“All efforts are to be made to avoid any man-made disaster. Though the concept of delicate balance and the doctrine of proportionality of risk factor gets attracted, yet the same commands the highest degree of constant alertness, for it is disaster affecting the living. The life of some cannot be sacrificed for the purpose of the eventual larger good.”

'மேற்கூறியவற்றை கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்குகளின் இறுதித் தீர்ப்பில் (6.05.2013) கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் கூடங்குளம் அணுஉலை செயல்படுவதற்கு முன்பாக மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய 15 ஆணைகளையும் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். (இணைப்பு - 1 பார்க்கவும்). இந்த ஆணைகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்பாக பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கின் விவரம் சுருக்கமாக.

சென்னை உயர்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை :

கூடங்குளம் திட்டத்திற்காக 1989-ம் ஆண்டில் இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா அரசுகளால் ஒப்பந்தம் போடப்பட்ட போதிலும், 1998-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கு பின்பாகவே இத்திட்டம் புத்துயிர் பெற்றது. அணுஉலையின் கட்டுமானப் பணிகள் 2001-ல் துவங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கான அறிவிப்பு வெளிவந்த துவக்கம் முதலே அப்பகுதி மக்கள் இத்திட்டத்தை எதிர்த்தே வந்தனர்.

2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பின் இந்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்ய ழிறிசிமிலி ஓர் குழுவை அமைத்தது. அந்த குழு கூடங்குளம் அணுஉலைகள் 1 மற்றும் 2ல் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்  குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றை கொடுத்தது. இதன் அடிப்படையில் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சார்ந்த சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு தன்மைக் குறித்து ஒரு குழுவை இந்திய அரசே அமைத்துள்ளபோது சுற்றுச்சூழல் சார்ந்த விளைவுகள் குறித்த ஆய்வுகளும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்னும் அடிப்படையில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இதேபோல ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு 2012-ம் ஆண்டு கூடங்குளம் பாதுகாப்பு தன்மை குறித்து தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் அணுஉலை பாதுகாப்புக்காக 17 பரிந்துரைகளை வழங்கியது. இவற்றில் அணுஉலை ரியாக்டர் பற்றிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இரண்டாம் வழக்கையும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தாக்கல் செய்தது.  மேற்கூறிய வழக்குகளை ஒருசேர விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பூவுலகின் நண்பர்கள் வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்த உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவில்  பூவுலகின் நண்பர்கள் வாதம் என்னவென்றால் கூடங்குளம் அணுஉலை கட்டுமானப்பணிகள் 2001-ல் துவங்கிய காரணத்தாலும், 1989ம் ஆண்டு இருந்த திட்டம் பலவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாலும்  1994ம் ஆண்டு புதிய சுற்றுச்சூழல் சட்ட விதிமுறைப்படி கூடங்குளம் அணுஉலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்பதே. மேலும் இந்த சட்டப்படி சுற்றுச்சூழல் அனுமதி என்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மேலாண்மை திட்டம் வரையப்பட்டு, பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு, இவற்றை எல்லாம் ஒரு குழு பரிசீலனை செய்த பின்னர் அது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைஅமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

பின்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உரிய அனுமதி தரும். இப்படிப்பட்ட அனுமதியை கூடங்குளம் திட்டம் பெற வேண்டும்  என்பது வழக்கின் வாதம். இதனை சென்னை உயர் நீதிமன்றம் காண தவறிவிட்டது என்று கூறப்பட்டது.

மேலும், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்திய பின்பே எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்படும் என்னும் உறுதியை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அளித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றத்தில். இதன்படி இரண்டாம் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு மனுதாரருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த மனுவும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இங்கு மற்றொன்றும் குறிப்பிட்டாக வேண்டும் மேற்கூறிய மனுக்கள் மீதான விசாரணை முடிந்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைத்திருந்த நிலையில்  அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மேற்கூறிய உறுதிமொழியை மீறி எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியை வழங்கியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடங்குளம் அணுஉலை துவங்குவதற்கான அனுமதியை வழங்கியது. இவ்விரண்டு அனுமதியையும் எதிர்த்து மீண்டும் இரண்டு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.

அணுஉலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது கூடங்குளம் கடலோரப் பகுதியில் கலக்கப்படும் போது 45  டிகிரி  வரை வெப்பம் கொண்டதாக இருக்கலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இது கடல்வாழ் உயிரினத்தை அழித்துவிடும் என வாதம் வைக்கப்பட்டது. இவ்வாத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை புதிய ஆணை பிறப்பிக்க கூறியது. இதன்படி புதிய ஆணை பிறபிக்கப்பட்டது.

