பல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக படகில் தனஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் சென்று வந்தனர்.

pamban_bridge_640

1876-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னாளில் இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.

மதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தில் சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகத்துக்கு செல்லும்.

அப்போது தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் இருந்தது.

இந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

pamban_bridge_642

1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்- ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார்.

1986-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கி.மீட்டர் ஆகும்.

இந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா- வொர்லி இடையே உள்ளது.)

இந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல்அரிப்பை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை பாலத்தின் தூண்களில் அலுமினியம் பூசப்பட்டு வந்தது. பொதுவாக 60 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினால் ரெயில்கள் நிறுத்தப்படும்.

முதன் முதலில் 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கொலம்போ செல்வதற்கான ரயில்-கப்பல் (சென்னையில் இருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்து பின்னர் கப்பல் மூலம் கொலம்போ செல்லும் boat mail சேவை) பயணத்திற்காக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது.

pamban_bridges_640

18000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18000 டன் இரும்பு ஆகியவை கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இருந்தும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.

சில காலம் முன்பு வரை கப்பல்கள் செல்லும் போது மனிதர்களே இந்த இரும்பு பாலத்தை இயக்கினர். பின்னர் 2007 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே குறுகிய தண்டவாளங்களை நீக்கி அகல ரயில் பாதையாக மாற்றியபோது, பாலத்தை இயக்க இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்து, இயந்திரங்கள் மூலம் பாலம் இயக்கப்பட்டது.

பாம்பன் பாலத்தின் வழியாக செல்லும் ரயில்கள்:
16713 – Rameswaram exp
16701 – Rameswaram exp

Pin It

அமெரிக்கன் வெஸ்புக்கி என்பவர்தான் ஒரு நிலப்பரப்பை கண்டறிகிறார்‌. அவர் மூலம் அந்த நிலப்பரப்புக்கு சென்ற கொலம்பஸ் அந்த நிலப்பரப்பை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார். அமெரிக்கன் வெஸ்புக்கி நினைவாக அந்த நிலப்பரப்புக்கு அமெரிக்கா என்று பெயர் சூட்டுகிறார்.

Pin It

1. சுழற்றும் இராட்டினங்களில் (Roller Coaster) சுற்றுபவர்களுக்கு, மூளையில் குருதி உறையும் வாய்ப்பு உண்டு.

2. நீலநிற விழிகள் கொண்டவர்களால், இரவில் நன்றாகப் பார்க்க முடியும்.

3. பணம், காகிதத்தில் அச்சிடப்படுவது இல்லை; பருத்தி இழைகளால் அச்சிடப்படுகிறது.

4. ஒரு சொட்டு மதுவை தேளின் முதுகில் ஊற்றினால், அது விரைவில் இறந்து விடும்.

5. நைல் நதியின் ஓடுகின்ற வழியில், நிலத்துக்கு உள்ளே, அதைவிட ஆறு மடங்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

6. உலகில் 29 விழுக்காடு பெட்ரோல்; 33 விழுக்காடு மின்சாரத்தை அமெரிக்கர்களே பயன்படுத்துகின்றார்கள்.

7. காதுகளில் ஒலிபெருக்கிகளை மாட்டிக்கொண்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் திரிபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக அணிந்து இருந்தால், உங்கள் காதுகளுக்குள் வழக்கத்தை விட 700 விழுக்காடு கூடுதலாக நோய்க்கிருமிகள் உட்புகுந்து விடும்.

8. உலக மாந்தர்களின் இறப்புக்குக் காரணமாக இருக்கின்ற விலங்குகளில் முதல் இடம் வகிப்பது கொசு.

9. இடது கை பழக்கம் உள்ளவர்களை விட, வலது கை பழக்கம் உள்ளவர்கள், சராசரியாக 9 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றார்கள்.

