திரைப்படம் ஒரு கலை வடிவமாக உருக்கொண்டி ருந்த அக்கால கட்டத்திலேயே “திரைப்படக்கலை எதிர்காலத்தில் ஒரு ஆற்றல் மிகுந்த ஊடகமாக விளங்கும்” என்றார் லெனின். அதே வேளையில் அந்த சக்தி மிகுந்த திரைப்படக் கலை, யாரிடம் இருக்கிறதோ யாருக்காக உருவாக்கப்படுகிறதோ அதைப் பொறுத் துத்தான், அத்திரைப்படம் ஆற்றல் வாய்ந்ததா? அழிவுத் தன்மை கொண்டதா? என்பதை நாம் முடிவு செய்ய முடியும்.

வரலாற்றுப் போக்கில் உருவாகியுள்ள முரண்பாடு களில், தேசிய இன முரண்பாடுதான்; முதன்மையான, உடனடியான முரண்பாடாகவும் தேசிய இனச் சிக்கல் களுக்கு ஊடாகத்தான் தேசிய இன ஒற்றுமை, சாதி ஒழிப்பு, வர்க்கப் போராட்டம் என படிநிலை வளர்ச்சியை அடைய முடியும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்து ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், தன் சொந்த தேசியத்தை நிலைநிறுத்தவும் போராடிய பஞ்சாப் மக்களின் காலிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை பின்புலமாக வைத்து உருவாக்கப் பட்ட (1996 - MAACHIS) தீப்பொறி எனும் திரைப்படத்தைப் பற்றி பார்ப்போம்.

தீப்பொறி படத்தின் ஆரம்ப காட்சியே, சிறைச் சாலை வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து போலி மோதலில் (எண்கவுண்டரில்) கொல்லப்பட்ட ஒருவரது சடலத்தை மீட்பதிலிருந்து தொடங்குகிறது. அந்தக் கொலையை அன்றாட நிகழ்வாக எடுத்துக் கொள்ளும் மனப்போக்கிலிருந்து அன்றைய பஞ்சாபின் நிலையை நமக்கு உணர்த்திவிட்டு கதை தொடங்கு கிறது.

அடுத்து, கடுமையான உழைப்பாளிகளாகவும், மதப்பற்றுள்ளவர்களாகவும் விளங்கும். பஞ்சாப் கிராமத்தின் ஒரு விவசாயக் குடும்பத்தின் உறுப்பினர் களை - கதாநாயகன், கதாநாயகி, மூதாட்டி, சகோதரன், மதப்பற்றுள்ள ஒரு முதியவர் என நமக்கு அறிமுகப் படுத்துகின்றனர்.

கதாநாயகன் குளுமையான பனிபடர்ந்த பஞ்சாப் எல்லையில் (தன் நண்பர்களுடன்) ஒரு பாடல் காட்சியின் பின்னணியில் காட்டப்படும் போதே பாடலின் இடையில் இசையின் லயம் மாறி ஒலிக்க, இறுக்கமான, கடுமையான முகபா வத் துடன் ஒரு கதாபாத்திரம் காட்டப்படுகிறது. ஓம்பூரி எனும் நடிகர் ஏற்றிருக்கும் அந்த கதா பாத்திரம்தான், பின்னாளில் கதாநா யகனை அரசுக்கு எதிரான நபராக மாற்றப் போகும் கதாபாத்திரம்.

அதன்பின், இந்தியாவை உலுக் கிய மூன்று நிகழ்வுகளை மூன்று படங்கள் (ஷிtவீறீறீs) மூலமாக காட்டப் படுகிறது. பொற்கோயிலின் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது, இந்திரா காந்தி படுகொலை செய் யப்பட்டது, இறுதியாக டெல்லியில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டது.

