Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்று கடந்த நவம்பர் 24ஆம் நாள் தமிழக அரசு பிறப்பித்த ஓர் ஆணை இசுலாமிய மதவாதிகள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது, இதே போலவே இதற்கு முன் கடந்த அக்டோபர் 25ஆம் நாள் தில்லி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், நாட்டில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்த ஓர் ஆணையும் இசுலாமிய மதவாதிகள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இவ்வெதிர்ப்புக்கு இவர்கள் சொல்லும் ஒரே காரணம் ‘‘எங்கள் மதத்திற்கென்று தனியாக ‘ஷரியத்’ சட்டம் இருக்கிறது. அதற்குத்தான் நாங்கள் கட்டுப்பட்டவர்களே தவிர, நாட்டிலுள்ள பிற சட்டங்களுக்கு அல்ல. அப்படி எங்களைக் கட்டுப்படுத்த முயல்வது எங்கள் மத உரிமையைப் பறிப்பதாக, எங்கள் மதத்தை அவமானப்படுத்து வதாக உள்ளது என்பதுதான்’’ இந் நிலையில் இது குறித்து நமது சிந்தனைக்காகவும் விவாதத்திற்காகவும் சனநாயக மற்றும் மனித உரிமை நோக்கில் சில கருத்துகள்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக அமைதியைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களை வகைப்படுத்தி. அவற்றிற்கான தண்டனைகளை வழங்கும் வகையில் பெரும் மற்றும் சிறு சட்டங்கள் நாட்டில் பல இருக்கின்றன. இவை அனைத்து மக்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவை. அனைத்து சமூகப் பிரிவினரையும் கட்டுப்படுத்து பவை. இதில் போய் நாங்கள் சிறுபான்மை இனம் அல்லது சிறுபான்மை மதம் என்பதன் பேரால் விலக்கு கோர முடியாது. சலுகை கோரவும் முடியாது.

ஆனால், நாட்டு மக்களின் குடும்ப உறவுகள் மற்றும் பண்பாடு சார்ந்த சட்டங்கள் என்பவை இப்படி அனைத்து மக்களுக்கும் பொது வானதாக இல்லை. காரணம் பல்வேறு இனம், மதம் சார்ந்து சமூகத்தின் பல்வேறு மக்கள் பிரிவினரிடையேயும், பல்வேறு பழக்க வழக்கங்கள், மரபுகள் நிலவுவதால், அவரவர் தனித் தன்மை யையும் அடையாளத்தையும் பாது காக்கக் கூடிய வகையிலேயே இவை வெவ்வேறாக நிலவுகின்றன. குறிப் பாக குடும்ப உறவுகள் சொத்துரிமை, மண வாழ்க்கை, மண விலக்கு, மறு மணம் முதலானவை சார்ந்த சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித் தனியாகவே இருக்கின்றன.

வெள்ளை ஆதிக்கம் இந்திய மண்ணில் காலூன்றிய போது இங்கு நிலவிய மதங்கள் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், பார்சி, சீக்கியம், இசுலாமியம் மற்றும் தங்கள் ஐரோப்பிய மண்ணிலிருந்து கொண்டு வந்த கிறித்துவம் எனப் பலதரப்பட்டு இருந்தன. 1860இல் வெள்ளை ஆட்சி கொண்டுவந்த ‘இந்திய தண்டனைச் சட்டம்’ இவ்வனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகவே இருந்தது. எனில், திருமண உறவுகள் மற்றும் பண்பாடு பழக்க வழக்கங்கள் சார்ந்து இயற்றப் பட்ட சட்டங்கள் மட்டும் வெவ் வேறாக இருந்தன.

காட்டாக, Indian Christian Marriage Act 1872,  Divorce Act 1869, Marriage Validation Act 1892, Parsi Marriage and Divorce Act 1936, Muslim Personal Law (Shariat) Application Act 1937, Dissolution of Muslim Marriage Act 1939, Anand Marriage Act 1909, Arya Marriage Validation Act 1937 எனப் பல சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினர்க்கும் தனித் தனியாக நிலவின. எனினும் மேலே குறிப்பிட்ட மதத்தவர் அல்லாத பிற மதம் சார்ந்த மக்களுக்கு இப்படிப் பட்ட சட்டங்கள் ஏதும் இல்லை என்பதும் அவர்கள் மரபு வழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த எழுதப் படாத பல சட்டங்களை பின்பற்றியே வாழ்ந்தார்கள் என்பதும் நோக்கத் தக்கது.

எனில், பின்னாளில் வெள்ளை ஆட்சி இவ்வனைத்து மக்கள் பிரிவினரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு இந்துக்கள் எனப் பெயரிட இவர்களுக்கான தனிச் சட்டம், சுதந்திர இந்தியா வில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே 1955இல் உருவாக்கப்பட்டது. இதுவே இந்து திருமணச் சட்டம் 1955 எனப்படுகிறது. இது இதற்கு முன் நிலவிய எழுதப்படாத பல சட்டங்களை, குறிப்பாக வேதங்கள், ஸ்மிருதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஆக இவ்வாறாகவே நாட்டில் இந்துக்கள், இசுலாமியர், கிறித்துவர் என அந்தந்த மதத்தினர்க்கும் தனித்தனியாக சட்டங்கள் உருவாக்கப்பட்டு நிலவி வருகின்றன.

இவற்றுள் நாம் கவனிக்க வேண்டுவது இசுலாமிய மதம் சார்ந்த சட்டங்கள் இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பும், கிறித்துவ மதம் சார்ந்த சட்டங்கள் இன்றைக்கு சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பும் வெள்ளை ஆட்சியால் உருவாக்கப் பட்டு, சுதந்திர இந்தியாவிலும் அவை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நீடித்து வருகின்றன. ஆனால் 1955இல் கொண்டு வரப்பட்ட இந்து திருமணச் சட்டம், ஏற்கெனவே நிலவிய பல எழுதப்படாத சட்டங்களை, வேதங்கள். ஸ்மிருதிகளிலிருந்து தொகுத்த அதே வேளை இந்து சமூகத்தில் அவ்வப்போது எழுந்த பல சீர்திருத்தங்கள் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் சமூகத்தில் ஏற்பட்டு வரும் சனநாயக சிந்தனைகளுக்கேற்ப தன்னை மாற்றங்களுக்கு உட்படுத் தியும் வருகிறது. அதாவது சுருக்கமாக இந்து மதம் மட்டும் காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்கி தன்னை மாற்றிக்கொண்டு வர, இசுலாம், கிறித்துவ மதங்கள் மட்டும் தம்மை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்திக் கொள்ளாமல் இன்னமும் அப்படியே பழமைவாதப் போக்கிலேயே இருந்து வருகின்றன என்பதுதான்.

