5.01.2010

      தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத் தொடக்க நிகழ்வு மொழிப்போர் ஈகியர் நாளன்று கோடியக்கரைக் கடற்கரையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜி.பி. இராமமூர்த்தி தலைமை வகித்தார். ம.தி.மு.க வழக்குரைஞர் காசிநாதபாரதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் தியாகு நெடுநடைப் பயணக் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர் திரு சீதாராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உப்பு நீரில் கால் நனைத்துப் பயணம் தொடங்கினோம்.

கோடியக்கரையிலிருந்து வேதாரண்யம் வழியாக நெடுநடைப் பயணம் இரவு 8 மணியளவில் ஆயக்காரன்புலம் வந்தடைந்தது. ஆயக்காரன்புலத்தில் நெடுநடைப் பயணத்தின் குறிக்கோள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க தோழர் எல். இளங்கோவன் தலைமை வகித்தார். உலகத் தமிழர் பேரமைப்பைச் சார்ந்த பரந்தாமன் தமிழ்த் தேச வெளியீடான “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். பயணக்குழுத் தோழரும் பெண்ணாடம் மனிதநேயப் பேரவை அமைப்பாளருமான பஞ்சநாதன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். இறுதியாக தோழர் தியாகு நெடுநடைப் பயணத்தின் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார்.

26.01.2010 

 காலை 9.30 மணியளவில் ஆயக்காரன் புலத்திலிருந்து பயணம் தொடர்ந்தது. பஞ்சநதிக்குளம் கிழக்கு, மருதூர், பஞ்சநதிக்குளம் மேற்கு, தகட்டூர் வழியாக வாய்மேடு வந்தடைந்தோம்.

 பஞ்சநதிக்குளம் மேற்கில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தோழர் ஆசிரியர் பார்த்தசாரதி பயணக் குழுவை வரவேற்று உணவளித்தார். இரவு வாய்மேட்டில் பேராசிரியர் இலக்குவனாரின் உறவினரான பெரியவர் வெற்றிஅழகன் வீட்டில் தங்கினோம்.
 மருதூரில் தோழர் அதியமான், இராமசாமி, ததேவிஇ தோழர் கதிர்நிலவன் ஆகியோர் உரையாற்றினர். பஞ்சநதிக்குளம் மேற்கில் தோழர் தியாகு உரையாற்றினார். அந்நாளில் இறுதியாக வாய்மேட்டில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் தோழர்கள் அதியமான், பாரதி உரையாற்றி பின் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

27.01.2010

 பெரியவர் வெற்றிஅழகன் பயணக் குழுவினர்க்கு காலை உணவாக மூலிகைக் கஞ்சி, பழங்கள் கொடுத்தார். 7.30 மணியளவில் பயணம் வாய்மேட்டிலிருந்து தொடர்ந்தது. பயண வழியில் முள்ளியாறு பாலத்தில் 9.30 மணியளவில் பயணக் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. லிங்கத்துடிக்குளம், தரணிக்கோட்டகம், மணக்காடு, கரியாப்பட்டினம், உம்பளச்சேரி, புல்வெளி, செம்மியமணக்குடி, பிராந்தியக் கரை, வாட்டாக்குடி ஆகிய  சிற்றூர்களைக் கடந்து ஓரடியம்பலம் வந்தடைந்தோம்.
 கரியாப்பட்டிணத்தில் ம.தி.மு.க தோழர்கள் உணவு தந்தனர். உம்பளச்சேரி யில் நாகை மாவட்ட மதிமுக பொதுக்குழு உறுப்பினர் வ. இராதாகிருஷ்ணன் வரவேற்று தேநீர் அளித்தார். இரவு 8.45 மணியளவில் ஓரடியம்பலத்தில் அன்றைய பயணம் நிறைவடைந்தது. அவ்வூர் பள்ளி ஒன்றில் தங்கினோம். 
 கரியாப்பட்டிணத்தில் தோழர் பாரதி உரையாற்றினார்.

28.01.2010

 காலை 7.30 மணியளவில் ஓரடியம்பலத்திலிருந்து புறப்பட்டோம். தலைஞாயிறு செல்லும் வழியில் அமைந்திருந்த குளம் ஒன்றில் குளித்து, அதன் அருகிலேயே காலை உணவு உண்டோம். காடாந்தேத்தி, மணக்குடி, ஆலங்குடி, தென்கரை, ஈசனூர், திருவாய்மூர், எட்டுக்குடி, வழியாக மாலை 6 மணியளவில் திருக்குவளை வந்தடைந்தோம்.

 எட்டுக்குடியில் மதிய உணவை ம.தி.மு.க. தோழர் துரை ஏற்பாடு செய்திருந்தார். இரவு திருக்குவளை முத்தமிழ் மன்றத்தைச் சார்ந்த தோழர்கள் உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைஞாயிறில் பயணக்குழுத் தோழரும் பெண்ணாடம் மனிதநேயப் பேரவையைச் சார்ந்தவருமான பஞ்சநாதன், தோழர் தியாகு உரையாற்றினர். எட்டுக்குடியில் தோழர் தியாகு உரையாற்றினார். எட்டுக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பி. கணேசன், சி.பி.ஐ கிளைச் செயலாளர் தோழர் எஸ். மாரிமுத்து ஆகியோர் தோழர் தியாகுவுக்குச் சந்தனமாலை அணிவித்துப் பயணத்தை வாழ்த்தினர். திருக்குவளையில் முத்தமிழ் மன்றத்தினர் வரவேற்பளித்து தெருமுனைக் கூட்டத்தை ஒழுங்கு செய்தனர். மன்றத் தோழர் வெற்றி போராளி பயணத்தை வாழ்த்தி உரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

29.01.2010

வீரத்தமிழன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவுநாள். தமிழ் மீட்பு தமிழர் மீட்புக் குறிக்கோள்களைச் சுமந்து வருகிற பயணத்தில் முத்துக்குமாரின் வீர நினைவை நெஞ்சில் ஏந்தி நடந்தோம். முத்துக்குமார் படம் ஒன்றை திறந்து வைத்து பயணத்தைத் தொடர எண்ணினோம். நமது விருப்பத்தைத் தமிழர் தன்மானப் பேரவைத் தோழர்களிடம் தெரிவித்தோம். பேரவைத் தோழர்கள் பிரகாசு, சரவணன் அதிகாலை 3 மணியளவில் முத்துக்குமாருக்கு வீர வணக்கத்தைக் குறிக்கும் வண்ணப்பதாகை யை நம்மிடம் சேர்த்து விட்டனர்.

காலை 8.30 மணியளவில் முத்துக்குமார் படத்தை நமது பயண மூடுந்தின் முன்பக்கம் பொருத்திய பின் பயணம் தொடர்ந்தது. வாழக்கரை, மேலவாழக்கரை, மீனம்ப நல்லூர், மேலபிடாகை, கருங்கண்ணி, திருப்பூண்டி, ரெட்டமகதடி வழியாகப் பயணம் வேளாங்கண்ணி வந்தடைந்தது.

 ம.தி.மு.க கீளையூர் ஒன்றியச் செயலாளர் தோழர் எஸ்.பி. முத்து மேலபிடாகையில் காலை உணவு தந்தார். திருப்பூண்டியில் மதிய உணவையும், வேளாங்கண்ணியில் இரவு உணவையும் ம.தி.மு.க தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.

