பெரியாரின் எழுத்துக்களும், பேச்சுக்களும் 1917களிலிருந்து பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது. சுதேசமித்திரன், தமிழ்நாடு, நவசக்தி, ஸ்வராஜ்ய, இந்து போன்ற இதழ்களில் 1925களின் துவக்கத்தில் பதிவாகியுள்ளது. காரணம் அதுவரை தந்தை பெரியார், ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் என்ற காங்கிரஸ்காரர். 1925களிலிருந்து அவர் எல்லா பத்திரிகைகளிலும் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் காங்கிரஸை, காந்தியை, சாதியை, மதத்தை, கடவுளை ஒழிக்கப் புறப்பட்ட, பகுப்புரிமை பேசிய, சுயமரியாதைக்காரர் ராமசாமிப் பெரியார். எனவே, 25களில் (1949 வரைக்கும்) ‘குடிஅரசு’ துவக்குகின்றார். அரசாங்கம் அதைத் தடை செய்கின்றபோது, “எங்கு குடிஅரசுக்குத் தடையேற்படுகின்றதோ அங்கு புரட்சி வெடிக்கும்’’ என்று சொல்லி ‘புரட்சி’ துவக்குகின்றார். புரட்சியும் தடைபட, மீண்டும் குடிஅரசு, பிறகு ‘பகுத்தறிவு’, ரிவோல்ட் ‘விடுதலை’ (விடுதலைக்கு இப்போது பவளவிழா ஆண்டு!) 1970 களில் உண்மை, 1971இல் மார்டன் ரேஷனலிஸ்ட்.

 பெரியார் இதழாளராக மட்டுமல்ல, வெளியீட்டாளராகவும் விற்பனையாளராகவும் இருந்து, தன்னுடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் நூல்வடிவத்தில் பதிப்பித்துள்ளார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமல்லாத பல பதிப்பகங்களும், தனிநபர்களும் பெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பதிப்பித்துள்ளார்கள் பெரியாரின் வாழ்த்துரைகளோடு!

பொதுமக்களிடமிருந்து பங்குதொகை பெற்று 1932களில் ஈரோட்டில், பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் லிமிடெட் என்ற வெளியீட்டகத்தைத் துவக்கி முதலில் “பெண் ஏன் அடிமையானாள்?’’ நூலினை வெளியிடுகின்றார். இதுதான் பெரியார் நூலுக்கென்றே எழுதிய நூல். இன்னும் பலமொழிபெயர்ப்பு நூல்களையும், பெரியாரின் எழுத்துக்களையும் பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் லிமிடெட் வெளியிடுகின்றது. ஆண்டுதோறும் ‘மகாசபை’ நடத்தி பங்குதாரர்களிடம் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. (1932, 33, 34 குடிஅரசுகளில் காணலாம்) அவற்றிற்கு அந்த பங்குதார்களைத் தவிர வேறு யார் உரிமையோ, தடையோ கோர முடியும்?

 ஆண்டு தலைப்பு வெளியீடு*

1928 வைக்கம் வீரர் சொற்பொழிவு 1

1929 இராமயண ஆபாசம் 4

1929 முன்னேற்றம் (மதிப்புரை) 4

1930 கர்ப்ப ஆட்சி (முன்னுரையும் முடிவுரையும்) 2&11

1931 சீர்திருத்த மாநாட்டு உபந்யாசம் 2&11

1931 கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை (முன்னுரை) 2

1932 இலங்கை உபந்யாசம் 2

1932 சத்தியாகிரகமா? சண்டித்தனமா? 2

1933 லெனின் மதமும் (மொழி பெயர்ப்பு) 2

முன்னுரை ஈ.வெ.ரா., எஸ். இராமநாதன்)