காட்டாக, சுதந்திரத்திற்கு முந்தைய வெள்ளை ஆட்சியில் இந்துக்களிடையே நிலவிய சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க Sati Regulation Act 1829, மரபு வழி சாரா திருமணங்களை அங்கீகரிக்க Special Marriage Act 1872, கணவனை இழந்த கைம்பெண்கள் காலம் முழுவதும் விதவையாக வாழவேண்டும் என்கிற நிலையை மாற்றி கைம்பெண்களும் மறுமணம் செய்துகொள்ள வழி வகுக்கும் Hindu Widow Remarriage Act 1856, குழந்தைத் திருமணத்தைத் தடை செய்ய Age of Consent Act 1891, குடும்ப உறுப்பினர்களின் சொத்துரிமையைப் பாதுகாக்க Indian Succession Act 1925 எனப் பலச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட துடன், சுதந்திர இந்தியாவிலும் காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே நிலவி வரும் சட்டங் களுக்கு மாற்றாகவோ, அல்லது புதிதாகவோ பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. Hindu Marriage Act 1955,  Special Marriage Act 1954, Hindu Adoption and Maintenance Act 1956, Hindu Succession Act 1956, Hindu Minority and Guardianship Act 1956 ஆகியன இப்படிப்பட்டவை. எனில், இசுலாமிய கிறித்துவ மதங்களில் மட்டும் இப்படிப்பட்ட புதிய சட்டங்களோ அல்லது பழைய சட்டங்களுக்கு மாற்று சட்டங்களோ ஏதும் இயற்றப்படவில்லை.

இப்படி இந்து மதத்தில் சாத்தியப்பட்ட இந்த மாற்றம், பிற மதங்களில் ஏற்பட இயலாமல் போனதற்கு ஒரே முக்கிய அடிப்படை காரணம், இசுலாமியர்களுக்கு குரான் போல, கிறித்துவர்களுக்கு விவிலியம் போல இறுகி கெட்டித் தட்டிப்போன எந்த நூலும் இந்துக்களுக்கு இல்லை என்பதுதான். அதாவது இந்து மதம் என்பது வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் வழி கட்டமைக்கப்பட்டதுதான் என்றாலும் அவை எந்த நாளிலும் அப்படியே மாற்றப்படாத ஒன்றாய் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டு வந்ததில்லை. மாறாக காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அது தன்னை மாற்றம் செய்து கொண்டே வருகிறது.

ஆனால், இசுலாமியம், கிறித்துவம் என்பவை இப்படியில்லை. இதில் ‘குரான்’ இருக்கிறது. ‘விவிலியம்’ இருக்கிறது. ஆகவே, இம்மதவாதிகள் பலரும் எங்களுக்கு உரிய எல்லாம் இதிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதைத் தாண்டி புதியதாக வேறொன்றும் வேண்டியதில்லை. வேறெந்தச் சட்டமும் எங்களைக் கட்டுப்படுத்தவும் தேவையில்லை என்கின்றனர்.

இந்நிலையில் நாம் இவர்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். இசுலாமியர்களோ, கிறித்துவர்களோ, இந்துக்களோ எவரானாலும், அவர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்பவர்களானாலும் அவரவரும் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இப்படி உட்பட்டேதான் அவரவரும் வாழ்ந்து வருகின்றனர். அதேபோலவே இந்திய ஆட்சிப் பரப்பிலும் வாழும் எம் மதத்தினரும் இந்த நாட்டில் நிலவும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வாழவேண்டும். வாழக் கடமைப் பட்டவர்கள்.

இதில் பல்வேறு உரிமைகள் நோக்கில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராடுவதோ அல்லது சிறுபான்மை இனங்கள், மதங்கள் தங்கள் தனித் துவம், அடையாளம் காக்க சில சலுகைகள் பெறுவது என்பதோ வேறு செய்தி. ஆனால் இச்சலுகைகள் எதுவும் சனநாயகத்திற்கு உலை வைப்பதாகவோ, தனி மனித சுதந் திரத்தைப் பறிப்பதாகவோ, மனித உரிமைகளை மீறுவதாகவோ அமைந்து விடக் கூடாது என்பது பொது நியதி, எனவே இந்தப் பொது நியதியைக் காப்பதில் அனைத்து மதத்தினரும் பெருந்தன்மையோடும், பக்குவத்தோடும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும் நடந்து கொள்ளவேண்டும்.

நாட்டில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என தில்லி உச்ச நீதிமன்றமும் தமிழக அரசும் ஆணையிட்டிருப்பதன் நோக்கம் எந்த மதத்தவரையும் புண்படுத்துவதோ, அவமதிப்பதோ, அவர்கள் மத உரிமைகளில் தலையிடுவதோ அல்ல. மாறாக ஒருவனுக்கும் ஒருத்திக்கும் திருமணம் என்பதன் பேரால் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தம் இருவருக்கும் சட்டபூர்வமானதாக, இருவரில் எவர் பாதிக்கப்பட்டாலும் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதாக, நியாயம் வழங்குவதாக இருக்க வேண்டும் என்பதுதானே தவிர வேறு அல்ல.

