மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான தெனாலி ராமன் திரைப்படம் பலத்த எதிர்ப்புகளைத் தாண்டி திரைக்கு வந்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு இந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தெனாலிராமன் திரைப்படம் மூலம் தனது இரண்டாவது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

thenaliraman36 மனைவிகள், 52 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக மன்னன் விகடபுரம் பகுதியை ஆட்சி செய்து வருகி றான். மன்னரின் எண்ணங்களுக்கு எதிராக மந்திரிகள் செயல்பட்டு மக்களுக்கு துன்பத்தைத் தருகின்றனர். மன்னனைக் கொல்ல கிளர்ச்சியாளன் தெனாலிராமன் மந்திரிசபையில் சேருகிறான். தெனாலிராமன் மன்னனைக் கொன்றானா? மந்திரிகளுக்குத் தண்டனைக் கொடுத்தானா? என்பது தான் தெனாலிராமன் படத்தின் கதை.

தெலுங்கு அரசர் கிருஷ்ணராய தேவராயர் அரசவையில் விகடகவியாக இருந்த தெனாலிராமன் கதைகளிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டு, அயல்நாட்டு முதலீடுகளால் மண்ணின் மக்களுக்கு வரும் பேராபத்துக்களை உணர்த்தும் வகையில் தெனாலிராமன் திரைப்படம் வெளிவந்துள்ளது. தெனாலிராமனின் முழு வரலாற்றைச் சொல்லும் திரைப்படம் அல்ல இது.

ஆனால் இப்படம் தெலுங்கு அரசரை இழிவு படுத்துகிறது. படத்தினை வெளியிடக் கூடாது என்று சில தெலுங்கு அமைப்புகள் தடை கோரின. பழந்தமிழர் மக்கள் கட்சியின் மாநிலப்பொதுச் செயலாளர் வீரக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளு படி செய்தனர்.

வரலாற்றை அப்படியே சினிமாவாக எடுக்க வேண்டும் என எந்தச் சட்டத்திலும் கூறவில்லை. வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் அவரது உண்மை யான வரலாறு கூறப்படவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்கள்.

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்புத் தலைவர் ஜெகதீஸ்வரர் ரெட்டி. அனைத்திந்திய தெலுங்கு சம் மேளத் தலைவர் சி.எம்.கே.ரெட்டி. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவைத் தலைவர் பாலகுருசாமி உள்ளிட்ட தெலுங்கு அமைப்பினர் தமிழக ஆளுநர் ரோசய்யா அறிவுரையின் படி நடிகர் வடிவேலு உள்ளிட்ட தெனாலிராமன் படக்குழுவினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலகாட்சிகள் மௌனிக் கப்படும் என்ற நிபந்தனையுடன் இப்படம் வெளிவந்துள்ளது.

H2O என்ற கன்னட திரைப்படத்தில் கதைப்படி வரும் தமிழ்க் கதாபாத்திரம் பேசும் தமிழ் வசனங்களை எதிர்த்து கன்னடர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பாண்டிநாட்டு நாயே முல்லைப் பெரியாறு தண்ணீர் கேட்குறியா? என்று மலையாளப் படத்தில் மலையாளிகள் தமிழர்களை ஏசுகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வரும், சட்ட மன்ற உறுப்பினர்களும் தெலுங்கில் பேசுகிறார்கள், தெலுங்கு முதலமைச்சர் ராசசேகரரெட்டிக்கு சட்ட மன்றத்தில் இரங்கல் தெரிவித்து அரசுமரியாதை செலுத்துகிறார்கள். தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி) அரசுவிடு முறையாக தமிழ்நாட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. தெலுங்கு தமிழ்நாட்டில் இரண்டாவது ஆட்சிமொழியாக வேண்டும் என்று தெலுங்கு அமைப்பினர் கோருகிறார்கள்.

தமிழினத்திற்கு எதிரான இந்த அரசியல் நிலைமைகளைப் புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டிய தமிழக அரசு. தமிழர்கள் மீதுதாக்குதல் நடத்துகிறது. பிற மொழியினரும் இப்படிப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட தமிழ் படைப்புகளுக்குத் தடைகோருகிறார்கள். இத் தடைகளை மீறி தெனாலிராமன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

இலஞ்சம் கேட்கிற தலைமைக் காவலாளிக்கு பரிசாக சவுக்கடிகள் வாங்கித் தருவது, திருடர்களைக் கொண்டு கிணற்றை தூர் வாருவது, பானைக்குள் யானையைக் காட்டுவது. தன்னை சாகடிக்க நினைக்கும் அரசரையும், அரண்மனை நாவிதர் மற்றும் அமைச் சர்களையும் தனக்கு துணையாக அழைத்து தப்பிப்பது, எல்லாம் நன்மைக்கே என்று பிரச்சனைகளை எதிர்கொள்வது போன்ற தெனாலிராமன் கதைகளை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

குழந்தைகளை ஈர்க்கும் வகையில் நடிகர் வடிவேலு அற்புதமாக நடித்துள்ளார்.