1933 பொதுவுடமை தத்துவங்கள் (முடிவுரை) 2

1934 பெண் ஏன் அடிமையானாள்? 5

1934 தர்ம பரீட்சை அல்லது புராண ஆபாசம் 2

1934 சோதிடப்புரட்டு 2

1934 குடிஅரசு கலம்பகம் _ 1ம் பாகம் 5

1934 பிரகிருதிவாதம் 5

1934 கைவல்ய சாமியார் கட்டுரை (மதிப்புரை) 2

1935 மறுப்புக்கு மறுப்பு (முகவுரை) 2

1935 இதுதான் மகாமகம் 2

1936 சோதிட ஆராய்ச்சி (ஈ.வே.ரா மற்றும் 2

Dr. R.P. பராஞ்சிபே, M.A.,D.Sc., தி.அ வேங்கிடசாமிப் பாவலர்) 6&2

1937 விவாக விடுதலை (மறுபதிப்பில் முன்னுரை) 2

1937 கலைக்கியானம் அல்லது கைவல்யசாமியார் 2

கட்டுரை (2ம் பாகம்) (முன்னுரை)

1938 இந்திப்புரட்டுகட்டுரைகள் மற்றும் 2

மாஜி சென்னை கவர்னர் கே.வி. ரெட்டிநாயுடு கட்டுரைகள்

1939 தமிழ்நாடு தமிழருக்கே 2

1940 திருவாரூர் மாநாட்டுத் தலைமையுரை 2

1943 இனிவரும் உலகம் 2

1943 இதிகாசங்களின் தன்மைகள் 6

1943 இளைஞர்களுக்கு அழைப்பு 2

1943 பெரியார் ஈ.வெ.ராவின் திருச்சிப்பிரசங்கம்

மற்றும் ஈரோடு திரவியம் 2

1944 பணம் பிடுங்கிப்பார்ப்பனர் - ஈவேரா

1944 இராமயணப் பாத்திரங்கள் 6

1944 தமிழிசை, நடிப்புக்கலைகள் 6

1944 அறிவின் எல்லை (பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுப்பு) 2

1944 கிராம சீர்திருத்தம் 2

1944 கிராம சீர்திருத்தம் (7-ம் பதிப்பு) 7

1946 உண்மைத்தொழிலாளி யார்? 2

1946 தொழிலாளர் இயக்கம் தான் திராவிடர் கழகம் 2

1946 இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து 2

1947 தத்துவ விளக்கம் 2

1947 பகுத்தறிவு வேலி போடாதே 8

1947 நமக்கு வேண்டியது எது? சமதர்மமா? 2

சுயராஜ்யம் யாருக்கு (பதிப்புரை)

1947 வெளியேறு 8

1948 விழாவும் நாமும் 9

1948 தில்லையில் சொற்பொழிவுகள் 10

1948 திராவிடர் கழக இலட்சியம் 2

1948 திராவிடர் - ஆரியர் உண்மை 2&11

1948 இலட்சியவரலாறு (முன்னுரை) 2

1948 பகுத்தறிவும் திராவிடர் கழகமும் 2

1948 திருக்குறளும் பெரியாரும் 12

1948 திருக்குறளும் மனுதர்மமும் 13

1948 திருவள்ளுவர் பற்றி பெரியார் 14

1948 மொழி - எழுத்து 2

1948 மொழியாராய்ச்சி 12

1948 இந்துமதமும் காந்தியாரும் - பெரியாரும் 12

1948 இந்தி போர் முரசு 2

1948 தூத்துக்குடி மாநாட்டுத் தலைமையுரை 2

1948 இந்துமத ஆசார ஆபாசதர்சணி (மதிப்புரை) 15

1949 திருக்குறளும் திராவிடர் கழகமும் 2

1949 மேல்நாடும், கீழ்நாடும் 12&11

1949 பொன் மொழிகள் (காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது) 10

1949 திராவிடர்க்கு மதம் எது? 15

1950 வகுப்புவாரி உரிமை ஏன்? (கம்யூனல் ஜீ.ஓ) 2&1

1950 திருமணம் பற்றிப் பேரூரை 16

1951 சிலப்பதிகாரமும் ஆரியக்கற்பனையும் (மதிப்புரை) 17

1952 தென்பகுதி இரயில்வேமென் யூனியன் திறப்பு 18

விழா சொற்பொழிவு

1952 திராவிட விவசாய தொழிலாளர் கழக 19

அமைப்பு நோக்கங்கள் (திராவிடர் கழக மத்திய செயற்குழு)

