இலங்கை மீதான மக்கள் தீர்ப்பாயம் – விளக்க அறிக்கை
தமிழீழத்தில் நிகழ்ந்த இனப் படுகொலையைப் பற்றிய விவாதத்தைச் சர்வதேச மட்டத்தில் எழுப்பிய நிகழ்வாக ‘மக்கள் தீர்ப்பாயங்கள்’ அமைந்தன. குறிப்பாக உலகப் புகழ்ப்பெற்ற ’நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ எனும் அமைப்பு புகழ்ப் பெற்ற பெர்ட்ரண்ட் ரசல் அவர்களால் வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்தப் போரில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை விசாரித்து உலகிற்கு அம்பலப்படுத்த உருவாக்கப்பட்டது.
உலகெங்கும் ஏகாதிபத்திய அரசுகளால், வல்லாதிக்க அரசுகளால் நிகழும் இனப் படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் குறித்த மக்கள் சார் பிரதிநிதிகளால், அறிஞர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் போன்ற பலரை நீதிபதிகளாகக் கொண்டு விசாரிக்கப்பட்டு அக்குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.
இப்படியானதொரு தீர்ப்பாயம் தமிழீனப் படுகொலைக்காக தமிழீழ ஆதரவு சிங்கள செயற்பாட்டாளர்களால் 2010இல் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் துவக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயமே முதன் முதலாக தமிழீழத்தில் நிகழ்ந்த படுகொலைகளை உலகிற்கு ஆதாரப் பூர்வமாக வெளிச்சமிட்டு காட்டியது. இந்த தீர்ப்பாயம் பல்வேறு முடிவுகளை முன் வைத்தது. அதில் குறிப்பாக தமிழீழத்தில் நிகழ்ந்ததை ‘இனப் படுகொலை’ என விசாரித்து அறிவிக்க வேண்டுமென முடிவினை வெளிப்படுத்தியது.
இத்தீர்ப்பாயத்தினால் கடுமையான நெருக்கடிக்குள்ளான ஐநா மன்றத்தின் தலைவராக இருந்த பான்கீமூன், உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை இலங்கைத் தொடர்பில் 2010 பிப்ரவரியில் அறிவிக்க நேர்ந்தது. மேலும் ராஜபக்சேவை ஒரு உள்நாட்டு விசாரணைக் குழுவையும் உருவாக்கும் சூழலை உருவாக்கியது. இதுவே உலகளவில் அழுத்தம் தருவதற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு.
இந்த புகழ்பெற்ற டப்ளின் தீர்ப்பாயத்தின் இரண்டாம் கட்ட விசாரணை, தமிழீழத்தில் நிகழ்ந்தது ‘இனப்படுகொலையா’ எனவும் அதில் பங்கேற்ற நாடுகள் குறித்துமான விசாரணையை ஜெர்மனியின் பிரேமன் நகரில் 2013இல் துவக்கியது. இந்த விசாரணையில் இலங்கை அரசின் அதில் பங்கெடுத்த நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா குறித்த விசாரணையை நடத்துவதென டப்ளீன் நகரில் எடுத்த முடிவின் அடிப்படையில் நிகழ்த்துவது என முடிவானது.
இதன் பின்னர் இந்திய அரசின் பங்களிப்பினைப் பற்றியும் விசாரணைக்குட்படுத்துவது என இறுதிக் கணத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்திய அரசின் பங்களிப்பு பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க மே17 இயக்கம் அழைக்கப்பட்டது. இதன்படி மே17 இயக்கம் தனது ஆவணங்களை சமர்ப்பித்தது. இந்நிகழ்வு 2013 டிசம்பரில் நிகழ்ந்தது. இதன் பின்னர் 2015 ஆகஸ்ட் மாத அளவில் இத்தீர்ப்பாயத்தில் மே17 இயக்கம் இந்தியா குறித்த ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவில்லை எனும் அவதூறு பரப்பப்பட்டது. அமெரிக்காவின் சதிகார தீர்மானத்தினை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இந்த அவதூறு மே17 இயக்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்க வேண்டுமென்கிற உள்நோக்கத்தில் பரப்பப்பட்டது.