இந்து, கிறித்துவ மதங்களை ஒப்பு நோக்க, இசுலாமிய மதத்திலேயே பெண்ணடிமைத் தனம் மிகுதி என்பதும், இம்மதத்திலேயே பெண்கள் அதிகம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும், இசுலாமிய மதத்தில் உள்ள சனநாயக சக்திகளாலே ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மை. இப்படிப்பட்ட நிலையில், பாதிப்புக்குள்ளா கிறவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு நியாயம் வழங்குவதும் அரசின், ஆட்சியாளர்களின், நீதிமன்றங்களின் கடமை. இந்தக் கடமையின் தேவையிலிருந்தே கட்டாயத் திருமணப் பதிவு குறித்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் உள்ள வேறு எந்த மதத்தினரும் இதை எதிர்க்காத நிலையில் இசுலாமிய மதத் தலைவர்கள் மட்டும் இதை எதிர்த்துள்ளனர். பிற எல்லா மதத்தவரையும் போல இன்றுள்ள நவீன வாழ்க்கை வசதிகளை, அறிவியல் முன்னேற்றங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, 1200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குரானை, இன்றைக்கும் அப்படியே வரி பிசகாமல் பின்பற்றிக் கொண்டு வாழ முடியுமா, வாழ முயல்வது நியாயமா என்பதை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும். ஆதிக்க மதமும் அடிமைப்பட்ட மதமும் மோதும் போது அடிமைப்பட்ட மதத்தின் பக்கம் நிற்பது நியாயமானதுதான். ஆனால் மத உரிமையும், மனித உரிமையும் மோதும்போது மனித உரிமையின் பக்கம் நிற்பதே நியாயமானது. இந்த நியாயத்தை இசுலாமியர்கள் உணரவேண்டும். கட்டாயத் திருமணப் பதிவு ஆணையை எதிர்ப்பின்றி ஏற்கவேண்டும்.

- இராசேந்திர சோழன்

(மண்மொழி ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Malarbala 2010-03-21 23:54
Arumayan kattturai.
Report to administrator
0 #2 அ.ஹாஜாமைதீன் 2010-03-23 04:55
சகோதரர் இராசேந்திர சோழன் அவர்களுக்கு,
திருமணங்கள் கட்டாயப் பதிவுச் சட்டத்திற்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்திருக்க ிறீர்கள்,

தமிழக அரசும், உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பும்
திருமணங்களை கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்கிறது, மற்றவர்களுக்கு வேண்டுமானால் புதுமையாக இருக்கலாம், ஆனால் சாட்சிகளுடன் திருமணங்களை பதிவு செய்யும் முறை ஏற்கனவே இஸ்லாமியர்களிடம ் உண்டு

""பிற எல்லா மதத்தவரையும் போல இன்றுள்ள நவீன வாழ்க்கை வசதிகளை, அறிவியல் முன்னேற்றங்களைய ெல்லாம் அனுபவித்துக் கொண்டு, 1200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குரானை, இன்றைக்கும் அப்படியே வரி பிசகாமல் பின்பற்றிக் கொண்டு வாழ முடியுமா, வாழ முயல்வது நியாயமா என்பதை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும். "" என்ற அறிவுரையுடன் தங்களது கட்டுரையை நிறைவு செய்திருக்கிறீர ்கள்,

ஐயா இராசேந்திர சோழன் அவர்களே, முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், "குர் ஆன்" உருவாக்கப் பட்டதல்ல மாறாக இப்பேரண்டத்தை படைத்த இறைவனால் முஹம்மது நபியவர்களுக்கு 1431 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட சட்டம்.

இறைவனை எப்படி வணங்கவேண்டும், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை மிகத்தெளிவாக எடுத்துரைத்து இறுதிநாள் (உலக முடிவு)வரை இதுதான் உலக மக்கள் அனைவருக்குமான வேதம் என்று உரத்து கூறுகிறது,

"1200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குரானை, இன்றைக்கும் அப்படியே வரி பிசகாமல் பின்பற்றிக் கொண்டு வாழ முடியுமா?" என்று கேள்வி கேட்ட நீங்கள் உங்களையும் அறியாமல் "குர் ஆன்" எல்லா காலத்திற்கும் பொருந்தும் என தங்களது கட்டுரையின் வாயிலாக தெரிவிக்கின்றீர ்கள்...

சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க Sati Regulation Act 1829 ல் தான், கொண்டுவரப்படுகி றது இந்த சட்டம் மட்டும் இல்லையென்றால் பல "ரூப்கன்வர்" கள் பரலோகம் சென்றிருப்பார்க ள், "இஸ்லாம் தற்கொலை செய்து கொள்வது (ஹராம்) தடுக்கப்பட்டது என்பதுடன் நிரந்தர நரகம் என்று எச்சரிக்கிறது."

கணவனை இழந்த கைம்பெண்கள் காலம் முழுவதும் விதவையாக வாழவேண்டும் என்கிற நிலையை மாற்றி கைம்பெண்களும் மறுமணம் செய்துகொள்ள வழி வகுக்கும் Hindu Widow Remarriage Act 1856ல் இயற்றப்பட்டது, "ஆனால் 1431 ஆண்டுகளுக்கு முன்பே நபியவர்கள் பல விதவைகளை மறுமணம் செய்து, மற்ற மனிதர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருந்திருக்கிறா ர், இஸ்லாம் விதவைகளை மறுமணம் செய்துகொள்ள மிகவும் வலியுறுத்துகிறத ு.

குடும்ப உறுப்பினர்களின் சொத்துரிமையைப் பாதுகாக்க Indian Succession Act 1925, "குர் ஆன்" 1431 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கிவிட்டது

இஸ்லாத்தில் துறவரம் இல்லை, திருமணம் எனது வழிமுறை என நபிகள் நாயகம் கூறிச் சென்றுள்ளார் இன்றைய காலகட்டத்தில்.. . நபிகளின் கூற்று நமக்கு புரிகிறது...! "குர் ஆன்" 6ம் நூற்றாண்டில் கூறியதை, மனித அறிவு 19ம் நூற்றாண்டில் சரிகான்கிறது

இஸ்லாம் நவீன வாழ்க்கை வசதிகளுக்கோ, அறிவியல் முன்னேற்றங்களுக ்கோ, எதிரான மார்க்கமல்ல, பெண்ணடிமைத் தனம் மிகுதி என்று எதை குறிப்பிடுகிறீர ்கள்? பர்தா அணிவதையா, பெண்கள் வீட்டிற்குள்ளேய ே இருப்பதையா?