1953 புரட்டு, இமாலயப்புரட்டு 20

1953 போர் சங்கு 21

1954 புரட்சிக்கு அழைப்பு 22

1956 யார் துரோகிகள் 6

1956 முதலாளி - தொழிலாளி ஒற்றுமைப் பிரச்சனை 2

1956 ஆசிரியர் பயிற்சிப்பள்ளித் திறப்பு விழா 22

1957 புத்த நெறி (1970ல் சிந்தனையாளர் கழகம் திருச்சி) 5

1957 சிந்தனைத் திரட்டு (தொகுப்பு கி. வீரமணி) 7

1957 கடவுள் 27

1957 காந்தியார் படத்தை எரிப்பது ஏன்? 5

1957 பொன்மொழிகள் எழுத்தும் - பேச்சும் 24

1957 தஞ்சை திராவிடர் கழக தனிமாநாட்டுத் தலைமையுரை 5

1957 புராண ஆபாசங்கள் 2

1957 சிறை புகுமுன் அறிக்கை 21

1957 அய்க்கோர்ட அவதூறு வழக்கில் பெரியார் 21

ஸ்டேட்மெண்டும், தீர்ப்பும்

1957 மொழியும் அறிவும் 2

1958 சித்திரபுத்திரன் எழுதுகிறார் 5

1958 நாடகமும், சினிமாவும் நாட்டை நாசமாக்கு கின்றன. 21

(பெரியார் ஈ.வெ.ரா குத்தூசி குருசாமி, ழிஷிரி., வி.ஸி. ராதா கட்டுரைகள்)

1958 வாழ்க்கை ஒப்பந்தம் 21

1958 குறளும் வாழ்வும் 2&5

1958 யார் இந்தப் பார்ப்பனர்கள் 25

(பெரியார் ஈ.வெ.ரா மற்றும் பிறரின் கருத்துத்தொகுப்பு)

1958 மதமும் அரசியலும் 2

1959 நீதி கெட்டது யாரால்? 5

1959 சித்திரபுத்திரன் கட்டுரைகள் 5

1959 The RAMAYANA - A True Reading 26

1959 Philosophy 27

1959 முனிசிபல் தேர்தல் 21

1959 எந்த சாதி காப்பாற்றப்பட வேண்டும் 5

1959 ஜனநாயகம் 5

1960 கந்தபுராணமும் இராமயணமும் ஒன்றே 5

1960 பார்ப்பனர் தொல்லை 2

1960 அறிவுச்சுடர் 2-&11

1960 சுதந்திரத் தமிழ்நாடு ஏன்? 2

1960 வாழ்க்கைத் துணை நலம் 2ம் பாகம் 5

1960 தாய்ப்பால் வைத்தியம் 5

1960 காமராசரை ஏன் ஆதரிக்க வேண்டும்? 23

1960 சாதி ஒழிப்பு புரட்சி 2

1960 தமிழும், தமிழ் இலக்கியங்களும் 5

1960 தமிழருக்குச் சோதனைக்காலம் 5

1960 முதலாளி ஒழிக 8

1961 சாதி ஒழிப்பு 2

1961 அய்க்கோர்ட்டின் நீதிப்போக்கு 2

1961 ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் 2

1961 தமிழ்நாடா? திராவிடநாடா? 2

1961 மனுநீதி - ஒரு குலத்துக்கு ஒரு நீதி 2

1961 பார்ப்பனர்கள் 28

1961 தீண்டாமையை ஒழித்தது யார்? 28

1961 ஆச்சாரியார் ஆத்திரம் 28

1961 நான் காங்கிரசில் சேர்ந்துவிட்டேனா? 28

1962 சமுதாய சீர்திருத்தம் - எனது தொண்டு 21

1962 கண்ணீர் துளிகளும், கம்யூனிஸ்டுகளுக்கும் எச்சரிக்கை 23

1962 புரட்சி 23

1962 சுயநலம் - பிறநலம் 23

1963 இந்துமதப் பண்டிகைகள் 11

1963 மாறுதலும், பகுத்தறிவும் 5

1963 புராணம் 2

1963 இந்தியும் ஆச்சாரியாரும் (பெரியார் ஈ.வே.ரா. கி. வீரமணி) 2

1963 இராஜாஜி 2

1963 மதுவிலக்கின் இரகசியங்கள் 2

1963 கழகமும் துரோகமும் 2

1964 மனிதனும் மதமும் 11

1964 பார்ப்பன நீதி 5

1964 ஏன் இல்லை? எல்லோருக்கும் கல்வி, உணவு, உடை, வீடு 5

1964 திருந்திய திருமணம் 28

1964 இராமயணக் குறிப்பு 2

1964 இதிகாசங்கள் புகட்டும் நீதி 2

1965 அறிவு விருந்து 21

1965 இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி ஓர் நிலைமை விளக்கம் 45