10. வீடுகளில் காற்று பதனப் பெட்டிகளைப் போல (AC) நமது உடலில் மூக்கு செயல்படுகிறது; சூடான காற்றையும், குளிர்ந்த காற்றையும் சமனப்படுத்தி ஒரே அளவு வெப்பத்தில் நமது நுரையீலுக்கு உள்ளே செலுத்துகிறது: காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி அனுப்புகின்றது.

11. இறக்கும் தறுவாயில், நம் உடலில் முதலில் செயல் இழக்கும் உறுப்பு - காது.

12. அமெரிக்காவின் வடமேற்குக் கரையில் உள்ள ஒரேகான் மாநிலத்தில், 2400 ஆண்டுகள் வயது உள்ள காளான் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது; 3.4 சதுர மைல்கள் பரப்பில் விரிந்து உள்ளது.

- அருணகிரி

Pin It

அல்ஜீப்ரா என்ற சொல் "அல் - ஜபர்" (al-jabr) என்ற  அராபிய மொழி மருத்துவ குறிச்சொல்லில் இருந்து வந்தது. "அல் - ஜபர் " என்ற சொல்லுக்கு உடைந்த பாகங்களை மீண்டும் சேர்த்தல் என்பது பொருள் ஆகும்.

Pin It

என்ன இந்தியாவுக்கு நரம்பு மண்டலமா?

மனித உடலுக்கு உள்ளே இருக்கின்ற, நரம்புகளின் வழியாக, குருதி பாய்ந்துகொண்டே இருக்கின்றது. அதுதான், நம் உயிரின் ஆதாரமாக விளங்குகின்றது; நம்மை இயக்குகின்றது. அந்தக் குருதி ஓட்டம் நின்று போகுமானால், உயிர் பறந்து விடும். அதுபோல, இந்திய நாட்டை ஒரு உடலாக உருவகப்படுத்திப் பார்த்தால், அதன் நரம்பு மண்டலமாகத் திகழ்வது, தண்டவாளங்கள்தாம். இன்றைக்கு, இந்தியாவில் தொடர்வண்டிகள், இரண்டு நாள்கள் இயங்காமல் நின்றுபோனால், ஒட்டுமொத்த இந்தியாவின் இயக்கமும் நின்றுபோய்விடும். அந்த அளவுக்கு, இந்தியாவின் உயிர்க்கோடாகத் திகழ்வது, இந்திய ரயில்வே எனப்படும் இந்தியத் தொடர்வண்டித்துறை ஆகும்.

இந்தியா முழுமைக்கும் இப்போது, 1,15,000 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இருப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரியதும், சிறியதுமாக, 7500 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில், குறுக்கும் நெடுக்குமாக ஒரு நாளைக்கு, இரண்டு கோடி மக்கள் தொடர்வண்டிகளில் பயணிக்கின்றார்கள். 2.8 மில்லியன் டன் எடையுள்ள பொருள்களைச் சுமந்து செல்கிறது. ஆண்டு வருமானம் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடிகள். இந்தியாவிலேயே தொடர்வண்டித்துறைக்கு மட்டும்தான், தனி வரவு செலவுத் திட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று, இந்தியத் தொடர்வண்டித் துறையில், 14 இலட்சம் ஊழியர்கள் பணி ஆற்றுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரம் வண்டிகள் ஓடுகின்றன. 2012 மார்ச் வரையிலும், 22,224 கிலோமீட்டர் தொலைவு, மின்மயமாக ஆக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில், முதன்முதலாக இருப்புவழித் தடங்கள் எப்போது அமைக்கப்பட்டன என்று கேட்டால், பம்பாயில் இருந்து தானேவுக்கு என்று பள்ளிப்பாடத்தில் படித்ததைப் பட்டெனச் சொல்லி விடுவார்கள். ஆனால், இரண்டாவது தடம் எங்கே அமைக்கப்பட்டது தெரியுமா?

