“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று வள்ளுவர் முதல், “விவசாயமே உண்மையான உற்பத்தித் திறனு டையது” என்று வாதிட்ட பிசியோகிராட்டுகள் வரை வேளாண் தொழிலை விதந்தோம்பாத அறிஞர் பெருமக்களே உலகில் இல்லை எனலாம். ஆனால் இன்றைய தொழில்துறை முதலாளிகளால் ஆட்டுவிக்கப்படுகிற இந்திய அரசோ, எழுபது விழுக்காட்டிற்கும் மேலான விவசாயிகள் வசிக்கும் நாட்டில் முதலாளிகளின் தொழில் துறை நலன்காக்க தன் சொந்தக் குடிகளை அழித்தொழிக்கும் வகை யிலான தொழில்துறை மையவாத பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே முனைப்புச் செலுத்துகிறது. அவ்வகையில், பல்லாயிரமாண்டுகளாக மரபுவழிபட்ட வேளாண்மையை இன்றளவிலும் மேற்கொண்டுவரும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டா பகுதியை லாப வெறி வணிகக் கும்பலான கிரேட் ஈஸ்ட்ரன் எனெர்ஜி நிறுவனத்திற்கு (ஏகாதிபத்திய இந்திய அரசாலும் அதன் கைக்கூலிகளான மாநில அரசு களாலும்) கையளித்த “மீத்தேன் எடுப்பு திட்ட”த்தால் ஏற்படவிருக்கிற அழிவு குறித்தான சிறப்பான விளக்கங்களை முன்வைக்கிற ஆவணப்படம் தான் ‘பாலைவனமாகும் காவேரி டெல்டா மீத்தேன்’.

2012ஆம் ஆண்டில் புது தில்லியில் நடைபெற்ற “ஏழாவது ஆசிய எரிவாயு கூட்டமைப்பு” மாநாட்டில் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில் புதைந்திருக்கும் வர்க்கசார்பு வாதத்தைச் சுட்டிக்காட்டு வதிலிருந்து படம் துவங்குகிறது. இத்திட்டத்தால் ஏற்படவிருக்கிற சிக்கலை எளிமை யாகப் புரிந்துகொள்ளும் வகையிலான அறிவியல் விளக்கக் காட்சிகள் மற் றும் மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் கடும் விளைவுகளை எடுத்துரைக்கும் துறைசார்ந்த அறிஞர்கள், களப் போராளிகளின் விமர்சனங்கள் என இத்திட்டத்தின் உண்மையானப் பேரழிவு முகத்தை அறிவியில்பூர்வ ஆதாரங்களின் வாயிலாக மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டி, இத்திட்டத்தால் ஏற்படவிருக்கிற தீர்க்கமுடியாத இரு பெரும் சிக்கல்களை விரிவாக எடுத்துரைக்கிறது. அது இத்திட்டத்திற்குச் செலவாகும் அளப்பரிய அளவிலான நீர் மற்றும் மீத்தேன் உறிஞ்சி எடுத்த பின் வெளியேற்றப்படும் நச்சுக் கழிவின் பேரபாயங்கள் குறித்த விளக்கங்கள் ஆகும்.

உதாரணமாக மீத்தேன் எடுப்பதற்காக தோண் டப்படுகிற ஒரு கிணற்றுக்குத் தேவைப்படும் நீர் மட்டும் ஐந்து நாட்களுக்கு ஐந்து கோடியே அறு பத்தியாறு லட்சம் லிட்டர். இவ்வாறு இரண்டா யிரத்திற்கும் மேற்ப்பட்ட கிணறுகளைத் தோண்ட நான்கு டி.எம்.சி நீர் தேவைப்படும் என்கிற புள்ளிவிவரம் நம்மை மிரட்சிகொள்ள வைக்கிறது. முன்னதாக, தமிழகத்தின் நீர் கொள்ளையர்களான கொக்ககோலா, பெப்சி, பெக்டல், கேன் நீர் முதலாளிகள் போன்றோர்களிடம் தாரை வார்க்கப் பட்ட நமது நீர் ஆதரங்களால் அன்றாட குடி நீருக்கே அல்லல்படுகிற அவலம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் கூடுதலாக மீத்தேன் திட்டத்திற்காகத் தேவைப்படும் நீரைப் பெற ஒட்டுமொத்தத் தமிழக ஆறுகளிலிருந்தும் நீரை உறிஞ்சத் துடிக்கிற இக் கொள்ளையர்களின் மக்கள் விரோத சதியைப் புள்ளி விவர ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துரைக்கிறது.

அடுத்து மீத்தேன் எடுப்புச் செயல்முறையில் முன்னதாக புவியின் ஆழத்தில் செலுத்தப்பட்ட வேதியல் நச்சுக் களானது மீண்டும் நீருடன் கலந்து எவ்வாறு வேதியல் மாற்ற மடைந்து ஆபத்துமிக்க கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது என்றும் எவ்வாறு அது வெள்ளக் காலங்களில் ஆறுகளில் கலந்து உயிர்ச்சூழலுக்குப் பேரழிவை விளைவிக்கிறது என் பதையும் உலகெங்கிலும் நிகழ்ந்த சான்று களைக் கொண்டு சுட்டிக்காட்டி நமக்கு எச்சரிக்கை செய்தி விடுத்து தமிழ் நிலம் காக்க அனைவரும் ஒன்று சேர்ந்து போராட அழைப்பு விடுத்து முடிகிறது, மீத்தேன் திட்ட பேர ழிவை விளக்கும் இவ்வாவணப்படம். இப்படத்தை உருவாக்கிய மே பதினேழு இயக்கமும் சரவணன் தங்கப்பாவும் பாராட்டுக் குரியவர்கள்.

பாலைவனமாகும் காவேரி டெல்டா

மீத்தேன்

இயக்குநர்: சரவணன் தங்கப்பா 

நேரம்: 45 நிமி; ரூ.99

வெளியீடு நிமிர், 9600781111 

Pin It