! 40 இலட்­சம் ரூபாய் கொடுத்­தார்­கள்! அதுவே நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் 1,026 பெண்­க­ளுக்கு, சுமார் 50 கோடி ரூபாய் வழங்கி­யி­ருக்­கிறோம்! எவ்­வ­ளவு பெரிய வித்­தி­யா­சம்?
  • அடுத்து, விளை­யாட்­டில் நம்­மு­டைய இளை­ஞர்­கள் இன்றைக்கு எப்­ப­டி­யெல்­லாம் சாதிக்­கி­றார்­கள். அதற்­குக் கார­ணம் என்ன? விளையாட்­டுத் துறைக்கு 800 கோடி ரூபா­யாக இருந்த நிதி ஒதுக்கீட்டை, நம்­மு­டைய ஆட்­சி­யில், 2 ஆயி­ரத்து 268 கோடி ரூபா­யாக உயர்த்தி இருக்­கி­றோம்!
  • அது­மட்­டு­மல்ல, 2016–21–இல் அரசு வேலை­வாய்ப்பு வழங்கப்பட்ட விளை­யாட்டு வீரர்­கள் எத்­தனை பேர்? மூன்றே மூன்று பேர்தான்! ஆனால், நம்­மு­டைய அர­சில், 301 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கி­றோம்! இப்­படி எல்லா துறை­யி­லும் லிஸ்ட் இருக்கி­றது!
  • மக்­கள் பெரும் சுமை­யா­கக் கரு­தும் மருத்­து­வச் செலவுகள், சென்ற ஆட்­சி­யில் முத­ல­மைச்­ச­ரின் விரி­வான மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்டத்தில், 49 லட்­ச­மாக இருந்த பயனாளிகள் எண்­ணிக்­கையை நம்­மு­டைய ஆட்­சி­யில் 90 இலட்சமாக உயர்த்தி இருக்­கி­றோம். அதற்­குக் கார­ணம். நம்முடைய அர­சில் 72 ஆயி­ர­மாக இருந்த வரு­மான வரம்பை, ஒரு இலட்­சத்து 20 ஆயி­ர­மாக உயர்த்தி கொடுத்­தோம்.

இப்­படி எல்­லா­வற்­றி­லும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு, ஏன், பல மடங்கு சாத­னை­கள் படைத்­தி­ருக்­கி­றோம்! இதுதான் வளர்ச்சி! அத­னால்­ தான்., வர­லாற்­றி­லேயே இல்­லாத அளவுக்கு 14 ஆண்டுகள் கழித்து, நம்­மு­டைய ஆட்­சி­யில் 11.19 விழுக்­காடு பொரு­ளா­தார வளர்ச்சியை நம்­மு­டைய மாநி­லம் அடைந்தி­ருக்கிறது! நானும் தொடர்ந்து ஒவ்வொரு மேடை­யி­லும் நம்முடைய சாத­னை ­களை எல்­லாம் டேட்­டா­வு­டன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். செய்­த­தைக் கூட, நம்­மால் முழு­தாகச் சொல்ல முடி­ய­வில்லை. அந்த அள­வுக்கு மிகப்­பெ­ரிய பட்டியல் இருக்­கி­றது.

- (மார்ச்-9-ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் எடப்பாடி ஆட்சியோடு தமிழ்நாடு அரசின் சாதனைகளை ஒப்பிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரை).

—----------------------------------------------------------------------------------------------------

பீகார் வாரிசு அரசியல் கதை தெரியுமா?

பீகாரில் நிதிஷ்குமாரை முதலமைச்சர் ஆக்கிய பாஜக, இப்போது அவருடைய பதவியை பறித்துக் கொண்டு அவரது மகன் நித்திஷை துணை முதல்வர் ஆக்க முடிவு செய்துள்ளது. 50 வயது உள்ள நித்திஷ் பொது வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாதவர்.சொந்த தந்தையின் கட்சியிலே கூட அவர் உறுப்பினராக இல்லை; கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அவர் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார். உடனே துணை முதலமைச்சர் பதவி `லாட்டரி' கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாரிசு அரசியலுக்கு எதிராக கொந்தளித்து வருகிறார் எடப்பாடி. இதற்குப் பிறகு வாரிசு அரசியலுக்கு எதிராக வாய் திறப்பாரா?

ஏற்கனவே எடப்பாடியாரின் கட்சியில் அடையாளமாக வைத்திருந்த பெரியார் படம்; மாநில உரிமைகள்; மென்மையான மதவாத எதிர்ப்பு என்று ஒவ்வொன்றாக பறித்து எடப்பாடி வாயை அடைத்து விட்டார் அமித் ஷா. இப்போது வாரிசு எதிர்ப்பு பேச்சுக்கும் கடிவாளம் வந்துவிட்டது. எடப்பாடி தக்க வைத்துக் கொண்டுள்ள ஒரே பேச்சுரிமை இதுதான். "எந்தக் கொம்பனாலும் எங்களை அசைக்க முடியாது" என்ற ஒற்றை டயலாக்கு தான்!

