இந்த போராட்டத்தை எப்போது தொடங்கினீர்கள்?

எனக்கு முதலில் சமைக்கவும், குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும் மட்டும் தான் தெரியும். போராட்டத்தைப் பற்றியெல்லாம் தெரியாது. போராட்டத்தில் இருந்த பெண்கள் அணு உலை பாதிப்பு பற்றி சொன்னவுடன் இது பற்றி புரிய ஆரம்பித்தது. கல்பாக்கத்தில் உள்ள மக்கள் எவ்வளவு பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை பார்த்தவுடன் நம்முடைய மக்களும் எவ்வளவு பாதிப்படைவார்கள் என்பது புரிய ஆரம்பித்தது. முன்பு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது, இப்பொழுது உலகில் எந்த அணு உலை விபத்து நடந்தாலும் அது பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்கிறோம்.

பல போராட்டங்களில் சோர்ந்திருந்தோம், வருங்கால சந்தியினரைப் நினைத்து அவர்கள் நாங்கள் வாழ்ந்த இந்த மண்ணில் வாழ வேண்டும் என நினைத்து இங்கு போராட ஆரபித்தோம். பெண்கள் தான் முதலில் போராட்டத்தில் கலந்து கொள்கிறோம், பிறகு ஆண்களை போராட்டத்திற்கு அழைத்து வருகிறோம். இந்த அரசுகள் எங்களை எத்தனை கொடுமைக்கு ஆளாக்கினாலும், கொச்சைப்படுத்தினாலும் இந்த கொலைகார அணு உலையை எதிராக எங்கள் மண்ணில் உயிரை விடத் கூடத் தயாராக இருக்கிறோம்.

27ம் தேதி போராட்டம் எந்த விதமான போராட்டமாக இருக்கும்?

அமைதி வழியில் போராடும் எங்களை வன்முறைக்கு தூண்டுகிறது அரசு. நாங்கள் அமைதி வழியைதான் கடைபிடிக்க விரும்புகிறோம். இப்பொழுது நடந்த காவல் துறையின் அராஜக செயலில் இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள். எதற்காக நாங்கள் போராடு கிறோம், வாழ்வதற்குதானே ஏன் எங்களை அரசாங்கம் கொல்கிறது? நாங்கள் என்ன காக்கா குருவிகளா? ஒரு ஜனநாயக நாட்டில் நாங்கள் அனாதைகளாக நிற்கிறோம். அரசும் மக்களும் எதற்காக இருக்கிறார்கள்? இவர்களிடையே எங்கள் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம், அணு உலை மூடுவார்கள் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்து.

சந்திப்பு: சின்னக்காரி

Pin It