 மேலபிடாகையில் ம.தி.மு.க பெரியத்தும்பூர் கிளைச் செயலாளர் கே.பி.டி. இரவீந்திரன் உள்ளிட்ட தோழர்கள் வரவேற்பளித்தனர். திருப்பூண்டியில் முத்துக்குமார் படம் முன் நின்று பயணக் குழு அவருக்கு வீரவணக்கம் செலுத்தியது. முத்துக்குமார் படத்தைப் பயணக்குழுத் தோழர்கள் அனைவரும் மார்பட்டியாக மாட்டிக் கொண்டோம். வேளாங்கண்ணியில் நாம் தமிழர் இயக்கம் முத்துக்குமார் நினைவு ஊர்வலம் ஏற்பாடு செய்திருந்தது. நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் பயணத்தை வரவேற்பதையும் அந்நிகழ்வோடு இணைத்துக் கொண்டனர். ஈழத் தமிழ்க் குடும்பம் ஒன்று பயணத்தைக் காத்திருந்து வரவேற்றது. அவர்கள் தியாகுவை கண்ணீர் மல்கக் கட்டியணைத்து வாழ்த்தினர். அந்தக் கண்ணீரில் நன்றியும் சோகமும் கலந்திருந்தன. ஊர்வல வழியயங்கும் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினோம். தமிழீழ ஆதரவு முழக்கங்களை எழுப்பியபடியே நடந்தோம். மதிமுக தோழர்களும் உடன் வந்தனர்.

 மக்கள் குழுமியிருந்த இரு இடங்களில் தோழர் தியாகு உரையாற்றினார். இறுதியாக வேளாங்கண்ணி மாதா கோவில் அருகில் தோழர் பாரதி உரையாற்றினார். தோழர் தியாகு முத்துக்குமார் நினைவைப் போற்றியும் தமிழீழம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
 “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் நூலை எமது தமிழ்த் தேசம் பயணத் தொடக்க நாளில் வெளியிட்டதை முன்பே குறித்தோம். அந்நூலைப் பயணம் கடக்கிற கிராமங்களில், சிற்றூர்களில் நூற்றுக்கணக் கான மக்கள் தேடிவந்து விலைக்கு வாங்குகின்றனர். முத்துக்குமார் தமிழகப் பட்டிதொட்டியயங்கும் விரிந்திருக்கிறார். அவர் பெயர் பார்த்துத் தேடி வருகிற மக்கள் நமக்கு நம்பிக்கையும் ஊக்கமும் தருகின்றனர். முத்துக்குமாரின் அரசியல் தெளிவும் வீரமும் விதைக்கிறோம்; தொடர்ந்து விதைப்போம்!      முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

30.01.10

வேளாங்கண்ணியிலிருந்து காலை 9.30 மணியளவில் புறப்பட்டோம். தெற்குப் பொய்கை நல்லூர், வடக்குப் பொய்கை நல்லூர், அக்கரைப்பேட்டை, தோணிக்கரை வழியாக நாகப்பட்டினம் வந்தடைந்தோம். மாலை 6 மணியளவில் அவுரித் திடல் மறைமலையடிகள் அரங்கத்தில் மதிமுகவின் முன்முயற்சியில், தமிழ் அமைப்புகள் சார்பில் நெடுநடைப் பயணத்தை வாழ்த்திப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடைப்பயணத் தோழர் களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. பயணக் குழுவின் சார்பில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி சுதாகாந்தி உரையாற்றினார். அவர் தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்:

 “இந்தத் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் வாயிலாக தமிழ் மீட்பு நிதியத்திற்கு ஒரு கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்று எங்கள் பொதுச் செயலாளர் கூறினார். எப்படி ஒரு கோடி திரட்ட முடியும் என்று நாங்கள் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் ஆறு கோடித் தமிழர்கள் இருக்கும் போது ஏன் முடியாது என்று திருப்பிக் கேட்டார்.

 வேளாங்கண்ணியிலிருந்து, எங்கள் பயணம் நாகை வந்து கொண்டிருந்த வழியில் நான் ஒரு மூதாட்டியைச் சந்தித்தேன். எதற்காக நடந்து செல்கிறீர்கள்? எனக் கேட்டார். நான் பயணத்தின் குறிக்கோள்களை விளக்கிச் சொன்னேன். தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்காகவும், தமிழ்த் தேசம் ஏட்டிற்காகவும் இயக்கப் பணிகளுக்காகவும் ஒரு கோடி ரூபாய் திரட்டும் நோக்கத்தை எடுத்துரைத்தேன். உடனே அந்த மூதாட்டி தன் சுருக்குப் பையை எடுத்து அதிலிருந்து சில்லரைக் காசுகளைச் சரிபாதியாய்ப் பிரித்தார். அவருக்கு ஆறு ரூபாய் எடுத்துக் கொண்டு என்னிடம் ஆறு ரூபாயை நன்கொடையளித்தார். என்னை மனமார வாழ்த்தியும் அனுப்பினார். தமிழ்த் தாயே என்னை வாழ்த்தி ஆறு கோடி ரூபாய் கொடுத்ததாக நான் எண்ணிக் கொண்டேன்.”
 பயணத்தின் தலைவரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு ஏற்புரையாற்றினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

31.01.2010

 நாகையிலிருந்து காலை 9 மணியளவில் நடக்கத் தொடங்கினோம். மஞ்சக் கொல்லை ஊராட்சி பொரவச்சேரி, சிக்கல், ஆவராணி, புதுச்சேரி, வடக்காலத்தூர், ராதாமங்கலம், தேவூர், மேலவெண்மணி, வழியாக கீழவெண்மணி சென்றடைந்தோம்.

 தமிழர் தன்மானப் பேரவையின் தலைவர் அ.கோ. கஸ்தூரி ரங்கன் (ஏ.ஜி.கே) அவர்களை அந்தனப்பேட்டை வீட்டில் சந்தித்தோம். பேரவைத் தோழர்கள் ரவி, காமராஜ், பிரகாசு, சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தோழர் ஏ.ஜி.கே. பயணக்குழுவை வாழ்த்தி வழியனுப்பினார்.

ஒன்றுபட்டத் தஞ்சை மாவட்டத்தில் கூலி உயர்வு கேட்டு அதைத் தர மறுத்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் சங்கம் கண்டு செங்கொடியேந்தி உறுதியோடு போராடினர். இதன் விளைவாக ஆதிக்க வர்க்கம் 44 உயிர்களை ஒரே குடிசையில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தியது. அந்த வெண்மணித் தியாகிகளின் நினைவிடத்தில் பயணக் குழுவினர் வீர வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் வெண்மணியின் மூத்த தோழர் இராமையனும் கலந்து கொண்டார். அந்தப் புனித மண்ணிலிருந்து இப்பயணத்திற்குக் கொடையாக ஒரு பிடி நெல் கேட்டோம். வசந்தா எனும் அம்மையார் ஒரு பிடி நெல் எடுத்து வந்தார். தோழர் தியாகு அதைத் துண்டேந்தி பெற்றுக் கொண்டார். நினைவிடம் முன்பு தோழர் தியாகு சொல்லச் சொல்ல பயணக்குழுவினர் உறுதிமொழி ஏற்றனர்.

 தேவூரில் தோழர் பாரதி உரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். கீழவெண்மணிலிருந்து மீண்டும் தேவூர் வழியாகக் கீழ்வேளூர் வந்தடைந்தோம். அங்கேயே இரவு தங்கினோம்.

