Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

சகிப்புத்தன்மை, சாத்வீகம் மற்றும் சகோதரத்துவத்தின் பிறப்பிடம் என்று வெற்று டப்பாவை உருட்டிக் கிடக்கிறது இந்தியா.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அதன் அடைமொழிக்கு ஒரு அர்த்தமுமில்லை. பௌத்தம் சமணம் உள்ளிட்ட மாற்றுக்கருத்துக்களை வன்முறைகளாலும் புறக்கணிப்புகளாலும் ஒழித்துக்கட்டியவர்களின் இன்றைய வாரீசுகளான இந்துத்துவ தீவிரவாதிகள் சகிப்பின்மை என்ற கொடுந்தடத்தில் சமூகத்தைக் கடத்திச் செல்ல முனைகிறார்கள். இவர்களது வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் வழக்கு தொடுத்து அலைக்கழிக்கும் மலிவான தந்திரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தளர்ந்துபோய் இந்த நாட்டைவிட்டு தன்னைத்தானே வெளியேற்றிக் கொண்டிருக்கிறார் ஓவியர் எம்.எஃப்.ஹூஸைன். தன் கோடுகளாலும் வண்ணங்களாலும் உலகெங்குமுள்ள கலைமனங்களை வென்றெடுத்த ஹூஸைனுக்குத் தன் சொந்தநாட்டு மதவெறியர்களிடம் ஏற்பட்ட தோல்வியை தங்களுக்கானதாய் பாவித்து வருந்துகிறது சர்வதேச அறிவுச்சமூகம்.

உருவங்களை வரைவது தமது மார்க்கத்திற்கு விரோதமானது என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அவரது ஓவியங்கள் தமது கடவுள்களை இழிவுபடுத்துகின்றன என்று இந்துத்துவ அடிப்படைவாதிகளும் ஒரு சேர தாக்குதல் தொடுக்கின்றனர் ஹூஸைன் மீது. மடங்களை காமக்களியாட்டக்கூடமாக மாற்றியவர்களை லோககுருவாகவும், கோயில் கருவறையை பள்ளியறையாக மாற்றியவர்களை அர்ச்சகராகவும், உலகத்தின் அத்தனை பித்தலாட்டங்களையும் ஒருசேர செய்கிற பொறுக்கிகளை அவதாரங்களாகவும், கொனார்க் சூரியக்கோவிலையும் கஜூராஹோ சிற்பங்களையும் கலை வெளிப்பாடாகக்  கொண்டாட முடிகிற இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு ஹூஸைனின் கலை ததும்பும் ஓவியங்கள் ஆபாசமாய் தெரிவதற்கு மதக்காழ்ப்பே காரணம். தேசிய நலனுக்கு திட்டவட்டமான எதிரிகள் என இஸ்லாமியர்களைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவாவினர், இந்தியாவின் தொன்மங்களை மதம் கடந்து கொண்டாடும் ஹூஸைன் போன்றவர்களை எளிதில் கடக்க முடியாமல் திணறுகின்றனர். அதன் விளைவாகவே அவர்கள்  ஹூஸைனை அப்புறப்படுத்த விரும்பினர், எப்படியோ இறுதியில் அது நிறைவேறியும் விட்டது.

இந்திய தேசத்தவர் என்ற உரிமையைத் துறந்து கத்தார் தேசத்தவர் என்ற இக்கட்டான நிலைக்கு அவரைத் தள்ளிய பின்புலம் இன்று ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தியாவின் பெருமைக்குரிய குடிமக்களில் ஒருவரான ஹூஸைன் விரைவில் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடியை கலை இலக்கியவாதி களும் மதச்சார்பின்மைவாதிகளும் ஊடகவியலாளர்களும் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளனர். 95 வயதாகிவிட்ட அவர் இனி நாடு திரும்புவதாயிருந்தால், அது இங்கு வந்து சாவதற்காகத்தான் இருக்கமுடியும் என்று அவரது நண்பர் ஒருவர் மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார்.

பிறந்த பூமியில்தான் உயிர் விடுவேன் என்று அடம் பிடித்து திரும்புமளவுக்கு இந்த நாடு எப்போதாவது அவரை கௌரவமாக நடத்தி இருக்கிறதா? வேண்டாம் ஹூஸைன்,  நீங்கள் நிம்மதியாகக் கத்தாரிலேயே இருந்து விடுங்கள். கட்டற்ற பெருவெளியில் அசைந்தாடும் கொடியென உங்களது தூரிகை சுதந்திரமாய் வரையட்டும்.