அம்புலி மாமா, வாண்டு மாமா கதைகள், ஈசாப் கதைகள், பீர்பால் கதைகள். முல்லா கதைகள். மரியாதை ராமன். தெனாலிராமன் கதைகள் படித்து வளர்ந்த தலைமுறை வேறு.

இன்றைய குழந்தைகள் சக்திமான். ஸ்பைடர் மேன். பென்டென். நிஞ்சாமூட்டோரி. சோட்டாபீம் (குட்டி பீமன்) கதைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிரிக்கவும், சிந்திக்கவும், அறிவை விரிவாக்கவும் பயன்பட வேண்டிய தன்மைகளிலிருந்து விடுபட்டு இன்றைய குழந்தைகளுக்கு வில்லன் ஒருவனை சித்தரித்து அவனை ஏமாற்றி வெற்றி பெறுவது, பொய் சொல்ல பழகுவது, பழிவாங்கும் தன்மையுடைய கதைகளை சொல்லி வருகிற நிலையில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய வகையில் தெனாலிராமன் கதைகள் கையாளப்பட்டுள்ளது சிறப்பு.

விகடபுரத்தின் மன்னனாகவும், தெனாலிராமனா கவும் இரட்டைவேடங்களில் வடிவேலு மிகச் சிறப்பாக நடித்துள்ளார். குழந்தையாக அழுது வடிவேலு நடிக்கும் காட்சி அருமை.

முற்பகுதி குழந்தைகளுக்காக என்றால் பிற்பகுதி வெளியார் சிக்கலைப் பேசுகிறது.

விகடபுரத்தின் அமைச்சர்கள் சீன வணிகர்களுடன் ஒப்பந்தம் போட்டு சீன வணிகர்களை அழைத்து வருவார்கள். சீன வணிகர்களின் வருகைக்குப் பின்னர் விகடபுரத்தின் மக்கள் எந்த நிலைக்குப் போய் சீரழிகிறார்கள் வெகு சிறப்பாக நமக்கு உணர்த்துகிறார்கள்.

மன்மோகன் அரசு சில்லரை வர்த்தகத்தில் அயல் நாட்டுமுதலீடு 51 விழுக்காடு வரை அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. வடஅமெரிக்காவின் வால்மார்ட் (Walmart). பிரிட்டனின் டெஸ்கோ (Tesco). பிரான்சின் கேர்ஃ போர் (Carefore) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடப் போகின்றன.

ரிலையன்ஸ், பிர்லா போன்ற வடநாட்டு நிறுவ னங்கள் தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு பேரழிவை உருவாக்கிகொண்டுள்ளன. இந்நிலையில் பன்னாட்டு. வடநாட்டு நிறுவ னங்கள் சில்லரைவர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்று நாம் போராடி வருகிறோம் அன்னிய முதலீடுகள் வந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும். சம்பளம் கூடுதலாக கிடைக்கும் என்றெல் லாம் பரப்புரைகள் செய்கிறார்கள். இந்த பொய்ப் பரப்புரைகளை தவிடு பொடியாக்கு கிறது தெனாலிராமன் திரைப்படம். சீனாக்காரன் வருகைக்கு பின் மண்ணின் மைந்தன் நடுத்தெருவில் நின்று பிச்சையெடுக்கிறான். பெரிய வணிகனாக இருந்தவன். மூட்டைத் தூக்கி பிழைக்கிறான். சொந்த இடத்தை இழந்து மண்ணின் மக்கள் தெருவில் வசிக்கின்றனர்.

மண்ணின் மக்கள் படும் கொடுமைகளை அனை வரும் உணரும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ள இயக் குனர் யுவராஜ் தயாளன் பாராட்டுக்குரியவர். வணிகம் செய்ய வந்து தாயகத்தை கைப்பற்றிய சீனர்களை விகடபுரத்து மக்கள் அடித்து விரட்டும் படத்தின் காட்சி முத்தாய்ப்பான ஒன்று.

தமிழகத்தில் ஆக்கரமிப்பு செய்துள்ள வடவர் களை, மலையாளிகளை மற்றவர்களைநாம் அடித்து விரட்டும் போதுதான் நமது தாயகமும் காப்பாற்றப் படும். நம்முடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும் என்பதை நாம் உணரவேண்டும். அயலவர்களை அடித்து விரட்ட வேண்டும் என்ற உணர்வை தெனாலிராமன் திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.

வசனகர்த்தாஆரூர் தாஸ், கலை இயக்குநர் பிரபாகரன், இசையமைப்பாளர் இமான் ஆகியோரும் பாராட்டிற்குரியவர்களே!

இம்சை அரசன் 23ம் புலிகேசிபடத்தின் சாயலை தவிர்த்திருக்கலாம். “அமைதிவணக்கம் செலுத்தும் காட்சியை’’ இவ்வளவு ”அசிங்கப்படுத்தியிருக்க கூடாது.

Pin It