1965 கிளர்ச்சிக்குத் தயாராவோம் 21

1965 இன்றைய ஆட்சி நிலை 21

1965 வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 21

(பெரியார் ஈ.வெ.ரா, வே. ஆனைமுத்து)

1965 Social Reform of Social Revolution 21

1966 சமதர்மம் 21

1967 காமராசர் கொலை முயற்சி சரித்திரம் (முகவுரை) 21

1968 தமிழும், தமிழரும் 29

1968 அறிவு விருந்து பாகம்_2 11

1968 உண்மை முன்னேற்றத்தின் வழி 22

1968 தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டு உரை 11

1969 மதச்சார்பின்மையும் நமது அரசும் 11

1969 கடவுளும் மனிதனும் 30

1969 கடவுள் குழப்பம் 11

1970 வானொலியில் பெரியார் 11

1970 நமது இன்றைய நிலையும், பரிகாரமும் 11

1970 தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் ஏன்? 21

1971 கடவுள் கற்பனையே 11

1971 பெரியார் பேசுகிறார் 32

1971 பெரியார் குரல் (தொகுப்பு) 3

1971 கடவுள் மறுப்புத் தத்துவம் 11

1972 கோவில் பகிஷ்காரம் ஏன்? (பெரியார் ஈ.வெ.ரா, கி. வீரமணி) 11

1972 உயர் எண்ணங்கள் 11

1973 உயர் எண்ணங்கள் 11

1974 இந்து மதப்பண்டிகைகள் 11

1974 நவமணிகள் 11

1974 மரணசாசனம் இறுதிச் சொற்பொழிவு 11

1975 சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? 11

1975 உயர் எண்ணங்கள்-3 11

1976 சோதிடம் 11

1976 பெரியார் - ஒரு வாழ்க்கை நெறி 11

(தொகுப்பு கவிஞர். கலி. பூங்குன்றன்)

1977 நமது குறிக்கோள் 11

1977 பகுத்தறிவுச் சுடரேந்துவீர் 11

1977 மனுநீதி 11

1978 தந்தை பெரியார் அறிவுரை 100 11

1978 எழுத்துச் சீர்திருத்தம் 11

1979 பெரியார் பொன்மொழிகள் 48

 1979 PERIYAR AND HIS IDEOLOGIES 11

1980 COLLECTED WORKS OF THANTHAI PERIYAR 11

1981 GOLDEN SAYINGS OF PERIYAR - Trans. A.S.VENU 11

1981 MAN AND RELIGION - Tran A.S.VENU 11

1981 MANU - The code of Injustice to non-brahmins - Tran A.S.VENU 11

1981 GOD AND MAN - Tran A.S.VENU 11

1981 THE WORLD TO COME - Tran A.S.VENU 11

1981 UNTOUCHABILITIY - Tran A.S.VENU 11

1981 FAMILY PLANNING - Tran A.S.VENU 11

1981 THE GENESIS OF SELF RESPECT MOVEMENT - Tran A.S.VENU 11

 1983 அபாயச்சங்கு (தொகுப்பு வே. ஆனைமுத்து) 32

1983 சமதர்மம் சமைப்போம் (தொகுப்பு) வே. ஆனை முத்து 32

1983 சுயமரியாதைத் திருமணம் ஏன்? 34

1983 விடுதலைக் கேள்விகள் (தொகுப்பு) 35

1984 இந்த சந்தர்ப்பம் மறுபடியும் வராது 36

1986 தந்தை பெரியாரின் சிந்தனைகள் 37

1987 தமிழன் தாழ்மைக்குக் காரணம் என்ன? 38

1987 ஈ.வே. ராவுக்குத் தோன்றியது (சுயசரிதை) 38

1990 இனத்துரோகி கம்பன் 39

1992 PERIYAR WOMEN'S RIGHT - Tran A.S.VENU 40

1993 தந்தை பெரியாரின் இறுதிச் சொற்பொழிவு 32

வே. ஆனைமுத்து சென்னை.