நமது சென்னையில்தான். ஆம்; சென்னை இராயபுரம் தொடர்வண்டி நிலையம்தான், தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதலாவது தொடர்வண்டி நிலையம் ஆகும். அங்கிருந்து, அரக்கோணம் வரையிலும் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டது.

1867 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அலஹாபாத்-ஜபல்பூர் வழித்தடத்தில் தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின.

இராபர்ட் மெய்ட்லேண்ட பிரரெடன் (Robert Maitland Brereton) என்ற பொறியாளர்தான்,சுமார் 6400 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு தொடர்வண்டித் தடங்களை அமைத்தார்.

1870 மார்ச் முதல் நாளில் இருந்து, மும்பை-கொல்கத்தாவுக்கு இடையே தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின. இந்த வழித்தடம் அமைக்கப்பட்ட செய்தியை அறிந்து, 80 நாள்களில் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்ட ஜூல்ஸ் வெர்ன் தாம் எழுதிய நூலில் (Around the world in 80 days), இந்தியாவைக் கடக்கையில் இந்த வழித்தடத்தில், தொடர்வண்டித் தடத்தில் பயணிப்பது என்று அவர் திட்டமிடுகிறார்.

தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவில் கவனமாக இருக்க வேண்டும். அதிகாலை 2 மணி என்பது தெரியாமல் அடுத்த நாள் போய் நிற்பவர்கள் உண்டு. ஒருமுறை திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு வந்த வட இந்திய பயணக்குழுவினர் அப்படி ஒரு நாள் தாமதமாக வந்து, சென்னை தொடர்வண்டி நிலையத்தில் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருந்தது.

1880 ஆம் ஆண்டு, 14,500 கிலோமீட்டர் தொலைவு;

மார்ச் 2012 நிலவரப்படி, 2,29,381 சரக்குப் பெட்டிகள்; 59,713 பயணிகள் பெட்டிகள்; 9,213 என்ஜின்கள், இந்தியத் தொடர்வண்டித் துறையிடம் உள்ளன. தொடக்கத்தில், இருப்புவழி தண்டவாளங்கள், பெட்டிகள், என்ஜின் எல்லாமே, இங்கிலாந்து நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. 1895 ஆம் ஆண்டு முதல் என்ஜின்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்கள், இந்தியத் தொடர்வண்டித்துறையில் முதலீடு செய்தன. தொடக்கத்தில், Great Indian Peninsular Railway என ஒரு நிறுவனம் ஆனது. 1900 ஆம் ஆண்டு முதல், அந்த நிறுவனத்தை அரசே கையப்படுத்திக் கொண்டது.

1896 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் இருந்து பொறியாளர்களும், என்ஜின்களும், உகாண்டா நாட்டில் தொடர்வண்டித் தடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

1905 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறை வாரியம் தொடங்கப்பட்டது.

1920 ஆம் ஆண்டிலேயே, 61,220 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இந்தியாவில் தொடர்வண்டித் தடங்கள் அமைக்கப்பட்டு விட்டன.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் நிலவிய பெரும்பஞ்சம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் விளைவாக, இந்தியத் தொடர்வண்டித்துறையும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்தியாவில் இருந்து 40 விழுக்காடு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்வண்டித்துறைக்காக இயங்கிவந்த பல தொழிற்கூடங்களை ஆயுதங்கள் வடிக்கின்ற கூடங்களாக அரசு மாற்றியது.

1946 ஆம் ஆண்டு, இந்தியத் தொடர்வண்டித் துறையை, முழுமையாக இந்திய அரசு கையப்படுத்திக் கொண்டது.