01.02.2010

 கீழ்வேளூரிலிருந்து புறப்பட்டு ஓர்குடி, ஓக்குர், கடம்பன்குடி, பெருஞ்சாத்தாங்குடி, பொற்களாங்குடி, வெங்கிலாங்குடி, நெய்க்குப்பம், மருங்கூர், திருமருகல், ஆதினகுடி, திருப்புகலூர் வழியாக திருகண்ணபுரம் வந்து சேர்ந்தோம்.

 மதிமுக தோழர்கள் காலை உணவு தந்தனர். திருமருகலில் மதிமுக என்.எஸ். தியாகராசன், திருகண்ணபுரம் ஒன்றியச் செயலாளர் ராசா உள்ளிட்ட தோழர்கள் வரவேற்றனர். திருமருகல் அதிமுக ஒன்றியச் செயலாளர் இராதா உணவளித்தார்.
 மக்களிடமிருந்து நெல்மணிகளை நன்கொடையாக வாங்குவதை கீழவெண்மணியில் தொடங்கினோம். அதன்படி ஓர்குடியில் இரண்டு தாய்மார்கள் ஐந்துபடி நெல்லை நம் தோழர்களிடம் தந்து வாழ்த்தினர். திருமருகல் கடைவீதியில் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். திருப்புகலூரில் தோழர் பாரதி உரையாற்றினார். திருகண்ணபுரத்தில் இரவு தங்கினோம்.

2.2.2010

 நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த ஊரான திருகண்ணபுரத்திலிருந்து காலை 9 மணியளவில் பயணம் புறப்பட்டது. பாக்கம் காரட்டூர், வடகரை, ஆண்டிப்பந்தல், பணங்குடி, மூலமங்கலம், மாப்பிள்ளைக் குப்பம் வழியாக நன்னிலம் வந்து தங்கினோம்.
 பாக்கம், கொரட்டூர், நன்னிலம் ஆகிய ஊர்களில் தோழர் பாரதி உரையாற்றினார்.

3.2.2010

 காலை 11 மணியளவில் நன்னிலத் திலிருந்து நடக்கத் தொடங்கினோம். தூத்துக்குடி, சன்னிநல்லூர், முடி கொண்டான், தென்குடி, செருவரூர், ஒன்பதுபுலி, பூந்தோட்டம், இஞ்சிக்குடி, பேரளம் வழியாக நடந்து கொல்லுமாங்குடி யில் இரவு தங்கினோம். 

 மதிமுக குடவாசல் ஒன்றியச் செயலாளர் கா.சி. சிவாவடிவேல் உள்ளிட்ட தோழர்கள் வரவேற்று உணவளித்தனர். 

 தமிழர் கழகம் அமிர்தலிங்கம், எம்.ஜி.ஆர் மன்றம் மனோகர் இருவரும் பயணக்குழுத் தலைவர் தியாகுவை சந்தித்து வாழ்த்துக் கூறினர். பேரளத்திலும், கொல்லுமாங்குடி யிலும் தோழர் பஞ்சநாதன் உரையாற்றினார்.

4.2.2010

 மாங்குடி, பில்லூர், பெரும்பூர், குத்தலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டக் கழனிவாசல் வழியாக நடந்து மங்கைநல்லூரில் தங்கினோம்.

 ம.தி.மு.க. தோழர்கள் காலை உணவு தந்தனர். மங்கைநல்லூர் எஸ்.பவுல்ராஜ் இரவு உணவளித்துத் தோழர்களைத் தனது வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார்.

கடந்து வந்த சிற்றூர்கள் எங்கிலும் தாய்மார்கள் மட்டுமே வீடுகளில் இருந்தனர். பயணத்திற்கு நன்கொடை யாகக் காசு தரமுடியாத நிலையை கவலையோடு தெரிவித்தனர். நெல்மணியை நீங்கள் தரலாம் என்றதும் ஒருவர் விடாமல் நமக்கு அள்ளிக் கொடுத்தனர். பயணக்குழு இரவு தங்கியிருந்த பவுல்ராஜ் வீட்டிற்குப் பேராசிரியர் த. செயராமன், கோபால் இருவரும் வந்து எங்களைச் சந்தித்துச் சென்றனர்.

மங்கைநல்லூரில் தோழர் பாரதி உரையாற்றினார்.

05.02.2010

பெருஞ்சேரி, நெய்க்குப்பை, பண்டார வடை, எலந்தங்குடி, பேச்சாவடி, பட்டமங்கலம் வழியாக மயிலாடுதுறை வந்து தங்கினோம்.
மயிலாடுதுறை திருவழந்தூர் மதிமுக தோழர் மார்க்கெட் கணேசன் வரவேற்று மதிய உணவளித்தார். கூறைநாடு மதிமுக தோழர் தங்க. பன்னீர்செல்வம் வீட்டில் இரவு உணவு தந்தார்.

மயிலாடுதுறையில் நுழைந்தபோது மதிமுக தோழர்கள் திரண்டிருந்து வரவேற்பளித்தனர். அங்கே தந்தைபெரியார் சிலைக்கு தோழர் தியாகு பயணக் குழு சார்பில் மாலை அணிவித்தார். மாலை 6 மணியளவில் சின்னக்கடை வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதிமுக முன்முயற்சியில் தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.

நெடுநடைப் பயணத்தை வரவேற்று நடந்த கூட்டத்திற்கு செந்தமிழ்ச் சங்கத் துணைத் தலைவரும் மதிமுக நகரச் செயலாளருமான தங்க. பன்னீர்செல்வம் தலைமையேற்றார். மதிமுக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மா. மகாலிங்கம், தமிழர் தேசிய இயக்கம் நாக. இரகுபதி, தமிழர் உரிமை மீட்பு இயக்க அமைப்பாளர் பேரா இரா. முரளிதரன், செந்தமிழ்ச் சங்கச் செயலாளர், தங்க. துரைராசு ஆகியோர் உரையாற்றினர்.

 பேராசிரியர் த. செயராமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் பயணத்தை வாழ்த்தி, குறிக்கோள்களை விளக்கி சிறப்புரையாற்றினர். தோழர் தியாகு ஏற்புரையாற்றினார். அப்பகுதியைச் சுற்றியுள்ள தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசியர்கள், பெரியார் தொண்டர்கள் பலரும் கூட்டத்தில் திரண்டிருந்தனர். பொதுமக்கள் குழுமியிருந்து கூட்டத்தை இறுதிவரை செவிமடுத்தனர்.

06.02.2010

மயிலாடுதுறை கூறைநாட்டிலிருந்து தரங்கை சாலை வழியாக மூங்கில் தோட்டம், தம்பிக்கு நல்லான்பட்டினம், மன்னம்பந்தல், விளநகர், ஆறுபாதி, சத்தியவாணன் வாய்க்கால், பரசலூர், செம்பனார்கோவில், முடிதிருத்தம்பள்ளி, முடிகண்டநல்லூர், ஞானசம்பந்தர் தாயார் பிறந்த ஊரான பொன்செய், கிடாரங் கொண்டான், வளத்தான்பட்டினம் சங்கிருப்பு, கருவேந்திநாதபுரம், தலையுடை யவர் கோவில்பந்து, கருவிழந்தநாதபுரம், குரங்குபுத்தூர் பூக்கடை, மேலையூர், சாயாவனம், தருமருளம் ஆகிய ஊர்களைக் கடந்து பூம்புகாரில் வந்து தங்கினோம். 

 மன்னம்பந்தலில் கல்லூரி அருகில் மொழிப்போர் ஈகி சாரங்கபாணி நினைவுத் தூண்முன் பயணக்குழுத் தோழர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி:

 “இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டம் தமிழ்த் தேசிய எழுச்சியாக உருவானபோது தமிழ் காக்கும் போரில் தீக்குளித்து மாண்ட ஈகத்தமிழனே! சாரங்கபாணியே!

 தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணக் குழுவினராகிய நாங்கள் உன் பெயரால் உறுதி ஏற்கிறோம். தமிழினத்தின் மீதான அயல்மொழித் திணிப்பையும் அயல்இன ஆதிக்கத்தையும் முறியடித்து இந்தி எதிர்ப்புப் போரைத் தமிழ்த் தேசிய விடுதலையின் திசையில் முன்னெடுத்துச் செல்ல உறுதி ஏற்கிறோம்.”

 மேலையூர், தருமருளத்தில் தோழர் தியாகு உரையாற்றினார்.

07.02.2010

 பூம்புகாரில் காலை கடற்கரை, சிலப்பதிகாரக் கலைக் கூடத்தைப் பயணக்குழு கண்டு களித்தது. தருமருளம், பல்லவனம் வழியாக மணிக்காடு, திருவெண்காடு, கீழ்சட்டநாதபுரம், மங்கைமடம், சித்தன்காத்திருப்பு (கீழ்க்கட்டளைநாதபுரம் ஊராட்சி), முக்காவட்டம் பெரியநாயகிகுளம், நாராயணபுரம், திருவாலி, ஆர்வாழம்புத்தூர், திருவாலை, புதுத்துறை மண்டபம், காரைமேடு பஞ்சாயத்து மணல்மேடு, தென்கலாறு, சூரக்காடு சட்டநாதபுரம் வழியாக சீர்காழி வந்து சேர்ந்தோம்.

 மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான க. சுப்ரவேலு தன் வீட்டில் பயணக்குழுவைத் தங்கவைத்துக் கொண்டார்.

 ஈழத் தமிழர் காக்க தன்னையே எரித்துக் கொண்ட சீர்காழி ரவிச்சந்திரன் நினைவு நாளில்தான் பயணம் சீர்காழிக்கு வந்தது. மதிமுக மாவட்ட விவசாய அணிச் செயலாளர் வெங்கடேசன், மதிமுக முன்னாள் நகரச் செயலாளர் கோ. சூரியமூர்த்தி, பெரியார் திராவிடர் கழக நாகை மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க மாவட்டச் செயலாளர் இரா. தனவேந்திரன் உள்ளிட்டத் தமிழின உணர்வாளர்கள் சீர்காழி பேருந்து நிலையத்தில் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். முத்துக்குமார், சீர்காழி ரவிச்சந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.

 புதிய பேருந்து நிலையத்திலும் பழைய பேருந்து நிலையத்திலும் தோழர் தியாகு உரையாற்றினார்.

08.02.2010

 தென்பாதி, சட்டநாதபுரம் வழியாக அட்டக்குளம், வைத்தீஸ்வரன் கோவில், கற்கோவில், திருப்பங்கூர், சேத்தூர் ஊராட்சி மாணாத் திருவாசல், மண்ணிப் பள்ளம், தலைஞாயிறு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, புத்தகரம் வாதம்பட்டு ஊராட்சி வைத்தியம்பேட்டை, திருவானப்புத்தூர் அழகன் தோப்பு வழியாக மணல்மேடு வந்து தங்கினோம். 

 காலை உணவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து தந்தனர். மதிமுக தோழர்கள் மதியமும் இரவும் உணவளித்துத் தங்க வைத்தனர்.

09.02.2010

 விருதாங்கநல்லூர், எம்.ராதாநல்லூர், இந்திரா நகர், கேசிங்கன் ஊராட்சி, ஆத்தூர், கல்யாண சோழபுரம், நமச்சிவாயபுரம், காளி, மயிலாடுதுறை ஒன்றியம் திருமங்கலம், செண்பகச்சேரி, அஞ்சார் வார்த்தலை வழியாகக் குத்தாலம் வந்தோம்.

 மயிலாடுதுறை மதிமுக ஒன்றியச் செயலாளர் கே. ஐயப்பன் காலை உணவளித்தார். இந்திரா நகரில் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தோழர் ப. பாலு வரவேற்று இளநீர் விருந்தளித்தார். இரவு மதிமுக நகர இளைஞரணி அமைப்பாளர் அ. கருணாநிதி வரவேற்று உணவளித்தார்.

 மாலை 6 மணியளவில் குத்தாலத்தில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழர் நீதிக் கட்சித் தோழர் தமிழ்நம்பி வரவேற்புரையாற்றினார். தமிழர் நீதிக் கட்சித் தோழர் தமிழரசன், மதிமுக நகர மாணவரணி தோழர்கள் முஜிபூர் ரகுமான், டி.கே.எஸ். ஆகியோர் உரையாற்றினர். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். திரளான மக்கள் பங்கேற்றனர்.

10.02.2010

 சேத்திலாபுரம், தொழுதாலங்குடி, தேரழந்தூர் (கம்பர் பிறந்த ஊர்), பெருமாள் கோவில் ஊராட்சி மருத்தூர், கோமல், கொத்தங்குடி, நக்கம்பாடி ஊராட்சி, ஸ்ரீ கண்டபுரம், பாலை ஊராட்சி, பருத்திக்குடி, பொய்யாநத்தம், சிவனாநகரம் ஊராட்சி கோனேரிராஜபுரம் நடந்து வடமட்டம் வந்தோம்.

தேரழந்தூரிலும் ஸ்ரீகண்டபுரத்திலும் தோழர் பாரதி உரையாற்றினார். வடமட்டத்தில் தோழர் தியாகு உரையாற்றினார்.

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் தொடர்கிறது. சனவரி 25 முதல் 10ஆம் நாள் வரை 439 கிலோ மீட்டர்களைப் பயணம் கடந்திருக்கிறது. மொத்தம் ஆயிரம் கிலோ மீடடர்கள் நடந்து வருகிற மார்ச் 12 குடந்தையில் நிறைவடைய இருக்கிறது. பயணத்தின் போது களத்துமேட்டிலும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும் மக்களைச் சந்தித்துத் தோழர்கள் பேசுகின்றனர். ஒவ்வொரு நாளும் வழியயங்கும் பயணக் குறிக்கோள்களைத் தாங்கிய துண்டறிக்கை களை ஆயிரக்கணக்கில் மக்களிடம் சேர்த்து நிதி திரட்டுகின்றனர். முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன், பிரபாகரனின் மாவீரர்நாள் உரைகள் சிற்றூர்களிலும் கூட நன்கு விற்பனையாகின்றன. 

 இயக்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளரும் அமைப்புக் குழு உறுப்பினருமான  தோழர் மோகன்ராசு பயணத்தை உடனிருந்து ஒருங்கிணைத்து வருகிறார். தோழர் நாத்திகன் கேசவன் பயணத்திற்கு தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவது,காவல்துறை அனுமதி பெறுவது போன்ற பணிகளையும் செய்கிறார். தோழர்கள்  ரவி, சுதாகாந்தி பயணம் குறித்து மக்களிடம் மாறி மாறி அறிவிப்புச் செய்தபடியே வருகின்றனர். புத்தகம் விற்கும் பணியை தோழர் பஞ்சநாதன் மேற்கொள்கிறார். தோழர் வேல்முருகன் பயணக் குறிப்புகள் எடுத்து வருகிறார். ஈரோடு தோழர் சிவா முன்கூட்டியே செல்லும் வழியயங்கும் சுவரொட்டிகள் ஒட்டுவதைக் கவனித்து வருகிறார்.  இது வரை...