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் எரிபொருள் நிரப்பும் அனுமதி ஆணை மேற்கூறிய குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்படாமல் வழங்கப்பட்டுள்ளது, இது நீதிமன்றத்தில் ஒழுங்குமுறை வாரியம் கொடுத்த உறுதிமொழிக்கு எதிரானது, என்கிற வாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது. அதற்கு நீதிமன்றம், 17  பரிந்துரைகளில் 6 பரிந்துரைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட காரணத்தாலும், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமே இத்தகைய சூழலில் முடிவெடுக்க ஆற்றல்படைத்த அமைப்பு என்பதால் இந்த மனுவையும் தள்ளுபடி செய்வதாக கூறியது. இதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அணுக்கழிவு மேலாண்மை குறித்தும், அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் வாதிடப்பட்டது. அணுஉலை பாதுகாப்பு தன்மை, பேரிடர் மேலாண்மை மற்றும் பயிற்சி என கூடங்குளம் அணுமின் திட்டத்தில் உள்ள பலவித குறைபாடுகள் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டன. 

மேற்கூறிப்பிட்ட எல்லா வாதங்களையும் பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணுஉலை தொடர்ந்து செயல்பட புதிய 15 ஆணைகளை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது. அவற்றில் முக்கிய பகுதிகள்:

(அ) முதல் உத்தரவே அதிர வைக்கிறது. கூடங்குளம் அணுஉலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் தரத்தை ஆராய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் அதுகுறித்த ஆய்வு அறிக்கையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. ரஷ்ய நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரக்குறைவான பொருட்கள் கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர் மேற்கூறிய மனுதாரர், இதன் பின்பே மேற்கூறிய ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது.

(ஆ)  அடுத்து அணுசக்தி ஒழுக்காற்று வாரியம் கூடங்குளம் தொடர்பாக வழங்கிய 17 பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். இவற்றில் ஏற்கனவே 12 பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, மீதம் உள்ள 5ல் இரண்டை நிறைவேற்ற நீண்ட காலம் தேவைப்படும் என்று அணுசக்கி துறை நீதிமன்றத்தில் ஏற்கனவே கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் கூறியதிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இந்த பரிந்துரைகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. (நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகளும் அவற்றின் தற்போதைய நிலையும் தேவைப்படும் கால அவகாசமும் காண இணைப்பு-2 பார்க்கவும்).

(இ)  அணுகழிவுகளை நிரந்தரமாக பூமிக்கடியில் புதைக்க இடத்தை கூடிய விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது. நிரந்தர அணுக்கழிவு மேலாண்மை திட்டம் இந்தியாவிடம் இல்லாததையும் உச்ச நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது : “66.  We may, however, caution that it is of utmost importance that the Union of India, NPCIL etc. should find out a place for a permanent (Dee Geological Repository) DGR. Storing of (Spent Nuclear Fuel) SNF at (Nuclear Power Plant) NPP site will, in the long run, poses a dangerous, long term health and environmental risk. NPCIL and the Union of India is bound to look at the probabilities of potentially harmful events and the consequences in future. Noticeably, NPCIL does not seem to have a long term plan, other than, stating and hoping that in the near future, it would establishes a DGR. The Atomic Energy Act, especially Section 17, envisages present and future safety of our NPPs and the lives and environment around. NPCIL and the Union of India must have a hard look at the environmental consequences of its action of setting up of NPPs, hence a permanent DGR is of utmost importance, which they should plan now.”

(ஈ)  பேரிடர் மேலாண்மை 2009 ம் சட்ட திட்டங்கள்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. கல்பாக்கம் அணுஉலை அருகாமை பகுதியில் இந்த சட்டதிட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்த ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது கவனத்துக்குரியது.

(உ)  அணுஉலை எதிர்ப்பு போராட்ட மக்கள் மீது தொடரப்பட்ட வழக்கைகளை திரும்ப பெறவேண்டும் என்றும் கூறியுள்ளது. இது வரவேற்புக்குரியது.

(ஊ)  2008ம் ஆண்டு கூடங்குளம் அணுஉலைகள் 3,4,5 மற்றும் 6 வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி கூடங்குளம் அணுஉலைகள் 1 மற்றும் 2 க்கும் பொருந்தும் என்றும் கூறி யுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த அனுமதி பலவித கட்டளைக்கு உட்பட்டதாகும். அணுக் கழிவுகளை அணுஉலை அருகே சேமித்து வைப்பதனால் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தான தாக்கீட்டு ஆய்வு (சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி) இதுவரை மேற்கொள்ளபடவில்லை என்கிற நமது வாதத்திற்கு தீர்ப்பில் எந்த பதிலும் இல்லை.