—---------------------------------------

கள்ள உறவும் கலாச்சார ஊழல்தான்!

உடையாத பாலத்தைக் கட்டித் தருவேன் என்று உறுதிகூறி அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு விரைவில் உடைந்து நொறுங்கும் பாலத்தைக் கட்டி முடிப்பது 'நிதி ஊழல்'.

உடையாத வாழ்க்கையை உனக்கு தருவேன் என்று உறுதியளித்து இடையிலேயே வாழ்க்கையை உடைய வைத்து அந்த துயரத்தைக் கொண்டாடி கூத்தாடுவது 'குடும்ப கலாச்சார ஊழல்'

சினிமாவில் வரி கட்டுகிற பணம் ; வரி கட்டாத பணம் என்று பிரித்து வாங்கி; வரி ஊழல் செய்தவர்களும், குடும்ப கலாச்சார ஊழல் செய்தவர்களும் ஊழலை எதிர்க்க அரசியல் களம் இறங்கி இருக்கிறார்கள். கருப்புப் பண ஊழலை விட கொடுமையானது கள்ள உறவு கலாச்சார ஊழல்!

—------------------------------------------

விளையாட்டு போட்டிகளின் தலைநகரம்

      துணை முதலமைச்சர் உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக வந்தபிறகு தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு கண்டது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றிகளை குவித்து வருகிறார்கள். அதற்கு அவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். வெற்றி குவித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 6,689 பேருக்கு அரசு பரிசாக வழங்கிய தொகை 215.78 கோடி.

செம்மஞ்சேரியில் ரூ.261 கோடியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது. அவற்றுள் இதுவரை 141 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய அரங்கங்களின் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஏற்ப அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் தேவைப்படும் விளையாட்டுக் கருவிகள், எல்லா ஊர்களிலும் கிடைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம் ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் விளையாட்டுகளை ஊக்குவித்திடும் சிறந்த மாநிலம் என தமிழ்நாட்டை தேர்வு செய்து 2025 ஆம் ஆண்டிற்கான விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது.

—----------------------------------------------------

கருப்பை புற்றுநோய் தடுப்பில் மோடிக்கு வழிகாட்டிய மு.கஸ்டாலின்!

பெண்களுக்கான கருப்பை புற்றுநோய் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியது திராவிட மாடல் ஆட்சி. கடந்த சனவரியில் அரசு இத்திட்டத்தை அறிவித்து மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஊசியின் மதிப்பு ரூ.14,000. தமிழ்நாட்டில் இலவசமாக போடப்படுகிறது. இதுவரை 4 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக தொடரும்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைக் கான திட்டங்களை வாக்கு திரட்டும் திட்டமாக சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த திட்டம் வாக்களிக்கும் வயதிற்கு வராத 14 வயது சிறுமிகளுக்கான திட்டம்.

தமிழ்நாட்டைப் பார்த்த பிறகு தான் மோடி கடந்த பிப்ரவரியில் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மோடி வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இந்தியா முழுவதும் 14 வயதான 1.5 கோடி பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார். உலகளாவிய புற்றுநோய் ஆய்வகம் `Globocan' 2022-ல் வந்துள்ள தகவலின் படி இந்தியாவில் 35 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களிடம் காணப்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் 2-ம்இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1,20,000 பெண்கள் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுவதும், 80,000 பேர் உயிரிழப்பதும் தெரிய வந்திருக்கிறது. `செர்வாக்' Cervavac என்ற தடுப்பூசி இதற்கு பயன்படுத்தப்படுகிறது. மோடி அரசு உலகளாவிய தடுப்பூசி கூட்டணி (CAVI) என்ற‌ அமைப்புடன்‌ இணைந்து இதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளது.

தமிழ்நாடு அரசோ ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை வந்த உடனேயே சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உலக வங்கியிடம் ரூ.1,185 கோடி ரூபாய் கடன் பெற்று இத்திட்டத்தை தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் இத்திட்டம் 5-ஆண்டு காலம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மோடி ஆட்சி சர்வதேச அமைப்புடன் உடன்படிக்கை செய்து கொண்டு நிறைவேற்றப்படும் இத்திட்டம் வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டும் தான். தமிழ்நாடு அரசு உடனடியாக பெண்களுக்கு கவலையோடு திட்டங்களை என எப்படி அமல்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு மறுக்க முடியாத சான்று. தமிழ்நாட்டில் மட்டும் 2023-ம் ஆண்டில் 8,534 பெண்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசின் அறிக்கை கூறியது. தமிழ்நாடு அரசின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டம் 5-ஆண்டு காலம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மோடி ஆட்சி சர்வதேச அமைப்புடன் உடன்படிக்கை செய்து கொண்டு நிறைவேற்றப்படும் இந்தத் திட்டம் வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டும் தான். தமிழ்நாடு அரசு உடனடியாக பெண்களுக்கு கவலையோடு திட்டங்களை என எப்படி அமல்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு மறுக்க முடியாத சான்று.

விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.