மீண்டும் கதை தொடங்க, கதாநாயகன் பேருந்தில் வருகிறான். அருகில் ஓம்பூரி கையில் கேமரா வுடன் அமர்ந்திருக்கிறார். பேருந்து ஓரிடத்தில் நிற்கிறது. ஓம்பூரி பேருந்தை விட்டு இறங்க கதாநாய கனும் இறங்குகிறான். சட்டென்று ஓம்பூரி கையில் கேமரா இல்லாதது கண்டு திகைத்து, அவனிடம் அதைப் பற்றி கூறி ஞாபகப் படுத்து கிறான். ஓம்பூரி அவனை உற்றுப் பார்க்கிறார். திடீரென வேகமாக ஒரு கார் வந்து நிற்கிறது. ஓம்பூரி கதாநாயகனை முறைத்துப் பார்த்து விட்டு காரில் ஏற, கார் வேகமாக சென்று விடுகிறது. ஒன்றும் புரியா மல் கதாநாயகன் நின்று கொண்டி ருக்க பின்னால் நின்று கொண்டி ருக்கும் பேருந்து வெடித்து சிதறு கிறது. பயணிகள் பிணமாகின்றனர். அரசைப் பழிவாங்குவதாக கூறிக் கொண்டு காலிஸ்தான் போராட் டம் வரைமுறையற்ற வன்முறைப் பாதையில் தடம் மாறியதின் குறியீடாக இக்காட்சி அமைக்கப் பட்டுள்ளது.

கதாநாயகன் வீட்டிற்கு வருகி றான். வீடு பசுமையான விளைநிலங் களையட்டி உள்ள பஞ்சாப் கிராம வீடுகளில் ஒன்று. அங்கு கதா நாயகியும், சகோதரனும் - கதாநாய கனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது போலீஸ் வீட்டிற்குள் வருகிறது. சிறிய வாக்குவாதத்திற் குப் பிறகு சகோ தரனை “விசார ணைக்கு மட்டும் தான்” என அழைத்துச் செல்கின்றனர். இரவா கியும் அவன் வீடு திரும் பாததால். கதாநாயகன் காவல் நிலையத்திற் குச் சென்று விசாரிக் கிறான். அங்கு காவல்துறையில் வழக்கமான பதில் வருகிறது. எங்க ளுக்கு தெரியாது. மேலதிகாரியிடம் சென்று கேட் கிறான். அங்கும் அதே பதில். விரக் தியில் வீடு வந்து சேர்கிறான். நடு நிசி இரவில் நாய் தொடர்ந்து குரைக்கும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. கதாநாயகனும், கதா நாயகியும் கதவைத் திறந்து வெளி யில் வந்து பார்க்க, தூரத்தில் ஒரு உருவம் தள்ளாடி வர இவர்கள் அந்த உருவத்தை நோக்கிச் செல்ல அந்த உருவம் தன் சகோதரன் என அறிந்து அதிர்ச்சி அடைந்து ஓடிப் போய் அவனை தாங்கி பிடிக்கின் றனர். காலையில் விசாரணைக் கென்று அழைத்துச் செல்லப்பட்ட அவன் குற்றுயிராக நின்று கொண் டிருக்க அக்கம் பக்கத்து வீட்டுக்கா ரர்கள் சிலபேர் கூடுகின்றனர். அவர்கள் அதிர்ச்சியோ, ஆச்சரி யமோ அடையாமல். “அரசுக்கு எதிராகப் போரிட்டால் இதுதான் நேரும்” என்கின்ற பொருளில் உரை யாடிக் கொண்டே கலைந்து செல் கின்றனர். இந்தக் காட்சியும் அன் றைய பஞ்சாபின் காட்டாட்சி நிலையை யதார்த்தமாக சுட்டிக் காட்டுவதாகும்.

பஞ்சாப் - பஞ்சாபியர்களுக்கே.. எனும் முழக்கத்தோடு தொடங்கிய காலிஸ்தான் போராட்டம். அதை ஒடுக்க இந்திய அரசு இராணு வத்தை அனுப்பி பொற்கோவி லுக்குள் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது. அதற்குப் பழிவாங்க அப்பாவி சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்பட்டது. அதற்குப் பழிவாங்க காலிஸ்தான் போராட் டம் வன்முறைப் பாதைக்குத் திரும்ப மீண்டும் அரசு வன்முறை.