மனிதர்களைப் படைத்த இறைவனுக்குத்தான ் தெரியும் மனிதனின் பலம் என்ன, பலவீனம் என்ன என்று, மனிதச் சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறக்கூடியது இறைவனின் சட்டம் அப்படியல்ல.
Report to administrator
0 #3 sundararajan 2010-03-23 04:56
The indifferent and different approach of the Indian political parties towards the people's personal laws is the main cause. In the system of Democracy the state should not have any bias towards any relegion, but our state has such bias due to the electoral system, where the existence of the political parties and its power depends on people's vote. Voting system is a must in democracy. So it should be based on policies, and plans of the political parties and it's performence while in power. With out such changes in the electoral system nothing new is possible.
Report to administrator
0 #4 Sakthi Ganesh 2010-03-23 22:30
மனிதனால் உருவாக்கபட்ட மத நூல்களை கடவுள் படைத்தான் என்று சொல்லுதே மிகப் பெரிய அறியாமை

கடவுள் எல்லா ஆற்றலும் படைத்தவராகின் ஏன் நூல்களை படைத்து அதை மனித்தர்கள் பின்பற்றும்வரை மெனக்கட வேண்டும்,பேசாமல ் கடவுளை பற்றிய அறிவை மனிதனின் மூளையில் அவறெ ஏற்றி விட்டருந்த்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது ... பாவம் கடவுள் ரொம்பதான் சிரமப்படுகிறார்!

கற் சிலையை தேய்வமன்று கை கூப்புவார் ‍‍‍‍‍ சிலர்
கடவளுக்கு ஒருவமில்லை எனப் பிதட்றுவார்

எதற்கு இந்த தெய்வங்களா தெரியாது‍ பலமுறை
எடுத்து எடுத்து சொன்னாலும் புரியாது
Report to administrator
0 #5 மால்கம் X இராசகம்பீரத்தான் 2010-03-26 01:04
கடவுளுக்கு இல்லை என்று பெயர் வைத்து கூப்பிடுவர்
நாத்திகர்கள்.

பெரியாரை விட அதிகமாக இஸ்லாமிய பிரச்சாரம் அதிகமாக பண்ணீயவர் தமிழகத்தில் எவருமில்லை.

இல்லையா இருக்கிறதா என்பதல்ல பிரச்சனை..
ஆண்மிக விவாதம் தேவை இல்லை.

ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இன்னும் ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்தும் மாற்றம் இல்லாமல்
நன்னெறி தரும் சட்டங்களை நீங்கள் ஆரய்சி செய்து பாருங்கள்.. பிறகு நீங்கள் எதிர்பதற்கு தயாராகுங்கள்.

நேற்று உங்களுக்கு நாகரிகமாக தோன்றியது எல்லாம் இன்று உங்களுக்கு அநாகரிகமாகிவிட் டது, நேற்றைய சமுக குற்றம் எல்லாம் இன்றைய சமுக பெருமையாகிவிட்ட ்து. நேற்றைய பெருமைகள் எல்லாம் உங்களுக்கு இன்று குற்றமாக தெரிகிறது.. ஒவ்வொரு ஆட்சி மாற்றதிலும் சட்டங்கள் மாறலாம்,..

ஒரு பத்து நூற்றாண்டு முண்ணோக்கி செல்லுங்கள் எல்லா சட்டங்களையும் ஆய்வு செய்யுங்கள், வரக்கூடிய இன்னொரு பத்தாண்டுகளுக்க ு எப்படி சட்ட்திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதையும் ஆய்வு செய்யுங்கள்.
இப்பொழுது ,குரானையும் இசுலாமிய சட்ட்திட்டங்களை யும் ஆய்வு செய்யுங்கள்.
நீங்கள் பழமைவாதம் என்று முத்திரை குத்துவதற்கு முன்பு முதலில் இசுலாத்தையும் அதன் சட்டதிட்டங்களைய ும் ஆராய்சி செய்யுங்கள்.
Report to administrator
0 #6 மால்கம் X இராசகமிபீரத்தான் 2010-03-26 10:03
நண்பர் Sakthi Ganesh அவர்களுக்கு வணக்கம்,

திருக்குரளின் ஆழ்ந்த நண்ணெரிகளை உலகம் முழுவதுக்கும் பொதுவானதாகும் என்பது வாதம் என்றால்.

திருக்குரளை பள்ளி பாடபுத்தகத்திலு ம் ,பேருந்துகளிலும ் எழுதி வைத்து அழகு பார்பதால் தமிழகமே திருக்குரளை பேணுவதாக கருத முடியாது, இது தனி மணித ஒழுக்கம் சார்ந்தது.

இஸ்லாமிய சட்டத்திட்டங்கள ும் அப்படியே.

இன்று வழம் இழந்து குற்ற செயல் மிகுந்து காணப்படுகிற நாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் மிகவும் செல்வ செழிப்போடு இருந்த நாடுகள் ஆகும். ஆனால் தொடர்சியான காலணி சுரண்டல்களினாலு ம், பொருளாதார சுரண்டலினாலும் நிலைகுழைந்து போய் உள்ளது,

அதற்கு பெரிய எடுத்து காட்டு, மத்திய ஆப்ரிக்கா நாடுகளை கூறலாம்.ஆப்கானி ஸ்தான், போன்ற நாடுகளில் நிதி ஆதரங்கள் மட்டும் அல்ல நொரு நிலையான ஆட்சிகள் எதுவும் இல்லாமல் ,உள் நாட்டு ,அயல் நாட்டு போராள் சீரழந்து வருகிறது... இப்படி இருக்கும் நாடுகளில் எந்த ஒரு சட்டமும் பயன் தராது.

