வடஅமெரிக்காவில் தவறான தீர்ப்பு ஒன்றால், 19 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வடஅமெரிக்காவின் ஒஹியோ (Ohio) மாகாணத்தில் உள்ள டோலிடோ (Toledo) நகரத்தைச் சேர்ந்தவர் டானிபிரவுன் (Danny Brown). இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு 3 குழந்தைகளுக்குத் தாயான, 28 அகவை - பாபிரூசெல் என்ற பெண்ணுடன் பழகிவந்துள்ளார். அதே ஆண்டில் பாபி, மர்மநப ர்ஒருவரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசார ணையின் போது, பாபியின்அகவை மகன், டானி தான் அவரைக் கொலை செய்தார் என கூறினான். சிறு வனின் சாட்சியை நம்பாத காவல்துறையினர், டானியை கைது செய்து மரபணு சோதனை செய்து பார்த்துள்ளனர்.

பரிசோதனையின் மாதிரிகள் கிடைத்தபோது, டானி தான் பாபியை கொலை செய்தார் என தெரிய வந்ததையடுத்து, அவருக்கு நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

இதன்பின் டானி சிறை தண்டனையை அனுப வித்து வந்த நிலையில், அவருக்கு மீண்டும் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவில், டானி மற்றும் பாபியின் மரபணுக்கள் ஒத்து போகவில்லை என்பதால், பாபியை கற்பழித்தது டானி இல்லை என உறுதி யானது.

மேலும் பாபியிடமிருந்து சேகரிக்கப்பட்ட மரபணு வேறொருவரை அடையாளப்படுத்தியது மட்டுமின்றி, அந்த நபர் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து டானியை பொய் பேசுவதை கண்டுபிடிக்கும் இயந்திர’பரிசோதனைக்கு உட்படுத் தினர். அதிலும், ‘அவர் பொய் பேசவில்லை’என்பதும் மெய்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, டானியை நீதிபதிகள் விடுதலை செய்துத் தீர்ப்பளித்தனர்.

தமக்கு தவறாக தீர்ப்புக் கூறியதற்கு ஒஹிஹோ நீதிமன்றம் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், தான் சிறையில் அனுபவித்த துன்பத்திற்கு இழப்பீடாக 800,000 டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தற்போது டானி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒருவேளை, ‘கொடூரமான கற்பழிப்புக் குற்றவாளி’என ஊடகங்கள் அடைமொழி கொடுத்து தூண்டி விட்டிருந்தால், டானிக்கு மரணதண்டனை வழங்கப் பட்டிருக்கக்கூடும். ஆனால், அவருக்கு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அண்மையில், நாகாலாந்தில், பொது மக்களே சிறையை உடைத்து கற்பழிப்புக் குற்றவாளி ’ஒருவரை, சாலையில் கொண்டு வந்து அடித்துக் கொன்ற நிகழ்வு ஊடகங்களில் பேசப்பட்டது. அது, ஞாயமான செயல்தான் என ஞாயப்படுத்தப் பட்டது.

விசாரணைக்குப் பிறகு தான், கொல்லப்பட்ட அந்த நபர் அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்தவில்லை என்ற செய்தியை, நாகாலாந்து மாநில அரசு தெரிவித்தது. மனம் ஒத்து உறவு கொண் டுள்ள இருவரிடையே, பணத்தகராறு ஏற்படவே, அப்பெண் பாலியல் வல்லுறவு எனப் பொய் புகார் கொடுத்திருக்கலாம் என்றும் சொன்னது, நாகாலாந்து அரசு.

கொலை - பாலியல் - வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களைப் புரியும் குற்றவாளிகளை, அப்படியே விட்டுவிட வேண்டும், தண்டனை கொடுக்கக் கூடாது என நாம் வாதாடுவதில்லை.

ஆனால், எந்தவொரு குற்றமும் முறைப்படி விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதும்கூட, ‘மரண தண்டனை’என்ற கொடும் தண்டனை அளிக்கப்பட்டால், அந்தத் தீர்ப்பை யார் நினைத்தாலும் திருத்தி எழுத முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

மரண தண்டனை, எதற்கும் தீர்வல்ல! மரணம், ஒரு தண்டனையே அல்ல!

Pin It