தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. வங்கிகள் மற்றும் நாட்டின் பெரு முதலாளிகளுக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்தது ரூ. 14 இலட்சம் கோடியா? ரூ.25 இலட்சம் கோடியா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கடந்த ஆகஸ்-7, 2023 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி கனிமொழி வாராக் கடன் குறித்து எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 2014-ம் நிதியாண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ரூ.14,56,226 வாராக் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார். இந்த தகவலை ஒப்பிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக ரிசர்வ் வங்கிக்கு உண்மையில் வாராக் கடன் தள்ளுபடி எவ்வளவு? என்று குஜராத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் மனு அளித்திருந்தார். ரிசர்வ் வங்கி கடந்த 9 ஆண்டுகளில் ரூ.25 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்திருந்தது.

ஆகவே நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விக்கு அளித்த ரூ.14 இலட்சம் கோடி உண்மையா அல்லது ரிசர்வ் வங்கி தந்த பதிலில் ரூ.25 இலட்சம் கோடி உண்மையா? என்ற அதிர்ச்சி சந்தேகம் நாடு முழுவதும் எழுந்தது. இரண்டு தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏறக்குறைய 11 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் மறைக்கப்பட்டதாகவே தெரிகிறது. பெரும் முதலாளிகள் வாங்கிய வாராக் கடனை தள்ளுபடி செய்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்தவர் மோடி.

விளம்பரத்துக்கு வீண்செலவு செய்யும் மோடி அரசு

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஷபி பரம்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த 5 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்துக்கு ரூ2,447 கோடியை ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு ரூ.1.34 கோடி செலவாகியுள்ளது. மின்னணு, அச்சு ஊடகங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வாரியாக 2020-21 நிதியாண்டில் ரூ.409.55 கோடி, 2021-22 ஆண்டு ரூ.317.48 கோடி, 2022-23 ஆண்டு ரூ.408.37கோடி, 2023-24 ஆண்டு ரூ.656.6 கோடி, 2024-25 ஆண்டு ரூ.654.9 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மோடி அரசின் விளம்பர செலவில் 5 அமைச்சகங்கள் மூலம் மேற்கொண்ட விளம்பரங்கள் மட்டுமே 60 சதவீதத்தை தாண்டிவிட்டன. கடந்த 2024-26 நிதியாண்டில் ரூ.526.90 கோடி விளம்ப ரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இதில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரூ.208.35 கோடி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் ரூ.42.51 கோடி, பாதுகாப்பு அமைச்சம் ரூ.31 கோடி, நிதியமைச்சகம் ரூ.16 கோடி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ரூ.21.5 கோடி செலவிட்டுள்ளன என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

மேலும், மேற் கண்ட நிதியாண்டில் டிவி மற்றும் டிஜிட் டல் விளம்பர செலவு மட்டும் ரூ.406.12 கோடியாகி விட்டது. இதன் பங்களிப்பு 77.2 சதவீதம். அதேநேரத்தில் அச்சு ஊடகங்களுக்கான செலவு 40 சதவீதம் குறைந்து ரூ.119.78 கோடியாகி விட்டது முந்தைய ஆண்டில் இது ரூ.202 கோடியாக இருந்தது. இதுபோல், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்ய ரூ.9.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த 2025-26 நிதியாண்டில் ரூ.14.06 கோடியாக உயர்ந்துள்ளது. தெரியவந்துள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.