மற்றபடி ஊடகங்களின் இஸ்லாமிய எதிர்புகளினால் நமக்கு என்ன காட்டபடுகிறோதோ அதை நமியாக வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
Report to administrator
0 #7 Sakthi Ganesh 2010-03-26 14:34
நண்பர் மால்கம் X இராசகம்பீரத்தான ் அவர்களுக்கு
இசுலாமிய சட்ட்திட்டங்களை ஆய்வு செய்வதற்க்கு முன்னாள் கீழ்கண்ட விவரங்களை ஒப்பு நோக்குக

உலக்தில் மூஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள்
http://en.wikipedia.org/wiki/Majority_Muslim_countries

அவற்றில் இசுலாமிய சட்ட்திட்டங்களை முழமையாக அமல் படுத்தி உள்ள நாடுகள்
The Islamic Republic of Iran
Saudi Arabia.

இந்த வேறுபாட்டினை ஒப்பு நோக்குக

மேலும் மூஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில்(அ)இசு லாமிய சட்ட்திட்டங்களை முழமையாக அமல் படுத்தி உள்ள நாடுகளில்
சிருபான்மயினர் நிலை
பெண்களுகான உரிமை

மனித உரிமைகள் கடைபிடிக்கப்படு ம் முறை ((Not an Islamic view of human rights but the Universally Accepted ( UNO)Universal Declaration of Human Rights )
http://www.youthforhumanrights.org/introduction/udhr_abridged.html

இவற்றினை இன்றய காலத்தோடு ஒப்பு நோக்கினால் இசுலாமிய சட்ட்திட்டங்களி ல் பொருந்தாத அம்சங்கள் எனென்ன உள்ளன என்பது உங்களூக்கே புரியும்( மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புவோம்)
Report to administrator
0 #8 மால்கம் X – இராசகம்பீரத்தான். 2010-03-26 14:36
எதிர் வினை- ”திருமணங்கள் கட்டாயப் பதிவுச் சட்டம் - மத உரிமையும் மனித உரிமையும் ”

சமுக மாற்றத்திற்கு அல்லது கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டும் என்பது சரியே, ஆனால் ஒவ்வொரு மாற்றத்திலும் அதன் நன்மை தீமைகளை கணக்கில் கொண்டே இது தேவை தேவை இல்லை என்ற முடிவிற்கு வரவேண்டும். மிகவும் தொண்மை என்ற ஒரே காரணத்திற்காக இசுலாமிய சட்டங்களை புறக்கணிக்கபட வேண்டும் என்பது சரியல்ல.,

எடுத்துகாட்டாக பாலியல் சார்ந்த உறவுகளுக்கான உரிமை என்ற பெயரில் இயற்கைக்கு எதிரான பெரும் விபரீத மாற்றங்களையும் கலாச்சார மாற்றங்களாய் முற்போக்கான விசயமாக கருதுவதும் ,இன்னும் சட்டங்களாக அங்கிகரிப்பதும் இன்று பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்ட்து.

ஆனும் ஆனும் அல்லது பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம்.ஒரு பெண் எத்தனை ஆண்களுடனும் திருமணம் செய்வது, திருமண உறவுகள் இல்லாமல் விரும்பியவருடன் , விரும்பிய வரை திருமணம் செய்வது, திருமணத்திற்கு முன்பே பாலியல் உறவு கொள்வது (living together , pre sex, dating , gay marriage ,lesbian sex, free sex, gang sex ) இவையெல்லாம் இன்று சமகால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டும் என்போரின் நிலைபாடு. இயற்கைக்கு முறனான எந்த ஒரு பாதிப்பை பற்றியும் கவலை படுவது இல்லை.. நாகரீகம் வளர்ந்து விட்டது யார் யாரோடு வேண்டுமானாலும் புணையலாம்....இத ு கொடும் செயல் இது சமுகத்தினை அழித்துவிடும் என்று சொன்னால் அவன் பிற்போக்குவாதி.

இஸ்லாம் எல்லாவற்றிலும் ஒரு வரையரை கோடிட்டு குறுக்கிடுவது முற்போக்கு வாதிகளுக்கு எரிச்சலூட்டும் விசயமாகிவிட்டது . அது வியாபாரம், கொடுக்கல் வாங்கள், திருமண உறவு, குடும்ப நலம், சமுதாய கடமைகள், குற்றவியல்கள் என பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு வறையரைக் –குட்படுத்தியுள ்ளதால் சுதந்திரம் பறிபோனதாக முற்போகு வாதிகளால் கருதப்படிகிறது.

இஸ்லாமும் அதன் சட்டங்களும் அதனை கடைபிடித்து வருபவர்களும் இப்படித்தான் பழமைவாதிகளானார் கள்.

ஒரு பக்கம் தீவிர இந்துத்துவவாதிக ளால் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் இஸ்லாம் பழமைவாதம் பேசுகிறது என சில முற்போக்காளர்கள ும் இஸ்லாமிய சட்டங்களை உறசி பார்பதும், முடிந்த அளவிற்கு சிறுபான்மையினரி ன் உரிமைகளை பிடுங்கி எறிவதற்கான வேலைகள் நடந்த வண்ணம் உள்ளது. அதன் ஒரு முயற்சிதான் தோழர் இராசேந்திர சோழன் அவர்களின் ”திருமணங்கள் கட்டாயப் பதிவுச் சட்டம் - மத உரிமையும் மனித உரிமையும் ” என்ற கட்டுரை. தோழர் இராசேந்திர சோழன் அவர்கள் அறியாமையின் விழிம்பிருந்து எழுதியுள்ளார்.

தோழர் இராசேந்திர சோழன் அவர்கள் எந்த ஒரு மதச் சட்டமே வேண்டாம் என சொல்லிருந்தாலும ் அவரை மிகவும் புரட்சிகரமானவர் என எண்ணியிருக்கலாம ், ஆனால் அவரோ ,இந்து மத சட்டங்களை கோடிட்டு அதன் காலத்திற்கு ஏற்ப மாறும் சட்டங்களை காண்பித்து இந்த புரட்சி மாற்றங்கள் இஸ்லாத்திலும், கிருஸ்துவத்திலு ம் இல்லை இஸ்லாமியர்கள் மிகவும் பழமைவாதிகள் என கூறியிருப்பது தான் மிகவும் வேடிக்கை. பொது சிவில் சட்டம் வேண்டும் என கூறும் கூட்டாதாற் என நினைக்கிறேன்.

இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் சரியத் சட்டங்கள் தோன்றி 1431 வருடங்கள் ஆகிவிட்டன என்பதினை தோழருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அது பிரிட்டிசாரின் ஆட்சியில் ஏற்படுத்தியது அல்ல.

பெண் குழந்தைகள் பிறந்த உடனே குழி தோண்டி புதைக்கும் வழக்கம் கொண்ட காட்டு மிராண்டிகள் வார்ழந்த காலத்தில், ஒரு பெண்ணை விபச்சார எந்திரமாக உபோயோகித்த காலத்தில்.. இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு உயர்வான கண்ணியம் தந்த்து. உலகில் முதல் தோன்றிய பெண்ணுரிமை இயக்கமே நீங்கள் சொன்ன பழமைவாத இஸ்லாம் தான்.

ஒரு முறை பெருமானார் அவர்கள் தங்களின் தோழர்களின் முன்னால் “எவர் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளை பெற்று அவர்களுக்கு கன்ணியமான வாழ்க்கை அமைத்து தருகின்றனரோ அவர் என்னுடன் சொர்கத்தில் சேர்ந்து இருப்பார்கள் ”என்றார்.

அதற்கு உடன் இருந்த தோழர்கள் எல்லாம் தங்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இருப்பதில் மிக்க மகிழ்சியுற்றவர் களாய் இருந்தனர். ஒரு நபி தோழர் மட்டும் எழுந்து இறைதூதரே எனக்கு ஒரு பெண்குழந்தை மட்டும் தான் உள்ளது .. ஒரு பெண்குழந்தையை பெற்றவர்களுக்கு சொர்கத்தில் உங்களுடன் இருக்கும் பாக்கியம் இருக்குமா என மிகவும் ஏக்கத்துடன் கேட்டார், அதற்கு இறைதூதர் அவர்கள் ஒரு பெண் குழந்தையை பெற்றவரும் தான் என கூறியவுடன் எல்லோரும் மிகுந்த மகிழ்சி கொண்டார்கள். இஸ்லாமியர்கள் அன்று தொட்டு பெண் குழந்தைகள் பிறப்பதை தங்களின் பாக்கியமாக கருத தொடங்கினார்கள், அதனால் தான் இன்றும் அரபு தேசங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் மிக்க மகிழ்சி கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் இசுலாமியர்கள் நேர் மாறக இருப்பதற்கு காரணம் மற்ற பெரும்பாண்மை சமுகத்தின் தாக்கம் தான்.

இன்னும் கல்லி பால் (பெண் சிசு கொலை) கலாச்சாரத்தினை முழுமையாக நம் நாட்டு சட்டங்கள் அழித்திவிட்டனவா என்பதை ஆராய்சி செய்யுங்கள்.

முதன் முதலில் பெண்களுக்கு சொத்துரிமை தந்தது நீங்கள் சொன்ன பழமை வாத இஸ்லாம்தான் ...இந்தியாவில் எப்பொழுது பெண்களுக்கு சொத்துரிமை வந்த்து என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுஙகள்.

முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது பிரான்ஸ் ல் 1842 ஆம் வருடம் , சுமார் நூறு வருடங்கள் கழித்துதான் அமெரிக்காவில் 1920 ல் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமையே வழங்கப்பட்டது.

அதுவரை பெண்கள் ஒரு மணித இனமாக கூட கருதப்படவில்லை. ஆனால் 14 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாத்தின் ஆட்சி அதிகாரங்களை தீர்மாணம் செய்பவர்களாக பெண்கள் இருந்துள்ளார்கள்.

வரதட்சனை எனும் கொடுமை இந்த நூற்றாண்டிலும் ஒவ்வொரு வீட்டை விட்டும் வெளியாரத நிலையில் , 14 ஆம் நூற்றாண்டிலேயே திருமண உறவில் மருமலர்ச்சி செய்த்து நீங்கள் சொன்ன அதே பழமைவாத இஸ்லாம் தான். இஸ்லாம் செய்த புரட்சி பெண்களுக்கு ஆண்கள் வரதட்சனை தர வேண்டும் என்பது தான் அது .

ஒரு பொற்குவியலயே பெண்கள் வரதட்சனையாக கேட்டாலும் ஆண்கள் அதை கொடுத்து தான் திருமணம் செய்து கொள்ளமுடியும்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் வீடுகளில், உறவினர்கள் வீடுகளில், தெருக்களில், ஊர்களில் இன்னும் எத்தனை கோடி பெண்கள் திருமண உறவு இல்லாமல் அழுது புழம்புகின்றனர் வரதட்சனை எனும் பேய் எங்கிருந்து வந்தது?

வரதட்சனை என்பது மாபாதக சமுக கேடு என நமகெல்லாம் தெரிய வந்த்தே இந்த நூற்றாண்டு, அதிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தான். தந்தை பெரியாரும் இந்த நாட்டில் இல்லாவிட்டால் இன்னும் ஒரு நூற்றாண்டு பிடித்திருக்கும்.

அதை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்ட்து எந்த நூற்றாண்டில் , வரதட்சனை வண் கொடுமை சட்டம் எந்த அளவிற்கு பயனுள்ளதாக உள்ளது என்பதையெல்லாம் நீங்களை ஆராய்சி நோக்குடன் கவணிக்க வேண்டும்.

பெண்களின் மருமணத்தை பற்றி 50 வருடஙகளுக்கு முன்னால் உங்களால் பேசியிருக்க முடியுமா? 100 வருட்திற்கு முன்னால் உங்களால் நினைத்து கூட பார்திருக்க முடியாது. ஆனால் நிங்கள் சொன்ன பழமைவாத இஸ்லாம் தான் 14 ஆம் நூற்றாண்டிலேயே பெண்களுக்கு மருமணம் தந்தது. அது திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்றோ, சொர்கத்தில் நிச்சயக்கப்பட்த ு என்றோ கூறவில்லை.