5.01.2010

      தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத் தொடக்க நிகழ்வு மொழிப்போர் ஈகியர் நாளன்று கோடியக்கரைக் கடற்கரையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜி.பி. இராமமூர்த்தி தலைமை வகித்தார். ம.தி.மு.க வழக்குரைஞர் காசிநாதபாரதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் தியாகு நெடுநடைப் பயணக் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர் திரு சீதாராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உப்பு நீரில் கால் நனைத்துப் பயணம் தொடங்கினோம்.

 கோடியக்கரையிலிருந்து வேதாரண்யம் வழியாக நெடுநடைப் பயணம் இரவு 8 மணியளவில் ஆயக்காரன்புலம் வந்தடைந்தது. ஆயக்காரன்புலத்தில் நெடுநடைப் பயணத்தின் குறிக்கோள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க தோழர் எல். இளங்கோவன் தலைமை வகித்தார். உலகத் தமிழர் பேரமைப்பைச் சார்ந்த பரந்தாமன் தமிழ்த் தேச வெளியீடான “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். பயணக்குழுத் தோழரும் பெண்ணாடம் மனிதநேயப் பேரவை அமைப்பாளருமான பஞ்சநாதன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். இறுதியாக தோழர் தியாகு நெடுநடைப் பயணத்தின் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார்.

26.01.2010 

 காலை 9.30 மணியளவில் ஆயக்காரன் புலத்திலிருந்து பயணம் தொடர்ந்தது. பஞ்சநதிக்குளம் கிழக்கு, மருதூர், பஞ்சநதிக்குளம் மேற்கு, தகட்டூர் வழியாக வாய்மேடு வந்தடைந்தோம்.

 பஞ்சநதிக்குளம் மேற்கில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தோழர் ஆசிரியர் பார்த்தசாரதி பயணக் குழுவை வரவேற்று உணவளித்தார். இரவு வாய்மேட்டில் பேராசிரியர் இலக்குவனாரின் உறவினரான பெரியவர் வெற்றிஅழகன் வீட்டில் தங்கினோம்.
 மருதூரில் தோழர் அதியமான், இராமசாமி, ததேவிஇ தோழர் கதிர்நிலவன் ஆகியோர் உரையாற்றினர். பஞ்சநதிக்குளம் மேற்கில் தோழர் தியாகு உரையாற்றினார். அந்நாளில் இறுதியாக வாய்மேட்டில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் தோழர்கள் அதியமான், பாரதி உரையாற்றி பின் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

27.01.2010

 பெரியவர் வெற்றிஅழகன் பயணக் குழுவினர்க்கு காலை உணவாக மூலிகைக் கஞ்சி, பழங்கள் கொடுத்தார். 7.30 மணியளவில் பயணம் வாய்மேட்டிலிருந்து தொடர்ந்தது. பயண வழியில் முள்ளியாறு பாலத்தில் 9.30 மணியளவில் பயணக் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. லிங்கத்துடிக்குளம், தரணிக்கோட்டகம், மணக்காடு, கரியாப்பட்டினம், உம்பளச்சேரி, புல்வெளி, செம்மியமணக்குடி, பிராந்தியக் கரை, வாட்டாக்குடி ஆகிய  சிற்றூர்களைக் கடந்து ஓரடியம்பலம் வந்தடைந்தோம்.

 கரியாப்பட்டிணத்தில் ம.தி.மு.க தோழர்கள் உணவு தந்தனர். உம்பளச்சேரி யில் நாகை மாவட்ட மதிமுக பொதுக்குழு உறுப்பினர் வ. இராதாகிருஷ்ணன் வரவேற்று தேநீர் அளித்தார். இரவு 8.45 மணியளவில் ஓரடியம்பலத்தில் அன்றைய பயணம் நிறைவடைந்தது. அவ்வூர் பள்ளி ஒன்றில் தங்கினோம். 

 கரியாப்பட்டிணத்தில் தோழர் பாரதி உரையாற்றினார்.

28.01.2010

 காலை 7.30 மணியளவில் ஓரடியம்பலத்தி லிருந்து புறப்பட்டோம். தலைஞாயிறு செல்லும் வழியில் அமைந்திருந்த குளம் ஒன்றில் குளித்து, அதன் அருகிலேயே காலை உணவு உண்டோம். காடாந்தேத்தி, மணக்குடி, ஆலங்குடி, தென்கரை, ஈசனூர், திருவாய்மூர், எட்டுக்குடி, வழியாக மாலை 6 மணியளவில் திருக்குவளை வந்தடைந்தோம்.

 எட்டுக்குடியில் மதிய உணவை ம.தி.மு.க. தோழர் துரை ஏற்பாடு செய்திருந்தார். இரவு திருக்குவளை முத்தமிழ் மன்றத்தைச் சார்ந்த தோழர்கள் உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைஞாயிறில் பயணக்குழுத் தோழரும் பெண்ணாடம் மனிதநேயப் பேரவையைச் சார்ந்தவருமான பஞ்சநாதன், தோழர் தியாகு உரையாற்றினர். எட்டுக்குடியில் தோழர் தியாகு உரையாற்றினார். எட்டுக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பி. கணேசன், சி.பி.ஐ கிளைச் செயலாளர் தோழர் எஸ். மாரிமுத்து ஆகியோர் தோழர் தியாகுவுக்குச் சந்தனமாலை அணிவித்துப் பயணத்தை வாழ்த்தினர். திருக்குவளையில் முத்தமிழ் மன்றத்தினர் வரவேற்பளித்து தெருமுனைக் கூட்டத்தை ஒழுங்கு செய்தனர். மன்றத் தோழர் வெற்றி போராளி பயணத்தை வாழ்த்தி உரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

29.01.2010

 வீரத்தமிழன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவுநாள். தமிழ் மீட்பு தமிழர் மீட்புக் குறிக்கோள்களைச் சுமந்து வருகிற பயணத்தில் முத்துக்குமாரின் வீர நினைவை நெஞ்சில் ஏந்தி நடந்தோம். முத்துக்குமார் படம் ஒன்றை திறந்து வைத்து பயணத்தைத் தொடர எண்ணினோம். நமது விருப்பத்தைத் தமிழர் தன்மானப் பேரவைத் தோழர்களிடம் தெரிவித்தோம். பேரவைத் தோழர்கள் பிரகாசு, சரவணன் அதிகாலை 3 மணியளவில் முத்துக்குமாருக்கு வீர வணக்கத்தைக் குறிக்கும் வண்ணப்பதாகை யை நம்மிடம் சேர்த்து விட்டனர்.

 காலை 8.30 மணியளவில் முத்துக்குமார் படத்தை நமது பயண மூடுந்தின் முன்பக்கம் பொருத்திய பின் பயணம் தொடர்ந்தது. வாழக்கரை, மேலவாழக்கரை, மீனம்ப நல்லூர், மேலபிடாகை, கருங்கண்ணி, திருப்பூண்டி, ரெட்டமகதடி வழியாகப் பயணம் வேளாங்கண்ணி வந்தடைந்தது.

 ம.தி.மு.க கீளையூர் ஒன்றியச் செயலாளர் தோழர் எஸ்.பி. முத்து மேலபிடாகையில் காலை உணவு தந்தார். திருப்பூண்டியில் மதிய உணவையும், வேளாங்கண்ணியில் இரவு உணவையும் ம.தி.மு.க தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.

