சுதந்திர இந்தியா
அறுபதாண்டு உயரத்தில்
அடிமைத்தமிழனோ
ஆரியன் காலம் முதல் பள்ளத்தில்...! 

ஈழ மக்களே!
என் வாழ்வும் அந்தரத்தில்தான்
விரும்பினால்
என் வீட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
இப்படிக்குத்
தூக்கணாங்குருவி... 

பீரங்கிகள் தூவும்
கந்தகப்பூக்களை
எத்தனை நாள் தான்
உன்
வீர மார்பில் தாங்குவாய்...!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.