திருமணம் என்பது ஆனுக்கும் ,பெண்ணுக்குமான ஒரு ஒப்பந்தம் என்றது.

கல்லானாலும் கணவன் ,புல்லானாலும் புருசன் என்று விதியை நொந்து அப்படியே ஏற்று கொண்டு வாழ வேண்டும் என்று சொல்லவில்லை.

ஒத்து வராதா திருமணத்திற்கு விலக்கு உண்டு , மருதிருமணம் செய்துகொள்ளலாம் என்கிறது உங்கள் பார்வையில் பழமைவாத இசுலாம்.

இன்னும் ஊரே செர்ந்து புணரலாம் என்ற தேவதாசி முறை எந்த அடிப்படையில் தொன்றியது , அந்த முறையினை தடுக்க நம் நாட்டில் எப்பொழுது சட்டம் கொண்டு வரப்பட்ட்து ? அது எந்த அளவிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ,

நாட்டில் விபச்சாரங்களை எந்தளவிற்கு உங்களின் சட்டங்கள் தடுத்துள்ளது என்பதையும் நீங்களே உங்களின் ஆராய்சிக்கு கொண்டு செல்லுங்கள்.

ஆனால் உங்களின் பார்வையில் பழமைவாதமாக தோன்றும் இசுலாம் பல நூற்றாண்டுகளுக் கு முன்பே விபச்சாரத்தின் அனைத்து வழிகளையும் இருக்க மூடிவிட்ட்து. இரண்டு மனைவிகள் இருப்பது சமுக குற்றமாக கருதும் நம் சட்டம் ஆனால் எத்தனை வைப்பாட்டிகளும் வைத்துகொள்ளாலாம ் நம் நாட்டில்.

ஒரு வைப்பாட்டிக்கு அல்லது முறை தவறி பிறந்த குழந்தைகளின் சமுக அவலங்களையும் நீங்கள் அறிவீர்கள் என்றால் நீங்கள் பெருமை பட்டு கொள்ளும் சட்டங்களை நீங்கள் மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்து பாருங்கள்.

ஒரு பெண் குழந்தையை பாதுகாக்க வேண்டியது ஒரு தந்தையின் கடமை, தந்தைக்கு பின் சகோதரனின் கடமை , கணவனை விட்டு பிரிந்து வந்தாலும் அவளின் தந்தையில்லாத பட்சத்தில் தன் சகோதரன் அவளை பார்த்து கொள்வது கடமையாகும். அவளுக்கு வயதும் ,விருப்பமும் இருந்தால் அவளுக்கு திருமணம் செய்து வைப்பதும் அவர்களின் மீது கடமையாகும்...இப ்படி ஒரு பெண்ணுக்கு எல்லா காலகட்டத்திலும் பாதுகாப்பு அளிக்கும் இசுலாம் உங்களின் பார்வையில் பிற்போக்குவாத மதமாக தோண்றுகிறது.

1431 வருடஙகளுக்கு முன்பே கல்வி கற்பது ஒரு ஆனுக்கும் பெண்ணுக்கும் கடமை என்றது இசுலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப மாற்றம் கண்டுள்ள எந்த சட்டங்களும், மத கோட்பாடுகளும் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியை கடமையாக்கியது என்று ஒரு முறை நீங்கள் ஆராய்சி செய்யுங்கள்.

உலகின் வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பெண் சுதந்திரம் என்பது எந்த நூற்றாண்டில் கிடைத்தது என்பதை தயவு செய்து உங்களின் ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். அதிகம் போகத் தேவையில்லை ஒரே ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தான் பெண்களை மணித இனமாகவே அங்கிகரித்து இன்றைய மேற்கத்திய நாடுகள். ஓட்டுரிமையோ, சொத்துரிமையோ, இல்லை திருமண உரிமையோ இல்லை வெரும் மணித இனமாக கருதுவதற்கே இத்தனை நூற்றாண்டுகள் தேவை பட்டுள்ளது.

பெண் அங்களை கடை விறித்து முற்போக்கு பெண்ணுரிமை வியாபாரம் செய்யும் கூட்ட்த்திற்கு மத்தியில் பெண்களை அவர்கள் பிறப்பு முதல் இறப்புவரை கண்ணியம் தந்து சிறப்பிப்பது இசுலாம் தான்.

பெண்குழந்தை பிறந்தால் சிறப்பு, மிகவும் கண்ணியமான பெண்களின் திருமணம் , உயர்வான சமுக உரிமை என்றெல்லாம் தந்த இசுலாம், சொர்கத்தை எங்கெங்கோ தேடி அலையவேண்டாம் ,கடும் தவம் புரிய வேண்டாம் இதோ உன் தாயின் பாதத்தின் கீழ் தான் சொர்கம் உள்ளது என்கிறது. இவ்வளவு பெண்ணுரிமையை பேணும் இசுலாம் தான் இன்று பழமைவாத மதம், பெண் அடக்குமுறை அதிகம் உள்ள மதம் என பேசப்படுகிறது.

நேற்று உங்களுக்கு நாகரிகமாக தோன்றியது எல்லாம் இன்று உங்களுக்கு அநாகரிகமாகிவிட் டது, நேற்றைய சமுக குற்றம் எல்லாம் இன்றைய சமுக பெருமையாகிவிட்ட ்து. நேற்றைய பெருமைகள் எல்லாம் உங்களுக்கு இன்று குற்றமாக தெரிகிறது.. ஒவ்வொரு ஆட்சி மாற்றதிலும் சட்டங்கள் மாறலாம், ஒவ்வொரு காலத்திற்கும் உங்களின் கொள்கைகளும், சட்டங்களும் மாறும் நாங்கள் மாற மறுத்தால் நாங்கள் பழமைவாதிகள், மீறி திமிறினால் தீவிரவாதிகள்?