1993 தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை 34

1997 பெரியாரின் அயல்நாட்டுப் பயணக் 41

குறிப்புகள் (தொகுப்பு வே. ஆனைமுத்து)

1998 தந்தை பெரியார் சிந்தனைக்களஞ்சியம் 42

இரண்டு தொகுதிகள் தொகுப்பாசிரியர்,

புலவர். த. கோவிந்தன் டி.லிட்.

2001 வைக்கத்தில் நடந்தது என்ன? (கட்டுரைத் தொகுப்பு) 6

2003 உண்மை இராமயணம் தொகுப்பு வே.ஆனைமுத்து 32

2003 சங்கராச்சாரியாரும்காந்தியும் தொகுப்பு வே.ஆனைமுத்து 32

2003 ராமாயண ஒரு ஹெட்டு கதை (மலையாளம்) 32

2003 தந்தை பெரியாரின இறுதிச் சொற்பொழிவு 43

பதிப்பு நாத்திகம் பி. இராமசாமி

1974 பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி 1 32

1974 பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி 2 32

1974 பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி 3 32

1977 பெரியார் களஞ்சியம் தொகுதி 1 11

1978 பெரியார் களஞ்சியம் தொகுதி 2 11

1979 பெரியார் களஞ்சியம் தொகுதி 3 11

1981 பெரியார் களஞ்சியம் தொகுதி 4 11

1991 பெரியார் களஞ்சியம் தொகுதி 5 11

1991 பெரியார் களஞ்சியம் தொகுதி 6 11

2004 பெரியார் களஞ்சியம் தொகுதி 7 11

2005 பெரியார் களஞ்சியம் தொகுதி 8 11

2005 பெரியார் களஞ்சியம் தொகுதி 9 11

2005 பெரியார் களஞ்சியம் தொகுதி 10 11

2005 பெரியார் களஞ்சியம் தொகுதி 11 11

2005 பெரியார் களஞ்சியம் தொகுதி 12 11

2005 பெரியார் களஞ்சியம் தொகுதி 13 11

2005 தந்தை பெரியாரின் பொதுவுடமை 44

2005 இனி வரும் உலகம் (பிரன்ஞ் மொழியில்)

2005 பெண் ஏன் அடிமையானாள்? (பிரன்ஞ் மொழியில்)

குடிஅரசு 1925 பெரியாரின் எழுத்தும் 46

பேச்சும் தொகுப்பு 1

குடிஅரசு 1926 பெரியாரின் எழுத்தும் 47

பேச்சும் தொகுப்பு 2

குடிஅரசு 1926 பெரியாரின் எழுத்தும் 47

பேச்சும் தொகுப்பு 3

 பக்தியின் புரட்டும் பிரார்த்தனை மோசடியும் 47

அம்பேத்காரும் இந்துமதமும் 47

சபாஷ் அம்பேத்கார் 47

பெரியாரின் உவமைகள் 47

கடவுள் 47

என் திருமணம் 47

நீதிக்கட்சிப் பனகல் அரசர் வாழ்வும் தொண்டும் 47

 

 கன்னட மொழியில் பிரசுரமானவை:

வெளியீடு: சித்தகாச் சாவடி சிந்தனையாளர் கழகம், கர்நாடகம்.
மொழிபெயர்ப்பு:வேமண்ணா

தத்துவ விளக்கம்
அய்ந்து பதிவிரதை மால்கள்
புண்ணியத்தலங்களின் புரட்டு
புளியோதரைப் பார்ப்பானின் கடவுள்
ஆயுதபூசை அறிவுக்குகந்த பூசையா?
பெண்களைப் பற்றி பெரியார்
10 அவதாரங்களின் புரட்டு
புளியோதரைப் பார்ப்பானின் வருமானத் தந்திரம்
சோசலிசம் பெரியார் பார்வையில்
இனிவரும் உலகம்
கோவில்கள் தோன்றியது ஏன்?
பெரியார் பார்வையில் விபச்சாரம் என்றால் என்ன?
விபூதி அணிவதேன்?
பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கட்டுரை
கோவில்கள் தோன்றியது ஏன்? _2
விபூதி அணிவது ஏன்? _2
பெரியார் பார்வையில் விபச்சாரமென்பது என்ன? _2
ராமாயண பாத்திரங்கள்
மொழிபெயர்ப்பு பேரா. நஞ்சுண்டசாமி
பெரியாரின் எழுத்தும் பேச்சும்

தொகுப்பு : முனைவர் விருபாக்ஷ பூசார அள்ளி
வெளியீடு: தலித் அத்யாயன பீடம், கன்னடப்
பல்கலைக்கழகம், மைசூர்.


