கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சுப.உதய குமார் தலைமையில் ஓராண்டிற்கு மேல் மக்கள் தொடர்ந்த போராட்டம நடத்தினார்கள். மார்க்சியப் பெரியாரியப் பொதுவு டைமைக் கட்சியின் சார்பில் தோழர்கள் வே.ஆனைமுத்து, இரா.பச்சமலை, க.முகிலன் ஆகியோர் சென்னையிலிருந்து கூடங் குளம் சென்று ஒரநாள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் அலகு 1, அலகு 2 ஆகியவை கடந்த அய்ந்து ஆண்டுகளாக இயங்கி வரு கின்றன. இவை இரஷ்ய நாட்டின் தொழில்நுட்பம், மற்றும் கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 3ஆம் 3ஆம் அலகுகள் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 5ஆம், 6ஆம் அலகுகளையும் கூடங்குளத்திலேயே அமைக்க இரஷ்யா வுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சப்பானில் புகுஷிமாவில் சுனாமியின்போது ஏற்பட்ட அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சால் கொடிய விளைவுகள் ஏற்பட்டன. அதுபோல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படக்கூடிய விபத்தால் தென் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் மக்களுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கூடங்குளத்தில் இரண்டு அலகு களுக்கு மேல் அமைக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கூடங்குளத்தின் முதலாவது, இரண்டாவது அலகுகள் செயல்படத் தொடங்கியபோதே, பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவு களை (ளுயீநவே சூரஉடநயச குரநட) அணுமின் நிலையத்திலிருந்து தொலைவில் பாதுகாப்பாகச் சேமிக்க (ஹறயல கசடிஅ சுநயஉவடிச) ஏற்பாடு செய்யவில்லை. இது மிகவும் ஆபத்தானது என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்திய அணுமின் உற்பத்திக் கழகம் 2013 அன்று உச்சநீதிமன்றத்தில் 2018 சூலை மாதத்திற்குள் தொலைவில் அணுக்கழிவுகளைச் சேமிக்க ஏற்பாடு செய்வோம் என்று உறுதியளித்தது. ஆனால் 2018 பிப்பிரவரி மாதம் இந்திய அணுமின் உற்பத்திக் கழகம் 2018 சூலையிலிருந்து மேலும் அய்ந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்புக் கோரி உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளது. அந்த விண்ணப்பத்தில் இரஷ்ய தொழிலுநுட்ப முறையில் எரிக்கப்பட்ட அணுக்கழிவுகளை நீண்டகாலம் சேமித்து வைப்பதற்கான முன் அனுபவம் இல்லாததால், உரிய காலத்திற்குள் இந்தப் பணியை முடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. முதல் இரண்டு உலை களின் அணுக்கழிவுகளை எவ்வாறு பாதுகாப்பாகச் சேமிப்பது என்பத தெரியாதபோது, 3ஆம், 4ஆம் அலகுகளை அமைப் பதும், 5ஆம் 6ஆம் அலகுகளுக்குத் தொடக்க வேலை மேற் கொள்வதும் இந்திய அரசு கூடங்குளத்தைச் சுற்றிலும் உள்ள பல மாவட்ட மக்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வில்லை என்பதையே காட்டுகிறது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஜி.சுந்தர ராசன் இதுகுறித்து வழக்குத் தொடுத்திருந்தார். இந்த அணு மின் உற்பத்திக் கழகம் 2018 சூலைமுதல் மேலும் அய்ந்து அண்டுகளுக்குக் காலநீட்டிப்புக் கோரியிருப்பதை அனுமதிக் கக்கூடாது என்று சுந்தரராசன் உச்ச நீதிமன்றத்தில் விண் ணப்பம் கொடுத்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் “தொலை வில் அணுக்கழிவைச் சேமிப்பதற்காக கட்டமைப்பை உரு வாக்க 2013இல் இந்திய அணுமின் உற்பத்திக் கழகம் ஒருகுழுவை அமைத்தது. அதன்பின் இதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 2017இல்தான் இதற்கான வேலையைத் தொடங்கி உள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது” என்று சுந்தரராசன் தெரிவித் துள்ளார். மேலும் இரஷ்ய வல்லுநர்களுடன் இதற்கான பேச்சு வார்த்தையையும் தொடங்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

2013 முதல் கூடங்குளம் அணுஉலை பராமரிப்புக்காக 40 தடவைகள் அதன இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. சாதார ணமாக உலகில் பராமரிப்புக்காக நிறுத்தப்படும் அணுஉலை 45-60 நாள்களில் மீண்டும் இயங்கத் தொடங்கும். கூடங்குளம் முதலாவது அணுஉலை நாங்கு மாதங்களுக்குப் பிறகே இயக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நிலைமை யாகும்.

எனவே தொலைவில் உள்ள இடத்தில் அணுக்கழிவு களைச் சேமித்து வைப்பதற்கான உரிய ஏற்பாட்டைச் செய்து முடிக்கும் வரையில் கூடங்குளம் இரண்டு அலகுகளின் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும். நியூட்டிரினோ, °டர்லiட், காவிரிப் படுகையில் மீதேன் எரிவாயு, பெட் ரோலியம் எடுத்தல் என்று தமிழர்களின் பாதுகாப்பும், வாழ் வாதாரங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் சூழலில் கூடங்குளம் நிலையான ஆபத்தாக நிற்கிறது.

Pin It