தற்போது, 68 கோட்டங்கள் (divisions) 17 zones உள்ளன. ஐசிஎஃப், சென்னை, கபூர்தலா, ரே பரேலி (சோனியா காந்தி தொகுதி) ஆகிய இடங்களில், பெட்டிகள் கட்டப்படுகின்றன. பொன்மலையில், பெங்களூரில், சப்ரா (லல்லு பிரசாத் தொகுதி) ஹாஜிபூர் (ராம்விலாஸ் பஸ்வான் தொகுதி) ஆகிய இடங்களில் தொடர்வண்டிகளுக்கான சக்கரங்கள் வடிக்கப்படுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன், நேரு அமைச்சரவையில் தொடர்வண்டித்துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது தமிழகதில் அரியலூரில் தொடர்வண்டி பாலம் உடைந்து, ஆற்றில் விழுந்த விபத்தில், 26 பேர் இறந்தனர். அதற்குப் பொறுப்பு ஏற்று, அப்போதைய தொடர்வண்டித் துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.

டெல்லியில் உள்ள தொடர்வண்டி அருங்காட்சியகத்தில் ரயில் மியூசியம்

1951 ஆம் ஆண்டில், 2,05,596 சரக்குப் பெட்டிகள்; 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 4,05,000 சரக்குப் பெட்டிகள் இருந்தன.

வழிகள்:

அகன்ற வழி (broadcage) இரு தண்டவாளங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளி 5 அடி 6 அங்குலம். (1676 மில்லிமீட்டர்கள்);
மீட்டர் (பொதுமை) வழி - 1000 மிமீ
குறுகிய வழி -762 மிமீ

இப்போது இந்தியாவில் உள்ள தண்டவாளங்களில் 75 முதல் ஆகக் கூடுதலாக 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் தொடர்வண்டிகளை இயக்க முடியும்.

இந்தியாவில் முதன்முதலாக, 1984 அக்டோபர் 24 ஆம் நாள் முதல், கொல்கத்தாவில்தான் தரைக்கு அடியில் எஸ்பிளனேடு முதல் பொவானிபூர் வரையிலும், தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின. ஒருவழித்தடம்தான். விரிவாக்கப் பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்தன. படிப்படியாக, இருவழித்தடமாகி, 2010 முதல், வடக்கே டம்டம் நிலையத்தில் இருந்து தொடங்கி, தெற்கில் உள்ள கவி சுபாஷ் (நியூ கேரியா) நிலையத்துக்கு இடையில், 25 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தாவில், ஐந்து வழித்தடங்களில், தரைக்கு அடியில் தொடர்வண்டித் தடங்கள் அமைப்பதற்காக, எழுபதுகளிலேயே திட்டம் வகுக்கப்பட்டது. முப்பது ஆண்டுகள் ஆகியும், ஒருவழித்தடத்தில் மட்டுமே பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இப்போது, மேலும் மூன்று வழித்தடங்களில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியத் தலைநகர் தில்லிக்கு அருகில் உள்ள, ஹரியானா மாநிலத்தின் குர்காவ்ன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையில், தில்லி மெட்ரோ தொடர்வண்டித் தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தத் தொலைவு 183.69 கிலோமீட்டர்கள். 142 நிலையங்கள். தரைக்கு அடியில் 35; தரையில் 5; மற்றவை, மேம்பாலங்களின் மீது அமைந்து உள்ளன. நாள்தோறும், காலை 6.00 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், சுமார் 2700 முறை, சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கருநீலம் என ஐந்து வழித்தடங்களிலும், விமான நிலையத்தை இணைக்கின்ற தனி வழி ஒன்று என ஆறு வழித்தடங்களில், வண்டிகள் ஓடுகின்றன.

மும்பை, பெங்களூருவில் தரையடி வண்டிகள் கிடையாது. முழுமையும் பாலங்களின் மீதே ஓடுகின்றன. மும்பை மெட்ரோ பணிகள் 2008 ஆம் ஆண்டில்தான் தொடங்கி உள்ளன. 2021 ஆம் ஆண்டில்தான் பணிகள் முழுமையும் நிறைவுபெறுகின்றன. சென்னையில் 45 கிலோமீட்டர் தொலைவுக்கும், பெங்களூருவில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவுக்கும் தரையடித் தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It