*அடிக்குறிப்புகள் (பதிப்பகங்கள் எண் வாரியாக)

1. தென்னிந்திய நலவுரிமை சங்கம், காரைக்குடி
2. குடி அரசு பதிப்பகம், ஈரோடு
3. முல்லை பதிப்பகம்.
4. திராவிடன் பதிப்பம், சென்னை.
5. பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிடெட், ஈரோடு
6. பகுத்தறிவு வெளியீடு, சென்னை.
7. சிந்தனை பண்ணை, தஞ்சை
8. கூத்தரசன் பதிப்பகம், சென்னை.
9. ஞாயிறு நூற்பதிப்பம், சென்னை
10. திராவிட மணிப்பதிப்பகம், சென்னை.
11. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்.
12. வள்ளுவர் பதிப்பகம், பவானி.
13. கலை பதிப்பகம், சென்னை.
14. சிந்தனைப் பதிப்பகம், தாராபுரம்.
15. அறிவியக்க நூற்பதிப்பகம், சென்னை.
16. கி.விசுவநாதன் தம்மம்பட்டி
17. பகலவன் பாசறை, சென்னை.
18. இரயில்வேமென் யூனியன்
19. திராவிடர் பிரஸ் சென்னை.
20. பெரியார் தன்மானப் பிரச்சார நிலையத்தார், திருச்சி
21. விடுதலைப் வெளியீடு, சென்னை.
22. தமிழன் அச்சகம், ஈரோடு
23. அறிவுக்கடல் பதிப்பகம், மதுரை
24. திராவிடர் கழகம், கல்கத்தா.
25. திராவிடர் மாணவர் கழகம், மதுரை
26. ஸிணீtவீஷீஸீணீறீ விணீநீவீst ஜீuதீறீவீநீணீtவீஷீஸீ, விணீபீணீக்ஷீணீs.
27. ரிணீக்ஷீtஸீணீபீணீரீணீ பீக்ஷீவீஸ்வீபீணீஸீ கிssஷீநீவீணீtவீஷீஸீ.
28. தென்னார்காடு மாவட்ட தி.க. சிதம்பரம்
29. சிந்தனை சுடர் வரிசை, சென்னை.
30. சி.பி.சர்வாதிகாரி, இரும்புலிக்குறிச்சி.
31. தம்பி பதிப்பகம், சென்னை _2
32. அண்ணா சிந்தனை பேரவை, கோவை.
33. மார்க்சிய பெரியாயரிய பொதுவடமைக்கட்சி, சென்னை.
34. தி.க. வெளியீடு
35. பெரியார் பாசறை, பெரம்பலூர்.
36. பெரியாரியல் குடும்பங்கள் நட்புறவுச்சங்கம், குடந்தை.
37. பாரதி பதிப்பகம், சென்னை.
38. பெரியாரியக்கம் பகுத்தறிவாளர் கழகம், தஞ்சை.
39. திராவிடர் கழகம், கோவை.
40. எமரால்ட் பதிப்பகம், சென்னை.
41. பெரியார் நூல் வெளியீட்டகம், சென்னை.
42. கவிதா பப்ளிகேசன்ஸ், சென்னை.
43. நாத்திகம், சென்னை.
44. வ.உ.சி. நூலகம், சென்னை.
45. உண்மை விளக்கப்பதிப்பகம், சென்னை.
46. தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
47. சிந்தனை பதிப்பகம், திண்டுக்கல்.
48. அ.தி.மு.க. அரசால் தடை நீக்கப்பட்டு   செய்திமக்கள் தொடர்பு துறை வெளியீடு.
பதிபிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடவில்லை.

Pin It