கனடாவின் தெற்கு மாகாணமான, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்குப் பகுதியிலுள்ள, டம்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) என்ற சிற்றூர் பகுதியில் செயல்பட்டு வரும் முர்ரே ரிவர் நிலக்கரி (Murray River coal mine) சுரங்கத்தில், சீனத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுவதை எதிர்த்து மண்ணின் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முர்ரே ரிவர் நிலக்கரி சுரங்கத்தை நடத்தி வரும் சீனநாட்டைச் சேர்ந்த எச்.டி. இன்டர் நேசனல் என்ற தனியார் நிறுவனம், அங்கு பணியாற்றுவதற்காக 201 சீனத் தொழிலா ளர்களை பணிய மர்த்த கனடா நாட்டு மனித வளத்துறை அனு மதிப்பெற்றது. இதன், முதற் கட்டமாக 17 சீனர்கள் அங்கு வந்திறங்கினர். திசம்பர் மாதத்தில் 60 பேர் வருவதாகத் திட்ட மிடப்பட்டது.

இந்நிலையில் கனடாவின் சுரங்கப் பணிகளில், மண்ணின் மைந்தர்களான கனடாத் தொழிலாளர்களைப் புறக்கணித்துவிட்டு, அயல்நாட்டுத் தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுத்து ஈடுபடுத்துவதைக் கண்டித்து அங்கு தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கின.

சற்றொப்ப 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, யுனைடெட் ஸ்டீல் வொர்க்கர்ஸ் (United Steel workers) என்ற கனடா தொழிற்சங்கத்தினர், சீனத் தொழிலா ளர்கள் இறக்குமதி செய்யப்படுவதைக் கண்டித்து கனடா சுற்றுச்சூழல் அமைச்சர் டெர்ரி லேக் அலுவலகத்தை 21.11.2012 அன்று முற்றுகையிட்டனர்.

போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் கொலம் பிய வேலைகள், அங்குள்ளத் தொழிலாளர் களுக்கே என்ற பொருள்படும் விதமாக, B.C Jobs for B.C. workers என்றும், “மண்ணின் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுங்கள், அயல் நாட்டவருக்கு வேண்டாம்” என்றும் கோரிக்கைப் பதாகைகளின் அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

ஏற்கெனவே, பிரிட்டீஷ் கொலம்பியப் பகுதி யில் 70,000 முதல் 80,000 வரை வெளிநாட்ட வர்கள் பணியிலிருப்பதாகவும், இவர்களால் தம் எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டதாகவும் தெரிவிக்கிறார், கனடா சுரங்கப் பணியாளர்கள் பிரதி நிதியாகவுள்ள ரான்டி கட்ஸ்கா (Randy Gatzka).

போராட்டத்தின் போது, வெளியூரிலிருந்த அமைச்சர் செய்தியாளர்களிடம், கனடாவின் வேலை வாய்ப்புகளில் கனடாத் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், வெளிநாட்டவர்கள் பணியில் அமர்த்தப்படுவது குறித்து அரசு விசாரணை மேற்கொள்ளும் என்றும் அறிவித்தார்.

International Union of Operating Engineers Local ñŸÁ‹ Construction and Specialized Workers Union Local ஆகிய இரண்டு தொழிலாளர் அமைப்புகள் கனடாக் கூட்டரசு நீதி மன்றத்தில், வெளிநாட்டவர்களைக் கொண்டு வர அனுமதித்த கனடா அரசின் அனுமதிக்குத் தடை கோரி வழக்குத் தொடுத்தனர். இப்பணி களை வெளிநாட்டவர்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்குரியத் தகுதிகள் கனடாத் தொழிலாளர்களுக்கே இருக் கின்றன என்றும் அவர்கள் வாதாடினர்.

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்துவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு களைத் தொடர்ந்து, கனடாவின் மனித வளத்தறை அமைச்சர் டயன் பின்லீ (Diane Finley), அரசின் இம்முடிவு மறுஆய்வு செய்யப் பட்டு வருவதாக அறிவித்துள்ளார்.

Pin It