 மேலபிடாகையில் ம.தி.மு.க பெரியத்தும்பூர் கிளைச் செயலாளர் கே.பி.டி. இரவீந்திரன் உள்ளிட்ட தோழர்கள் வரவேற்பளித்தனர். திருப்பூண்டியில் முத்துக்குமார் படம் முன் நின்று பயணக் குழு அவருக்கு வீரவணக்கம் செலுத்தியது. முத்துக்குமார் படத்தைப் பயணக்குழுத் தோழர்கள் அனைவரும் மார்பட்டியாக மாட்டிக் கொண்டோம். வேளாங்கண்ணியில் நாம் தமிழர் இயக்கம் முத்துக்குமார் நினைவு ஊர்வலம் ஏற்பாடு செய்திருந்தது. நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் பயணத்தை வரவேற்பதையும் அந்நிகழ்வோடு இணைத்துக் கொண்டனர். ஈழத் தமிழ்க் குடும்பம் ஒன்று பயணத்தைக் காத்திருந்து வரவேற்றது. அவர்கள் தியாகுவை கண்ணீர் மல்கக் கட்டியணைத்து வாழ்த்தினர். அந்தக் கண்ணீரில் நன்றியும் சோகமும் கலந்திருந்தன. ஊர்வல வழியயங்கும் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினோம். தமிழீழ ஆதரவு முழக்கங்களை எழுப்பியபடியே நடந்தோம். மதிமுக தோழர்களும் உடன் வந்தனர்.

 மக்கள் குழுமியிருந்த இரு இடங்களில் தோழர் தியாகு உரையாற்றினார். இறுதியாக வேளாங்கண்ணி மாதா கோவில் அருகில் தோழர் பாரதி உரையாற்றினார். தோழர் தியாகு முத்துக்குமார் நினைவைப் போற்றியும் தமிழீழம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
 “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் நூலை எமது தமிழ்த் தேசம் பயணத் தொடக்க நாளில் வெளியிட்டதை முன்பே குறித்தோம். அந்நூலைப் பயணம் கடக்கிற கிராமங்களில், சிற்றூர்களில் நூற்றுக்கணக் கான மக்கள் தேடிவந்து விலைக்கு வாங்குகின்றனர். முத்துக்குமார் தமிழகப் பட்டிதொட்டியயங்கும் விரிந்திருக்கிறார். அவர் பெயர் பார்த்துத் தேடி வருகிற மக்கள் நமக்கு நம்பிக்கையும் ஊக்கமும் தருகின்றனர். முத்துக்குமாரின் அரசியல் தெளிவும் வீரமும் விதைக்கிறோம்; தொடர்ந்து விதைப்போம்!      முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

30.01.10

 வேளாங்கண்ணியிலிருந்து காலை 9.30 மணியளவில் புறப்பட்டோம். தெற்குப் பொய்கை நல்லூர், வடக்குப் பொய்கை நல்லூர், அக்கரைப்பேட்டை, தோணிக்கரை வழியாக நாகப்பட்டினம் வந்தடைந்தோம். மாலை 6 மணியளவில் அவுரித் திடல் மறைமலையடிகள் அரங்கத்தில் மதிமுகவின் முன்முயற்சியில், தமிழ் அமைப்புகள் சார்பில் நெடுநடைப் பயணத்தை வாழ்த்திப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடைப்பயணத் தோழர் களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. பயணக் குழுவின் சார்பில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி சுதாகாந்தி உரையாற்றினார். அவர் தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்:

 “இந்தத் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் வாயிலாக தமிழ் மீட்பு நிதியத்திற்கு ஒரு கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்று எங்கள் பொதுச் செயலாளர் கூறினார். எப்படி ஒரு கோடி திரட்ட முடியும் என்று நாங்கள் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் ஆறு கோடித் தமிழர்கள் இருக்கும் போது ஏன் முடியாது என்று திருப்பிக் கேட்டார்.

 வேளாங்கண்ணியிலிருந்து, எங்கள் பயணம் நாகை வந்து கொண்டிருந்த வழியில் நான் ஒரு மூதாட்டியைச் சந்தித்தேன். எதற்காக நடந்து செல்கிறீர்கள்? எனக் கேட்டார். நான் பயணத்தின் குறிக்கோள்களை விளக்கிச் சொன்னேன். தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்காகவும், தமிழ்த் தேசம் ஏட்டிற்காகவும் இயக்கப் பணிகளுக்காகவும் ஒரு கோடி ரூபாய் திரட்டும் நோக்கத்தை எடுத்துரைத்தேன். உடனே அந்த மூதாட்டி தன் சுருக்குப் பையை எடுத்து அதிலிருந்து சில்லரைக் காசுகளைச் சரிபாதியாய்ப் பிரித்தார். அவருக்கு ஆறு ரூபாய் எடுத்துக் கொண்டு என்னிடம் ஆறு ரூபாயை நன்கொடையளித்தார். என்னை மனமார வாழ்த்தியும் அனுப்பினார். தமிழ்த் தாயே என்னை வாழ்த்தி ஆறு கோடி ரூபாய் கொடுத்ததாக நான் எண்ணிக் கொண்டேன்.”
 பயணத்தின் தலைவரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு ஏற்புரையாற்றினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

31.01.2010

 நாகையிலிருந்து காலை 9 மணியளவில் நடக்கத் தொடங்கினோம். மஞ்சக் கொல்லை ஊராட்சி பொரவச்சேரி, சிக்கல், ஆவராணி, புதுச்சேரி, வடக்காலத்தூர், ராதாமங்கலம், தேவூர், மேலவெண்மணி, வழியாக கீழவெண்மணி சென்றடைந்தோம்.
 தமிழர் தன்மானப் பேரவையின் தலைவர் அ.கோ. கஸ்தூரி ரங்கன் (ஏ.ஜி.கே) அவர்களை அந்தனப்பேட்டை வீட்டில் சந்தித்தோம். பேரவைத் தோழர்கள் ரவி, காமராஜ், பிரகாசு, சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தோழர் ஏ.ஜி.கே. பயணக்குழுவை வாழ்த்தி வழியனுப்பினார்.

 ஒன்றுபட்டத் தஞ்சை மாவட்டத்தில் கூலி உயர்வு கேட்டு அதைத் தர மறுத்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் சங்கம் கண்டு செங்கொடியேந்தி உறுதியோடு போராடினர். இதன் விளைவாக ஆதிக்க வர்க்கம் 44 உயிர்களை ஒரே குடிசையில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தியது. அந்த வெண்மணித் தியாகிகளின் நினைவிடத்தில் பயணக் குழுவினர் வீர வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் வெண்மணியின் மூத்த தோழர் இராமையனும் கலந்து கொண்டார். அந்தப் புனித மண்ணிலிருந்து இப்பயணத்திற்குக் கொடையாக ஒரு பிடி நெல் கேட்டோம். வசந்தா எனும் அம்மையார் ஒரு பிடி நெல் எடுத்து வந்தார். தோழர் தியாகு அதைத் துண்டேந்தி பெற்றுக் கொண்டார். நினைவிடம் முன்பு தோழர் தியாகு சொல்லச் சொல்ல பயணக்குழுவினர் உறுதிமொழி ஏற்றனர்.

 தேவூரில் தோழர் பாரதி உரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். கீழவெண்மணிலிருந்து மீண்டும் தேவூர் வழியாகக் கீழ்வேளூர் வந்தடைந்தோம். அங்கேயே இரவு தங்கினோம்.

01.02.2010

 கீழ்வேளூரிலிருந்து புறப்பட்டு ஓர்குடி, ஓக்குர், கடம்பன்குடி, பெருஞ்சாத்தாங்குடி, பொற்களாங்குடி, வெங்கிலாங்குடி, நெய்க்குப்பம், மருங்கூர், திருமருகல், ஆதினகுடி, திருப்புகலூர் வழியாக திருகண்ணபுரம் வந்து சேர்ந்தோம்.