மொத்தத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூடங்குளம் அணுஉலை தொடர பலபுதிய கட்டளைகளை இட்டுள்ளது என்றே கூறவேண்டும். அதேபோல மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளதன் மூலம் அணுஉலை எதிரான போராட்டம் செய்யும் மக்கள் மீது சிலர் வீசிய அவதூறு சேற்றை துடைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பாகவும் அணு உலைக்கு எதிராக போராடுவது ஏன் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதிலை உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது இந்திய அரசின் கொள்கையாகும். இதனை நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது மக்கள் மன்றத்தில் தான் கேட்க முடியும் என்பதை இப்படி விளக்கியுள்ளது உச்ச நீதிமன்றம் : “21. Government of India’s decision to establish the NPP at Kudankulam, as already stated, cannot be questioned before this Court being part of a National Policy. Lot of scientific literatures, experts opinions etc. have been produced before us to show its dangers, harm it may cause to human health, environment, marine life and so on not only on the present generation but on future generation as well. Further, it was also pointed out that due to growing nuclear accidents and the resultant ecological and other dangers, many countries have started retreating from their forward nuclear programmes.

22. We have already indicated that these issues are to be addressed to policy makers, not to courts because the destiny of a nation is shaped by the people’s representatives and not by a handful of judges, unless there is an attempt to tamper with the fundamental Constitutional principles or basic structure of the Constitution.” 

இணைப்பு -1
உச்ச நீதிமன்றத்தின் அந்த 15 உத்தரவுகள்
DIRECTIONS
:

1. The plant should not be made operational unless AERB, NPCIL, DAE accord final clearance for commissioning of the plant ensuring the quality of various components and systems because their reliability is of vital importance.

2. MoEF should oversee and monitor whether the NPCIL is complying with the conditions laid down, while granting clearance vide its communication dated 23.9.2008 under the provisions of EIA Notification of 2006, so also the conditions laid down in the environmental clearance granted by the MoEF vide its communication dated 31.12.2009. AERB and MoEF will see that all the conditions stipulated by them are duly complied with before the plant is made operational.

3.  Maintaining safety is an ongoing process not only at the design level, but also during the operation for the nuclear plant. Safeguarding NPP, radioactive materials, ensuring physical security of the NSF are of paramount importance. NPCIL, AERB, the regulatory authority, should maintain constant vigil and make periodical inspection of the plant at least once in three months and if any defect is noticed, the same has to be rectified forthwith.

4.  NPCIL shall send periodical reports to AERB and the AERB shall take prompt action on those reports, if any fallacy is noticed in the reports.

5.  SNF generated needs to be managed in a safe manner to ensure protection of human health and environment from the undue effect of ionizing radiation now and future, for which sufficient surveillance and monitoring programme have to be evolved and implemented.

6.  AERB should periodically review the design-safety aspects of AFR feasibly at KKNPP so that there will be no adverse impact on the environment due to such storage which may also allay the fears and apprehensions expressed by the people.

7.  DGR has to be set up at the earliest so that SNF could be transported from the nuclear plant to DGR. NPCIL says the same would be done within a period of five years. Effective steps should be taken by the Union of India, NPCIL, AERB, AEC, DAE etc. to have a permanent DGR at the earliest so that apprehension voiced by the people of keeping the NSF at the site of Kudankulam NPP could be dispelled.

8.  NPCIL should ensure that the radioactive discharges to the environmental aquatic atmosphere and terrestrial route shall not cross the limits prescribed by the Regulatory Body.

9.  The Union of India, AERB and NPCIL should take steps at the earliest to comply with rest of the seventeen recommendations, within the time stipulated in the affidavit filed by the NPCIL on 3.12.2012.

10.  SNF is not being re-processed at the site, which has to be transported to a Re-Processing facility. Therefore, the management and transportation of SNF be carried out strictly by the Code of Practices laid down by the AERB, following the norms and regulations laid down by IAEA.

11.  NPCIL, AERB and State of Tamil Nadu should take adequate steps to implement the National Disaster Management Guidelines, 2009 and also carry out the periodical emergency exercises on and off site, with the support of the concerned Ministries of the Government of India, Officials of the State Government and local authorities.
12.  NPCIL, in association with the District Collector, Tiruneveli should take steps to discharge NPCIL Corporate Social Responsibilities in accordance with DPE Guidelines and there must be effective and proper monitoring and  supervision of the various projects undertaken under CSR to the fullest benefit of the people who are residing in and around KKNPP.

13.  NPCIL and the State of Tamil Nadu, based on the comprehensive emergency preparedness plan should conduct training courses on site and off site administer personnel, including the State Government officials and other stake holders, including police, fire service, medicos, emergency services etc.

14.  Endeavour should be made to withdraw all the criminal cases filed against the agitators so that peace and
normalcy be restored at Kudankulam and near by places and steps should be taken to educate the people of the necessity of the plant which is in the largest interest of the nation particularly the State of Tamil Nadu.

15. The AERB, NPCIL, MoEF and TNPCB would oversee each and every aspect of the matter, including the safety of the plant, impact on environment, quality of various components and systems in the plant before commissioning of the plant. A report to that effect be filed before this Court before commissioning of the plant.

Pin It