இந்தப் புள்ளியில் இருந்து படம் மீண்டும் தொடர்கிறது. கதா நாயகன் தீவிரவாத இயக்கத்தில் சேர்கிறான். கதாநாயகி முதலில் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள். சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசிப் பார்க்கிறாள். ஆனாலும், அவன் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த குழுத்தலைவன்தான் ஓம்பூரி. இயக் கத்தின் கொள்கைகளையும், திட் டங்களையும் கதாநாயகனுக்கு விளங்க வைப்பதும், இணங்க வைப் பதுமானக் காட்சி கலைநயத் தோடுக் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு இரயில் பாதையின் அருகில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண் டிருக்க தொலைவில் வந்து கொண்டிருக்கும் ரயிலின் ஒலி மெல்ல மெல்ல அதிகரித்து, ஆக்கிர மித்து பின் மெல்ல மெல்ல கரைந்து விடும். அடுத்து, கதாநாயகன் தன் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி யைக் கொண்டு அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு முயல் குட்டி யைச் சுட்டு தன் சம்மதத்தை தெரி விப்பான்.

இதனையடுத்து தீவிரவாதம் என்னும் பாதையை தேர்ந்தெடுத் துக் கொண்ட அந்தக் குழு. போலீஸ் அதிகாரிகளைத் தேர்ந் தெடுத்து ஒவ்வொருவராக கொலை செய்கிறது. காட்டிக் கொடுத்து விடுவானோ என்கிற சந்தேகம் வந்தவுடனேயே இயக்கத்தைச் சேர்ந்தவர்களையே குண்டு வைத்து கொல்கிறார்கள். இறுதியில், கதா நாயகன் பெரிய போலீஸ் அதிகாரி யைக் கொலை செய்ய முயற்சி செய்யும் போது மாட்டிக் கொள்கி றான். சித்திரவதைக்கு உள்ளாகி றான். இறுதிக்காட்சியில் கதாநா யகி, கதாநாயகனை பார்க்க சிறைச் சாலை வாசலில் காத்து நிற்கும் போது கதாநாயகனால் கொலை முயற்சிக்கு உள்ளான அதிகாரி வருவான். அவளைப் பார்த்து எவ்வித சலனமும் இல்லாமல் கதா நாயகனைப் பார்க்க அனுமதிப்பான்.

கதாநாயகன் கொடூரமானச் சித்திரவதைக்கு ஆளாகிய நிலை யில் இருக்க கதாநாயகி அழுது அழுது கண்ணீர் வற்றிய கண்களி லிருந்து நீர்த்ததும்ப அவனைக் கட்டிப் பிடித்து இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர். அவள் கொடுக்கும் முத்தம் காத லுக்கானதோ, காமத்துக்கானதோ இல்லை. இனியும் சித்ரவதையை தாங்க முடியாது எனும் நிலையி லிருந்து கதாநாயகனுக்கு விடுதலை அளிக்கவும், இந்த மோசமான வாழ்நிலையில் இனியும் வாழ முடியாது என்கிற நிலையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள் ளும் படியும் இயக்கத்திலிருக்கும் போது கிடைத்த இரண்டு சயனைடு குப்பிகளை ஆளுக் கொன்றாக பிரித்துக் கொள்ளவே இந்த இறுதி முத்தம்.

கதாநாயகன், கதாநாயகியின் இறுதி முடிவின் வழியாக திரைப் படம் கூறுவது. பஞ்சாப் தேசிய இனத்தின் போராட்டத் “தீப்பொறி”, இந்திய அரசு எனும் அசுர பலம் படைத்த எந்திரத்தின் மூலம் அணைக்கப்பட்டிருகிறது. தனி மனிதர்களின் மரணங்களின் வாயி லாக. ஆனால், அத்தீப்பொறி உருவாவதற்கான மூலகாரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பது தான் உண்மை.

1996 இல் வெளிவந்த இந்தி திரைப்படமான “MAACHIS” - தீப்பொறி, உள்ளடக்கத்திலும், வடிவத்திலும், கலை நயத்திலும் மிகச் சிறந்த படைப்பாக விளங்கு கிறது. கதாநாயகனாக வரும் சந்திர சூர் சிங் உள்ளிட்டு அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

Pin It