ஆனால் இஸ்லாம் பிறப்பு முதல் ,இறப்பு வரை சொல்லும் ஒவ்வொரு சட்ட்திட்டங்களு ம். இன்னும் ஆயிரமாயிரம் வருடங்கள் ஆனாலும் உலகில் உள்ள மணித இனம் முழுமைக்கும் எல்லா கால கட்டதிற்கும் பொருந்தி போகும் சட்டங்கள் தான என்பதை முற்போக்குவாதிக ள் என கூறுபவர்கள் ஆராய்சி செய்து பார்கட்டும்.

ஒரு பத்து நூற்றாண்டு முண்ணோக்கி செல்லுங்கள் எல்லா சட்டங்களையும் ஆய்வு செய்யுங்கள், வரக்கூடிய இன்னொரு பத்தாண்டுகளுக்க ு எப்படி சட்ட்திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதையும் ஆய்வு செய்யுங்கள். இப்பொழுது, குரானையும் இசுலாமிய சட்ட்திட்டங்களை யும் ஆய்வு செய்யுங்கள்.

நீங்கள் பழமைவாதம் என்று முத்திரை குத்துவதற்கு முன்பு முதலில் இசுலாத்தையும் அதன் சட்டதிட்டங்களைய ும் ஆராய்சி செய்யுங்கள்.

மால்கம் X – இராசகம்பீரத்தான ்.
Report to administrator
0 #9 எசாலதான் 2010-03-31 12:54
சக்தி கணேஷ் கூறியதை நான் ஆமோதிக்கிறேன் . //மனிதனால் உருவாக்கபட்ட மத நூல்களை கடவுள் படைத்தான் என்று சொல்லுதே மிகப் பெரிய அறியாமை//
Report to administrator
0 #10 a 2010-04-08 05:17
//ஒரு பெண்ணை விபச்சார எந்திரமாக உபோயோகித்த காலத்தில்.. இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு உயர்வான கண்ணியம் தந்த்து. உலகில் முதல் தோன்றிய பெண்ணுரிமை இயக்கமே நீங்கள் சொன்ன பழமைவாத இஸ்லாம் தான். //

தவறு. முகம்மது நபி ஒரு பணக்கார வியாபாரியாக இருந்த பெண்ணிடம் (கதீஜா) வேலை பார்த்தார். அப்படி இருக்கும்போது ஏதோ இஸ்லாம் வந்துதான் பெண்களுக்கு உரிமை வந்தது போல பேசுவது ஏனோ? இஸ்லாம் வருவதற்கு முன்னால் அரபிய பெண்கள் பர்தாவோ முகமூடிகளோ அணியாமல் பெரிய கவிஞர்களாகவும், தலைவர்களாகவும், அரசாள்வோர்களாகவ ும் இருந்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த பெண்கவிஞரை கொல்ல ஆளை அனுப்பி போட்டுத்தள்ளினா ர் முகம்மது. இன்னொரு நாட்டை ஆண்டுவந்த ஒரு அரபிய பெண்ணை (சொல்லபோனால் வயது முதிர்ந்த கிழவியை) கண்டம் துண்டமாக வெட்டி கொன்றார். இஸ்லாம் தோன்றியதும் அதற்கு மூடுவிழா நடத்த்தப்பட்டது . “பெண்ணாள் ஆளப்படும் நாடு உருப்படாது. அது நிச்சயம் தோல்வியடையும்” என்று திருவாய் மலர்ந்ததும் முகம்மதுதான்.

இந்த லட்சணத்தில் இஸ்லாம் பெண்ணுரிமை இயக்கமாம்.
//ஒரு பெண் குழந்தையை பாதுகாக்க வேண்டியது ஒரு தந்தையின் கடமை, தந்தைக்கு பின் சகோதரனின் கடமை , கணவனை விட்டு பிரிந்து வந்தாலும் அவளின் தந்தையில்லாத பட்சத்தில் தன் சகோதரன் அவளை பார்த்து கொள்வது கடமையாகும். அவளுக்கு வயதும் ,விருப்பமும் இருந்தால் அவளுக்கு திருமணம் செய்து வைப்பதும் அவர்களின் மீது கடமையாகும்...இப ்படி ஒரு பெண்ணுக்கு எல்லா காலகட்டத்திலும் பாதுகாப்பு அளிக்கும் இசுலாம் உங்களின் பார்வையில் பிற்போக்குவாத மதமாக தோண்றுகிறது.//

என்னய்யா இது? சுதந்திரமாக நாடாள்வோர்களாக இருந்த பெண்களை கூண்டிலடைத்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆணின் பாதுகாப்பிலேயே இருக்கவேண்டும் என்று செய்வது முற்போக்கா?

//முதன் முதலில் பெண்களுக்கு சொத்துரிமை தந்தது நீங்கள் சொன்ன பழமை வாத இஸ்லாம்தான் ...இந்தியாவில் எப்பொழுது பெண்களுக்கு சொத்துரிமை வந்த்து என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுஙகள்.//

கதீஜா பிராட்டி சொத்து இல்லாமல் பஞ்சை பராரியாக இருந்தாரா? இஸ்லாம் வருவதற்கு முன்னால் பெண்களே சுதந்திரமாக் சென்று வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர். அவர்களை ஆண்களின் பாதுகாப்பிலேயெ இருக்கவேண்டும் என்ற் வைத்து அவர்களை பிச்சைக்காரர்கள ாக ஆக்கியது இச்லாமே.
Report to administrator
0 #11 கணேசன் 2010-04-19 00:17
முஸ்லீம் சமுதாயத்துக்குள ் குழந்தை திருமணம் சர்வ சாதாரணம். இவை ஜமாத்துக்களாலேய ே முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டுவிட ுகின்றன. இப்படி கட்டாயமாக அந்த திருமணங்களை பதிவு செய்யவேண்டும் என்று வந்தால் இந்த குழந்தை திருமணங்கள் வெளியே தெரியவரும். இதுவே இஸ்லாமிய மதவெறியர்கள் இதனை எதிர்க்க ஒரே காரணம்,
Report to administrator

Add comment


Security code
Refresh