arvind gejriwal pon radhakrishnan

ஆம் ஆத்மிக் கட்சி வெற்றி பெற்றிருப்பது, புதிய சமூக மாற்றத்திற்கான எழுச்சி என்று கருதலாமா?

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக் கட்சியால் காங்கிரசு அடியோடு வீழ்த்தப்பட்டதும், பா.ச.க. படுதோல்வி கண்டதும் முற்போக்காளர்கள், தமிழின உணர்வாளர்கள் போன்றவர்களுக்கு மகிழ் வூட்டக்கூடிய முடிவுகளாகும். ஆனால், ஆம் ஆத்மிக் கட்சி என்பது காங்கிரசு மற்றும் பா.ச.க.வின் குட்டி வடிவம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1. பா.ச.க., காங்கிரசுக் கட்சிகளைப் போலவே ஆம் ஆத்மிக் கட்சி இந்தியத் தேசிய வெறி -மற்றும் இந்தி வெறிக் கட்சி. இந்தியாவின் பல்தேசிய இனத் தொகுப்பை மறுப்பவை.

2. தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 70 வேட்பாளர்களில் 24 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த 24 பேரில் 23 பேர் ஆம் ஆத்மிக் கட்சிக்காரர்கள்; ஒருவர் பா.ச.க.

3. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களில் 44 பேர் கோடீசுவரர்கள். இவர்களில் 11 பேர் ரூ. 10 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள். இவர்களில் மிகப்பெரும் பாலோர் ஆம் ஆத்மிக் கட்சியினர்.

“நல்ல வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்காமல் கறைபடித்த 20 பேர்க்கு வாய்ப்புக் கொடுத்தார்” என்று ஆம் ஆத்மியை உருவாக்கியதில் பங்கு வகித்த சாந்தி பூசன் இப்போது குறைபட்டுக் கொள்கிறார்.

ஆம் ஆத்மி வெற்றி பெற்றவுடன், தமிழ்நாட்டின் ஆம் ஆத்மி தான்தான் என்று வாசன் காங்கிரசு - பா.ம.க போன்றக் கட்சிகள் கூறிக் கொண்டுள்ளன. ஆம் ஆத்மி கொள்கை என்ன? இக்கட்சிகளின் கொள்கை என்ற பகுப்பாய்வு எதுவுமின்றி பதவி ஆசையால் பகற்கனவு காண்கின்றன.

தமிழ்த் தேசியர்கள், தமிழின மக்கள் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து எதிர்பார்க்க எதுவுமில்லை!

தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்று இப்போது, திரு. விக்னேசுவரன் வடக்கு மாநிலப் பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பயன்தருமா?

இத்தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டு வந்தவர் வடக்கு மாநிலப் பேரவை உறுப்பினர் சிவாஜிலிங்கம். எப்படியோ தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள், அனைவரும் ஆதரித்து இனப்படுகொலைத் தீர் மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள்.

இப்பொழுது ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைக் குற்றங்கள்தான் என்றும், அவை குறித்துப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தமிழ்நாட்டிலிருந்து, சிங்கள அரசு நடத்திய தமிழினப் படுகொலைக் குற்றங்களை பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் விசாரிக்க வேண்டும் என்று தமிழகத்திலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழர்கள் 2009லிருந்து எழுப்பி வரும் கோரிக்கைக்கு இத்தீர்மானம் வலுச்சேர்க்கும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டணி இவ்வளவு பின்தங்கியிருப்பது கொடுமையிலும் கொடுமை!

அடுத்து வடக்கு மாநிலக்குழு - ஈழம் குறித்துப் பன்னாட்டுப் பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால் மேலும் உதவியாக இருக்கும்.

தமிழக மீனவர்களின் 81 படகுகளைத் திருப்பித்தர இலங்கை அரசு முன்வந்துள்ளது புதிய அரசின் நல்லிணக்க நடவடிக்கையாகக் கருதலாமா?

சிங்களக் கப்பற்படை கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களின் 81 படகுகளைத் திருப்பித்தரும் முடிவு எந்தச் சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ளது?

இலங்கையின் புதிய குடியரசுத் தலைவர் சிறிசேனா - தமது முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவில் வைத்துள்ளார். 18.02.2015 அன்று புதுதில்லி வரும்போது, ஏற்கெனவே இராசபட்சே வந்த போது, தமிழ்நாட்டில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது போல், நடக்கக்கூடாது என்ற உத்தியுடன் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் முடிவெடுத்துள்ளார்கள்.

இராசபக்சே புதுதில்லி வரும்போது, தமிழக மீனவர் களை விடுவிப்பார். சிறிசேனா, படகுகளை விடுவிக் கிறார். எப்படியோ, படகுகள் விடுவிக்கப் பட்டதை வரவேற்போம்! அதற்காக அவசரப்பட்டு சிறிசேனாவை நாம் வரவேற்க வேண்டியதில்லை.

கடந்த 12.02.215 அன்று தஞ்சை வந்த நடுவண் இணையமைச்சர் பொன். இராதாகிருட்டிணன், தம்மிடம் மனுக் கொடுத்த உழவர் பேராளர்களிடம் பா.ச.க. ஆட்சி ஒருபோதும் தமிழக உழவர்களுக்கு எதிராகச் செயல்படாது என்று கூறினார். அவர் கூற்றை நம்பலாமா?

உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட பின்னும் காங் கிரசு ஆட்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வந்தது. கர்நாடகம் எதிர்க்கிறது என்பதற் காகவே தனது சட்டக் கடமையை நிறைவேற்ற, காங் கிரசு ஆட்சி மறுத்தது. காங்கிரசு ஆட்சியைப் போலவே, பா.ச.க ஆட்சியும் 2014 மே மாதத்திலிருந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை குறித்து தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு அமர்விடம் வழக்குத் தொடுத் தது. அதை விசாரித்த அமர்வு 2014 மே மாதம் - 142 அடி தண்ணீர் தேக்கும் அதிகாரம் அளித்த பழைய தீர்ப்பை மாற்ற வேண்டியதில்லை. அணை வலுவாக உள்ளது, புதிய அணை கட்ட வேண்டியதில்லை என்று தீர்ப்பளித்து உறுதி செய்தது.

ஆனால் அதன்பிறகும், ஜவடேகர் தலைமையி லுள்ள நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், கேரள அரசு புது அணை கட்ட ஆய்வு செய்யலாம் என்று தடையில்லாச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

காவிரிப்படுகை வேளாண்மையை அழிக்கும் மீத்தேன் திட்டத்திற்குக் காங்கிரசுக் கட்சி தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. அதே அனுமதியை பா.ச.க. ஆட்சி தொடர்கிறது.

பொன். இராதாகிருட்டிணன் - பா.ச.க. ஆட்சி தமிழக உழவர்களுக்கு எதிராகச் செயல்படாது என்று கூறினால், இதைவிட மோசடி வேறென்ன இருக்க முடி யும்?

ஆட்டுக்கிடைக்கு நரியைக் காவல் வைப்பதும் தமிழர்களுக்குக் காவலாகக் காங்கிரசையும் பா.ச.க. வையும் நம்புவதும் ஒன்றுதான்!

செயலலிதா திருவரங்கம் வாக்காளர்களுக்கு அளித்த வேண்டுகோள் அறிக்கையில் தமக்குத் தண்டனை கிடைத் தது இறைவன் திருவிளையாடல் என்று கூறியுள்ளாரே?

அத்துடன் தானும் சசிகலாவும் நடத்திய திருவிளை யாடல்களை எண்ணிப் பார்த்து திருத்தம் பெற்றால் நல்லது.

Pin It