மும்பை நகரம் எல்லோருக்கும் சொந்தமென்று சொன்னதற்காக விளையாடுவதோடு நிறுத்திக்கொள் என்று சச்சின் டெண்டுல்கரும், ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கான வியாபாரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தமைக்காக, நடிப்பதோடு நிறுத்திக்கொள் என்று ஷாருக்கானும் சிவசேனாவால் உரிய முறையில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியில் பேசியதற்காக ஒரு நடிகரின் குடும்பம் பால் தாக்கரேயிடம் மன்னிப்பு கோர வேண்டியிருந்தது. பதவி பிரமாண வாசகங்களை இந்தியில் சொன்னதற்காக சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார். ரயில்வே பரிட்சை எழுதவந்த வட இந்தியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ( ஆஸ்திரேலியாவில் படிக்கப் போன இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக இவர்கள் கூப்பாடு போடுவது கேலிக்கூத்துதான் ) ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து எதன் பொருட்டு எங்கு தென்பட்டாலும் பலவந்தப் படுத்தி அவர்களுக்கு கல்யாணம் முடிக்க தாலிக்கயிற்றை மடியில் கட்டிக்கொண்டு அலைகிறது ஸ்ரீராம்சேனா.

மக்களைத் திரட்டும் பொறுமையும் ஜனநாயக வழிப்பட்ட போராட்டங்களில் நம்பிக்கையும் அற்ற இவ்வமைப்புகள் வதந்திகளையும் வன் முறையையுமே தமது வழிமுறையாகக் கொண்டுள்ளன. மக்களை வாட்டி வதைக்கும் எந்தவொரு அடிப்படைப் பிரச்னையையும் தீர்ப்பதற்காக சிறுதுரும்பைக்கூட கிள்ளிப்போடாத இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக மான அவமானப் பிரச்னைகளைக் கிளப்பிவிட்டு சமூகத்தை நிரந்தரப் பதற்றத்தில் வைத்திருக்க முயற்சிக்கின்றன. ஒருவரது அண்டை வீட்டில் மற்றொரு இனத்தவரோ மதத்தவரோ வசிப்பதை சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு மற்றமை மீதான துவேஷம் கிளப்பி விடப்படுகிறது. பிற இன, மொழி, மத, பிரதேச அடையாளமுள்ளவர்கள் தமது சொந்த நிலை பாட்டிலிருந்து தெரிவிக்கும் கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பண்பு மீறப்படுகிறது. உருட்டுக்கட்டைகளால் சமூகத்தை ஆள நினைக்கிற இந்த அழிவுச்சக்திகள் சட்டத்தின் ஆட்சி என்பதை மறுதலிக்கின்றன.

இந்த மண் எல்லோருக்குமான வாழிடம் என்கிற மிக அடிப்படையான உரிமையை உயர்த்திப் பிடிப்பதற்கான வல்லமையை இந்தியா இழந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே எனக்கும் ஒரு இடம் போட்டு வையுங்கள் ஹூஸைன் என்று சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டுணர்வும் சுயமரியாதையுமுள்ளவர்கள் சொல்ல வேண்டி வருமோ என்ற கவலை எழுகிறது.

டெய்ல் பீஸ் : அரசியல் தன்மையுள்ள போராட்டங்களில் நடிக நடிகையரை கட்டாயப்படுத்தி பங்கெடுக்க வைப்பது குறித்து பாசமிகு தலைவருக்கு நடந்த பாராட்டு விழாவில் சில கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித். தமிழ்நாட்டில் இருப்பதை மறந்துவிட்டு இந்த மலையாளி இப்படி பேசலாமா என்று பேட்டைவாதம் கிளம்பியிருக்கிறது. தன் கருத்தில் தவறேதுமில்லை என்பதால் அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்றும் மனதிற்குச் சரியெனப்பட்டதை சொல்கிற சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சினிமாவுக்கே தலைமுழுகவும்கூட தயாராயிருப்பதாகவும் அஜீத் தெரிவித்துள்ளார். சென்னையை விட்டு வெளியேறி கேரளாவுக்கே போய்விடுவதென்ற அவரது முடிவை தமிழக தாக்கரேக்களும் தமிழ்ச்சேனாவினரும் கொண்டாடும் கேவலமும் நடந்தேறக்கூடும்.  –

- ஆசிரியர் குழு

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 farook 2010-03-18 05:42
உங்களின் கட்டுரை மிகவும் அருமை, ஆனாலும் ஒரு மதசார்பற்ற ஜன நாயக நாட்டில் பிறரின் வழிபாட்டு கலாச்சாரம் என்று நம்ப படுவதை தன் படைப்புகளால் ஒரு இனத்தாரின் உணர்வுகளை சீண்டுவதை கலை என்றோ ,முற்போக்குவாதம ் என்றோ எப்படி நியாயப்படுத்த முடியும்?
Report to administrator
0 #2 தமிழன் 2010-03-18 06:54
//மக்களைத் திரட்டும் பொறுமையும் ஜனநாயக வழிப்பட்ட போராட்டங்களில் நம்பிக்கையும் அற்ற இவ்வமைப்புகள் வதந்திகளையும் வன் முறையையுமே தமது வழிமுறையாகக் கொண்டுள்ளன.//

