மக்களைச் சமதர்மம் அடையச் செய்யும் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்கத்துடிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் குமரி மாவட்ட வருகையைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி (08-07-2017 சனிக்கிழமை) காட்டச் சென்ற கழகத் தோழர் நீதி அரசர் அவர்களை காவல் துறை கைது செய்து பிணை வழங்காமல் 15 நாள் காவலில் வைத்தது. தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களை மதத்தால் உசுப்பி சண்டைப் போட வைத்துவிட்டு அதில் குளிர் காயும் பார்ப்பன மத வெறியருக்கு பாதுகாப்பும், மக்களுக்காக போராடும் போராளிகளுக்குச் சிறையும் வழங்கும் காவல் துறைக்கு குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இடஒதுக்கீட்டு முறையால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பார்ப்பனனுக்கு ஆதரவாகச் செயல்படுவது வருந்தத்தக்கது என்று குமரி மாவட்டக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய படைப்புகள்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2017
More articles by விடுதலை இராசேந்திரன்
- பெருகி வரும் கோயில் கொள்ளைகள் (22 ஜூன் 2026)
- அம்பேத்கரைத் திரிக்கும் பார்ப்பனியம்! (22 ஜூன் 2026)
- பள்ளிகளில் ஜாதிக் கயிறுகளுக்குத் தடை! (22 ஜூன் 2026)
- ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு (22 ஜூன் 2026)
- தென் மாநிலங்களை ஓரம் கட்டும் ஒன்றிய அரசு (12 ஜூன் 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.