delhi professors 600

புது தில்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த டாக்டர் சாய்பாபாவை கடந்த மே 9, 2014 இல் சட்டவிரோத நடவடிக்கை (தடுப்பு) சட்டத்தின் கீழ் அநீதியான முறையில் அரசு கைது செய்தது. சரியான மருத்துவ சிகிச்சையும் கூடவே மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த அநீதியான சிறைவைப்பிற்கு எதிராக பல பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் உண்ணாநிலை(புது தில்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜமியா மிலியா இஸ்லாமிய, இந்திரா பிராசத்த பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம்) போராட்டத்தை சென்ற மே 9 தேதியில் முன்னெடுத்தனர். புது தில்லி ஆசிரியர் சங்கத்தின் மையக் குழுவானது இப்போரட்டத்திற்கான ஆதரவையும் அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் இப்போரட்டத்தில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்து முழுமனதான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இயற்கை வளங்களை கொள்ளையடிக்கிற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடுகிற விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக நின்றுததுதான் டாக்டர் சாய்பாபா செய்த ஒரே “குற்றம்”. ஏற்கனவே விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களை மென்மேலும் வறியவர்களாக்கி அவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கின்ற தற்காலத்திய போலியான வளர்ச்சித்திட்ட வடிவங்களை எதிர்க்கும் போராட்டங்களில் அவர்களுக்கு டாக்டர் சாய்பாபா தொடர்ந்து தோள் கொடுத்து வந்திருக்கிறார். நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் சிக்கல்களையும் துயரங்களையும், இதே போன்ற பிந்தங்கிய நிலைமைகளிலிருந்து வந்தவரானா சாய்பாபா, தனது வகுப்பறை போதனைகள், செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கான ஆதரவுக்குரல்களை ஒருங்கிணைப்பதின் வழியாக தொடர்ந்து பேச முயற்சித்துள்ளார். சத்தீஷ்கர் மாநில பழங்குடிகளுக்கெதிராக மத்திய அரசு செயல்படுத்திவரும் பசுமை வேட்டைக்கான எதிர்ப்புகுரல்களில் சாய்பாப்பவினுடையது மிக முக்கியமானது.

டாக்டர் சாய்பாபாவின் செயல்பாடுகள் ஏற்கனவே நெருக்கடிகளில் உழன்றுகொண்டிருக்கும் அரசு எந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்கும் என்பது உறுதி. செயற்பாட்டாளர்களாலும் சாய்பாபா போன்ற கல்வியாளர்களாலும் அரசின் அதிகாரக்கட்டமைப்பிற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் நெருக்கடிகளை மூடிமறைக்கின்ற முயற்சியாகவே இதுபோன்ற சிறைவைப்பு மற்றும் சித்திரவதை நடவடிக்கைகள் மூலம் எதிர்ப்புக்குரல்களை அடக்கத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. இது நிச்சயமாக இடையிறாத எதிர்ப்புக் குரல்களுக்கு அரசால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைதான். அவரின் உடல் நலன் குறித்து தெரிந்தும் மூன்று முறையும் பிணையில் விடிவிக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.கைது செய்து ஓராண்டாகியும் அவர் மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை மேலும் பிணை வழங்கினால் அவர் எங்கேயும் ஓடி ஒளியப்போவதுமில்லை விசாரணைக்கு எந்தவகையிலும் குந்தகம் விளைவிக்கப் போவதுமில்லை. கைது செய்த பிற்பாடு டாக்டர் சாய்பாபாவின் உடல் நிலையோ மோசமடைத்து வருகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி சமீபத்தில் செய்த MRI பரிசோதனையில் அவரது முதுகுத் தண்டுவடம் வளைந்துள்ளதும், இரு எலும்புகள் தேய்மானம் ஆகியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் விளைவு அவரது இடது கைக்கு செல்கிற நரம்புகள் அழத்தமடைந்து இடது கையையே செயல்படாத நிலைக்கு தள்ளியுள்ளது. அதோடு விலா எலும்புகளின் அழுத்ததால் அவருக்கு நுரையீரல் இறக்கம் ஏற்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போக இதயத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சில பரிசோதனை முடிவுகள் அவரது பித்தப்பையில் கல் உள்ளதாக தெரிவிக்கின்றன. அவரது பிணைமனு நிலுவையில் இருக்கும்போது வழங்கப்பட்ட குறைந்த அளவு மருந்துகள் கூட மார்ச் 4, 2015ல் அந்த மனு நிராகரிக்கப்பட்டதற்கு பிற்பாடு நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில் தனது உரிமையை வலியிறுத்தி ஏப்ரல் 11, 2015ல் உண்ணா நிலை போராட்டத்தையும் டாக்டர் சாய்பாபா தொடங்க வேண்டியிருந்தது. பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல மாணவர்கள் ஆசிரியர்களின் நலன்களுக்காக குரல் எழுப்பியவரும் பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் பாத்திரமான டாக்டர் சாய்பாபாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.

நிகழ்வில் பங்கேற்றவர்கள்: பிரசாந்த் பூஷன், அருந்ததி ராய், சஞ்சய் கக், அசோக் பொவ்னிக், நந்திதி நரைன், சச்சிதானந் சின்ஹா, ராமக்ரிஷ்ணன், அபூர்வானந், மனிஷா செதி, இஷா மிஸ்ரா, ஹரிஷ் கண்ணா, சஞ்சய் ஜோஷி. டாக்டர் சாய்பாபாவின் உடல்நிலை குறித்தும் வழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும் அவரது துணைவியார் திருமதி வசந்தகுமாரி விரிவாகப் பேசினார்.

ஆங்கிலம் வழி தமிழில்: லெனின்

நன்றி : http://sanhati.com/articles/13449/

Pin It