பிழை திருத்தம் 


தொல்காப்பியத்தில்
பிழை திருத்தம்
திணைகள் ஆறு
கொய்தல் திணை
முள்ளும்... முள்வேலி சார்ந்த இடமும். 

புறநானூற்றில்
பிழைதிருத்தம்
‘யாதும் ஊரே’
சிங்களம் தவிர...
‘யாவரும் கேளிர்’
சிங்களனைத் தவிர...

முரண் 

இந்திய விடுதலைப் போருக்கும்
ஈழ விடுதலைப் போருக்கும்
சிறு வேறுபாடுதான்
இந்திய விடுதலைப் போரில்
தமிழன் இந்தியனாகி மடிந்தான்
ஈழப் போரினால்
இந்தியன் தமிழனாக மலர்ந்தான்

Pin It