 மதிமுக தோழர்கள் காலை உணவு தந்தனர். திருமருகலில் மதிமுக என்.எஸ். தியாகராசன், திருகண்ணபுரம் ஒன்றியச் செயலாளர் ராசா உள்ளிட்ட தோழர்கள் வரவேற்றனர். திருமருகல் அதிமுக ஒன்றியச் செயலாளர் இராதா உணவளித்தார். 

 மக்களிடமிருந்து நெல்மணிகளை நன்கொடையாக வாங்குவதை கீழவெண்மணியில் தொடங்கினோம். அதன்படி ஓர்குடியில் இரண்டு தாய்மார்கள் ஐந்துபடி நெல்லை நம் தோழர்களிடம் தந்து வாழ்த்தினர். திருமருகல் கடைவீதியில் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். திருப்புகலூரில் தோழர் பாரதி உரையாற்றினார். திருகண்ணபுரத்தில் இரவு தங்கினோம்.

2.2.2010

 நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த ஊரான திருகண்ணபுரத்திலிருந்து காலை 9 மணியளவில் பயணம் புறப்பட்டது. பாக்கம் காரட்டூர், வடகரை, ஆண்டிப்பந்தல், பணங்குடி, மூலமங்கலம், மாப்பிள்ளைக் குப்பம் வழியாக நன்னிலம் வந்து தங்கினோம்.
 பாக்கம், கொரட்டூர், நன்னிலம் ஆகிய ஊர்களில் தோழர் பாரதி உரையாற்றினார்.

3.2.2010

 காலை 11 மணியளவில் நன்னிலத் திலிருந்து நடக்கத் தொடங்கினோம். தூத்துக்குடி, சன்னிநல்லூர், முடி கொண்டான், தென்குடி, செருவரூர், ஒன்பதுபுலி, பூந்தோட்டம், இஞ்சிக்குடி, பேரளம் வழியாக நடந்து கொல்லுமாங்குடி யில் இரவு தங்கினோம். 

 மதிமுக குடவாசல் ஒன்றியச் செயலாளர் கா.சி. சிவாவடிவேல் உள்ளிட்ட தோழர்கள் வரவேற்று உணவளித்தனர். 

 தமிழர் கழகம் அமிர்தலிங்கம், எம்.ஜி.ஆர் மன்றம் மனோகர் இருவரும் பயணக்குழுத் தலைவர் தியாகுவை சந்தித்து வாழ்த்துக் கூறினர். பேரளத்திலும், கொல்லுமாங்குடி யிலும் தோழர் பஞ்சநாதன் உரையாற்றினார்.

4.2.2010

 மாங்குடி, பில்லூர், பெரும்பூர், குத்தலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டக் கழனிவாசல் வழியாக நடந்து மங்கைநல்லூரில் தங்கினோம்.

 ம.தி.மு.க. தோழர்கள் காலை உணவு தந்தனர். மங்கைநல்லூர் எஸ்.பவுல்ராஜ் இரவு உணவளித்துத் தோழர்களைத் தனது வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார்.

 கடந்து வந்த சிற்றூர்கள் எங்கிலும் தாய்மார்கள் மட்டுமே வீடுகளில் இருந்தனர். பயணத்திற்கு நன்கொடை யாகக் காசு தரமுடியாத நிலையை கவலையோடு தெரிவித்தனர். நெல்மணியை நீங்கள் தரலாம் என்றதும் ஒருவர் விடாமல் நமக்கு அள்ளிக் கொடுத்தனர். பயணக்குழு இரவு தங்கியிருந்த பவுல்ராஜ் வீட்டிற்குப் பேராசிரியர் த. செயராமன், கோபால் இருவரும் வந்து எங்களைச் சந்தித்துச் சென்றனர்.

 மங்கைநல்லூரில் தோழர் பாரதி உரையாற்றினார்.

05.02.2010

 பெருஞ்சேரி, நெய்க்குப்பை, பண்டார வடை, எலந்தங்குடி, பேச்சாவடி, பட்டமங்கலம் வழியாக மயிலாடுதுறை வந்து தங்கினோம்.
 மயிலாடுதுறை திருவழந்தூர் மதிமுக தோழர் மார்க்கெட் கணேசன் வரவேற்று மதிய உணவளித்தார். கூறைநாடு மதிமுக தோழர் தங்க. பன்னீர்செல்வம் வீட்டில் இரவு உணவு தந்தார்.

 மயிலாடுதுறையில் நுழைந்தபோது மதிமுக தோழர்கள் திரண்டிருந்து வரவேற்பளித்தனர். அங்கே தந்தைபெரியார் சிலைக்கு தோழர் தியாகு பயணக் குழு சார்பில் மாலை அணிவித்தார். மாலை 6 மணியளவில் சின்னக்கடை வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதிமுக முன்முயற்சியில் தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.

 நெடுநடைப் பயணத்தை வரவேற்று நடந்த கூட்டத்திற்கு செந்தமிழ்ச் சங்கத் துணைத் தலைவரும் மதிமுக நகரச் செயலாளருமான தங்க. பன்னீர்செல்வம் தலைமையேற்றார். மதிமுக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மா. மகாலிங்கம், தமிழர் தேசிய இயக்கம் நாக. இரகுபதி, தமிழர் உரிமை மீட்பு இயக்க அமைப்பாளர் பேரா இரா. முரளிதரன், செந்தமிழ்ச் சங்கச் செயலாளர், தங்க. துரைராசு ஆகியோர் உரையாற்றினர்.

 பேராசிரியர் த. செயராமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் பயணத்தை வாழ்த்தி, குறிக்கோள்களை விளக்கி சிறப்புரையாற்றினர். தோழர் தியாகு ஏற்புரையாற்றினார். அப்பகுதியைச் சுற்றியுள்ள தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசியர்கள், பெரியார் தொண்டர்கள் பலரும் கூட்டத்தில் திரண்டிருந்தனர். பொதுமக்கள் குழுமியிருந்து கூட்டத்தை இறுதிவரை செவிமடுத்தனர்.

06.02.2010

 மயிலாடுதுறை கூறைநாட்டிலிருந்து தரங்கை சாலை வழியாக மூங்கில் தோட்டம், தம்பிக்கு நல்லான்பட்டினம், மன்னம்பந்தல், விளநகர், ஆறுபாதி, சத்தியவாணன் வாய்க்கால், பரசலூர், செம்பனார்கோவில், முடிதிருத்தம்பள்ளி, முடிகண்டநல்லூர், ஞானசம்பந்தர் தாயார் பிறந்த ஊரான பொன்செய், கிடாரங் கொண்டான், வளத்தான்பட்டினம் சங்கிருப்பு, கருவேந்திநாதபுரம், தலையுடை யவர் கோவில்பந்து, கருவிழந்தநாதபுரம், குரங்குபுத்தூர் பூக்கடை, மேலையூர், சாயாவனம், தருமருளம் ஆகிய ஊர்களைக் கடந்து பூம்புகாரில் வந்து தங்கினோம். 

 மன்னம்பந்தலில் கல்லூரி அருகில் மொழிப்போர் ஈகி சாரங்கபாணி நினைவுத் தூண்முன் பயணக்குழுத் தோழர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி:

 “இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டம் தமிழ்த் தேசிய எழுச்சியாக உருவானபோது தமிழ் காக்கும் போரில் தீக்குளித்து மாண்ட ஈகத்தமிழனே! சாரங்கபாணியே!

 தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணக் குழுவினராகிய நாங்கள் உன் பெயரால் உறுதி ஏற்கிறோம். தமிழினத்தின் மீதான அயல்மொழித் திணிப்பையும் அயல்இன ஆதிக்கத்தையும் முறியடித்து இந்தி எதிர்ப்புப் போரைத் தமிழ்த் தேசிய விடுதலையின் திசையில் முன்னெடுத்துச் செல்ல உறுதி ஏற்கிறோம்.”

 மேலையூர், தருமருளத்தில் தோழர் தியாகு உரையாற்றினார்.

07.02.2010

 பூம்புகாரில் காலை கடற்கரை, சிலப்பதிகாரக் கலைக் கூடத்தைப் பயணக்குழு கண்டு களித்தது. தருமருளம், பல்லவனம் வழியாக மணிக்காடு, திருவெண்காடு, கீழ்சட்டநாதபுரம், மங்கைமடம், சித்தன்காத்திருப்பு (கீழ்க்கட்டளைநாதபுரம் ஊராட்சி), முக்காவட்டம் பெரியநாயகிகுளம், நாராயணபுரம், திருவாலி, ஆர்வாழம்புத்தூர், திருவாலை, புதுத்துறை மண்டபம், காரைமேடு பஞ்சாயத்து மணல்மேடு, தென்கலாறு, சூரக்காடு சட்டநாதபுரம் வழியாக சீர்காழி வந்து சேர்ந்தோம்.

 மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான க. சுப்ரவேலு தன் வீட்டில் பயணக்குழுவைத் தங்கவைத்துக் கொண்டார்.

 ஈழத் தமிழர் காக்க தன்னையே எரித்துக் கொண்ட சீர்காழி ரவிச்சந்திரன் நினைவு நாளில்தான் பயணம் சீர்காழிக்கு வந்தது. மதிமுக மாவட்ட விவசாய அணிச் செயலாளர் வெங்கடேசன், மதிமுக முன்னாள் நகரச் செயலாளர் கோ. சூரியமூர்த்தி, பெரியார் திராவிடர் கழக நாகை மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க மாவட்டச் செயலாளர் இரா. தனவேந்திரன் உள்ளிட்டத் தமிழின உணர்வாளர்கள் சீர்காழி பேருந்து நிலையத்தில் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். முத்துக்குமார், சீர்காழி ரவிச்சந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.

 புதிய பேருந்து நிலையத்திலும் பழைய பேருந்து நிலையத்திலும் தோழர் தியாகு உரையாற்றினார்.

08.02.2010

 தென்பாதி, சட்டநாதபுரம் வழியாக அட்டக்குளம், வைத்தீஸ்வரன் கோவில், கற்கோவில், திருப்பங்கூர், சேத்தூர் ஊராட்சி மாணாத் திருவாசல், மண்ணிப் பள்ளம், தலைஞாயிறு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, புத்தகரம் வாதம்பட்டு ஊராட்சி வைத்தியம்பேட்டை, திருவானப்புத்தூர் அழகன் தோப்பு வழியாக மணல்மேடு வந்து தங்கினோம். 

 காலை உணவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து தந்தனர். மதிமுக தோழர்கள் மதியமும் இரவும் உணவளித்துத் தங்க வைத்தனர்.

09.02.2010

 விருதாங்கநல்லூர், எம்.ராதாநல்லூர், இந்திரா நகர், கேசிங்கன் ஊராட்சி, ஆத்தூர், கல்யாண சோழபுரம், நமச்சிவாயபுரம், காளி, மயிலாடுதுறை ஒன்றியம் திருமங்கலம், செண்பகச்சேரி, அஞ்சார் வார்த்தலை வழியாகக் குத்தாலம் வந்தோம்.

 மயிலாடுதுறை மதிமுக ஒன்றியச் செயலாளர் கே. ஐயப்பன் காலை உணவளித்தார். இந்திரா நகரில் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தோழர் ப. பாலு வரவேற்று இளநீர் விருந்தளித்தார். இரவு மதிமுக நகர இளைஞரணி அமைப்பாளர் அ. கருணாநிதி வரவேற்று உணவளித்தார்.

 மாலை 6 மணியளவில் குத்தாலத்தில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழர் நீதிக் கட்சித் தோழர் தமிழ்நம்பி வரவேற்புரையாற்றினார். தமிழர் நீதிக் கட்சித் தோழர் தமிழரசன், மதிமுக நகர மாணவரணி தோழர்கள் முஜிபூர் ரகுமான், டி.கே.எஸ். ஆகியோர் உரையாற்றினர். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். திரளான மக்கள் பங்கேற்றனர்.

10.02.2010

 சேத்திலாபுரம், தொழுதாலங்குடி, தேரழந்தூர் (கம்பர் பிறந்த ஊர்), பெருமாள் கோவில் ஊராட்சி மருத்தூர், கோமல், கொத்தங்குடி, நக்கம்பாடி ஊராட்சி, ஸ்ரீ கண்டபுரம், பாலை ஊராட்சி, பருத்திக்குடி, பொய்யாநத்தம், சிவனாநகரம் ஊராட்சி கோனேரிராஜபுரம் நடந்து வடமட்டம் வந்தோம்.

 தேரழந்தூரிலும் ஸ்ரீகண்டபுரத்திலும் தோழர் பாரதி உரையாற்றினார். வடமட்டத்தில் தோழர் தியாகு
உரையாற்றினார்.

***

 தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் தொடர்கிறது. சனவரி 25 முதல் 10ஆம் நாள் வரை 439 கிலோ மீட்டர்களைப் பயணம் கடந்திருக்கிறது. மொத்தம் ஆயிரம் கிலோ மீடடர்கள் நடந்து வருகிற மார்ச் 12 குடந்தையில் நிறைவடைய இருக்கிறது. பயணத்தின் போது களத்துமேட்டிலும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும் மக்களைச் சந்தித்துத் தோழர்கள் பேசுகின்றனர். ஒவ்வொரு நாளும் வழியயங்கும் பயணக் குறிக்கோள்களைத் தாங்கிய துண்டறிக்கை களை ஆயிரக்கணக்கில் மக்களிடம் சேர்த்து நிதி திரட்டுகின்றனர். முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன், பிரபாகரனின் மாவீரர்நாள் உரைகள் சிற்றூர்களிலும் கூட நன்கு விற்பனையாகின்றன. 

 இயக்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளரும் அமைப்புக் குழு உறுப்பினருமான  தோழர் மோகன்ராசு பயணத்தை உடனிருந்து ஒருங்கிணைத்து வருகிறார். தோழர் நாத்திகன் கேசவன் பயணத்திற்கு தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவது,காவல்துறை அனுமதி பெறுவது போன்ற பணிகளையும் செய்கிறார். தோழர்கள்  ரவி, சுதாகாந்தி பயணம் குறித்து மக்களிடம் மாறி மாறி அறிவிப்புச் செய்தபடியே வருகின்றனர். புத்தகம் விற்கும் பணியை தோழர் பஞ்சநாதன் மேற்கொள்கிறார். தோழர் வேல்முருகன் பயணக் குறிப்புகள் எடுத்து வருகிறார். ஈரோடு தோழர் சிவா முன்கூட்டியே செல்லும் வழியயங்கும் சுவரொட்டிகள் ஒட்டுவதைக் கவனித்து வருகிறார். 

-தொகுப்பு : வேல்முருகன்

Pin It