புரியவில்லை

மக்களை திரட்டும் பொருமையும், ஜனநாயக வழியில் போராட்டமும் நடத்தினால் இவர்கள் எதற்காக போராடுகிறார்களோ அதனை ஏற்றுக் கொள்வீர்களா?
Report to administrator
0 #3 ravi srinivas 2010-03-23 04:53
It will be good for India if the editorial group of Puthu Visai also moves to Qatar and never return to India.
Report to administrator
0 #4 ravi srinivas 2010-03-23 04:53
பிறந்த பூமியில்தான் உயிர் விடுவேன் என்று அடம் பிடித்து திரும்புமளவுக்க ு இந்த நாடு எப்போதாவது அவரை கௌரவமாக நடத்தி இருக்கிறதா?

India has treated him well. There are not many cases against him and he can seek anticipatory bail. The govt. is not against him. It did nothing against him. So why is he making a big fuss and why all this silly melodrama. He is after cheap publicity and enemies of India like the editorial group of Puthu Visai use that for expressing their anti-India views.Taslima was exiled from Kolkatta by the left front govt. What prevented this Puthu Visai from opposing it. I wont be surprised if the editorial group of Puthu Visai as a whole joins Talibans or LeT given their hatred for India. Khusboo faced cases and did not run away. Asgar Ali Engineer was attacked and did not seek asylum else where.
(I know that for Puthu Visai persons like Engineer are not secularists because they oppose the fundamentalism with which the left works together).
சகிப்புத்தன்மை, சாத்வீகம் மற்றும் சகோதரத்துவத்தின ் பிறப்பிடம் என்று வெற்று டப்பாவை உருட்டிக் கிடக்கிறது இந்தியா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அதன் அடைமொழிக்கு ஒரு அர்த்தமுமில்லை
Let the editorial group of Puthu Visai tell us what is their ideal country so that we can compare that with India, in freedom of expression,tole rance,minority rights.Is it China or Pakistan or Sri Lanka or Sudan. Why this editorial is silent about the goons who were after Paul Zakaria or the goons who are harassing a dalit auto-driver Chitralekha in Kerala.
Report to administrator
0 #5 Agilan 2010-03-30 13:33
புதுவிஸை ஒரு புதுநஸை!! ஹூச்சைன்காக, கருத்து சுதந்திரத்துக்க ாக, வாய் கிழிக்கும் இவர்கள், டச் நாட்டு படைப்பாளி முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றி வரைந்த போது எங்கே ஓடி ஒழிந்தார்கள்?? உருவ பொம்மை ஏர்ரிப்பு, கலாட்டா என்று நாம் கண்ட காட்சிகள் யாரும் மறக்க வில்லை..!! கேட்டால் அது சிறு பன்மியினரின் குமுரல்..!! நாங்க அதாயே பண்ணா இந்திய ஒரு ஊருப்புடாதா நாடு..!!!

அவ்வளவு காஷ்டதத்தோட நீங்க யாரும் இங்க இருக்க வேண்டிய அவசியமில்ல, எந்த இஸ்லாமிய நாட்டுல உரிம இருக்கோ அங்க போய் குடி அமரு!!

இவுர ஊட்ர இணொறு பீலா சங்கிரச்சாரி, நிதியானந்த வகயிரவ நாங்க கொண்டாட்றோம்!! பாவம் கலைஞர் குடுத்த டீவீ இவங்காள இன்னும் வந்து ஸெரல போல இரூக்கு..!! தப்பு பண்ணவன் எவானா இருந்தாலும் நாங்க கண்திப்போம். இவரு நம்ம காதுல சுட்தார பூ ஹூஸேந் வஞ்சிக்க பட்டவர்..!!

புடுவிசைக்கு விசயம் புரியல! நாங்க கலைஞர் உdர பீலா மட்டும் தான் நம்புவோம்..!!
Report to administrator
0 #6 Agilan 2010-03-30 13:34
Mr. Ravi Srinivas...befo re long you will be called a Tamil traitor and hounded in this forum as your name suggests you are a Brahmin or probably you chose to use that name....

in any case i agree with your views....IF INDIA is such a pain, then these guys should get out rather than use the same freedom that the country guarentees them against it..! They will have a tough time finding a better place...!
Report to administrator

Add comment


Security code
Refresh