இந்த அவதூற்றின் சுருக்க வடிவமாக
- ப்ரெமன் தீர்ப்பாயத்தில் இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை சமர்பிக்க மே 17 இயக்கத்தையோ, திருமுருகன் காந்தியையோ தீர்ப்பாயம் அழைக்கவில்லை என்றும்.
- ப்ரெமன் தீர்ப்பாயத்தில் திருமுருகன் காந்தி வேண்டுமென்றே இந்தியாவிற்கெதிரான ஆதாரத்தை வைக்கவில்லை என்றும் அவதூறை பரப்பினார்கள்.
மே17 இயக்கத்தின் மீதான நம்பிக்கையை சிதைக்க வேண்டும். அதன் கட்டமைப்பினை சிதைக்க வேண்டும், அதன் தோழர்களின் உழைப்பினை கொச்சைப்படுத்த வேண்டும், தோழர்களை சோர்வுறச் செய்ய வேண்டுமென நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்திற்கு பலரும் மேடையமைத்துக் கொடுத்தார்கள். இந்த அவதூறுகள் குறித்து மே17 இயக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பதில் அளிக்கவில்லை, அவதூறுகளுக்கு பதில் அளிப்பதில்லை எனும் மே17 இயக்கத்தின் முடிவின் அடிப்படையில் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் செய்யப்படவில்லை.
‘ப்ரேமன்’ நகரில் 2013இல் தீர்ப்பாயம் நடந்த பொழுது, அதன் நீதிபதிகளாக இருந்தவர்கள் ‘இனப் படுகொலை குற்றச்சாட்டு’, ‘அமெரிக்காவின் பங்களிப்பு’, ‘இங்கிலாந்தின் பங்களிப்பு’ என மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள்/விவாதங்களின் மீது ஒரு இரவிற்குள் முடிவெடுக்க வேண்டிய நேர நெருக்கடி இருந்தது. இந்த பங்களிப்புகள் குறித்தும், சர்வதேச இனப் படுகொலை சட்டங்கள் குறித்தும் ஆய்ந்து முடிவெடுக்கும் கடுமையான பொறுப்பு அவர்கள் மீதிருந்தது. இந்த தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக இருந்தவர்கள், ஐநாவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் தலைவராக இருந்தார்.
அர்ஜெண்டீனாவின் ‘இனப் படுகொலை ஆய்வுத் துறையின் பேராசிரியர், ருவாண்டா இனப் படுகொலை விசாரணையில் பங்கெடுத்தவர், நமீபிய இனப் படுகொலை குறித்து ஆய்வு செய்தவர், சிரெபிரெனிகா-செர்பிய இனப் படுகொலை விசாரணையில் பங்காற்றியவர், ரொகிங்கியா இனப் படுகொலைக்கு எதிராக -ஆர்மீனிய இனப் படுகொலைக்கான நீதிக்கான போராட்டத்தில் இருந்தவர்கள், குர்து மக்கள் மீதான இனப் படுகொலைக்கு எதிராக இயங்கும் துருக்கியப் பேராசிரியர் எனப்பலரும் இத்தீர்ப்பாயத்தில் நீதிபதிகளாக பங்காற்றியவர்கள்.
பிற மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளான ‘இனப் படுகொலைப் பற்றிய முடிவு’, ‘அமெரிக்கா-இங்கிலாந்தின் பங்களிப்பு’ என்பதைப் பற்றிய கவனத்தை முதன்மையாக செலுத்த வேண்டிய தேவை ‘டப்ளீன் தீர்ப்பாயம்-2010’இல் ஏற்பட்டது. எனவே அக்குற்றச் சாட்டுகளுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். எனவே இவர்களுக்கு இந்தியா குறித்த அறிக்கைகளை, ஆவணங்களை படித்தறிந்து முடிவெடுக்கும் நேரமில்லாமல் நீதிபதிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
முதல்நாள் பிற்பகலில் தொடங்கிய நீதிபதிகளுக்குள்ளான ஆய்வு-விவாதம் இரவு முழுவதும் தொடர்ந்தது. முதல் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் பற்றிய முடிவெடுக்க அதிகப்படியான நேரம் ஒதுக்க வேண்டி வந்ததால், இந்தியா குறித்து முழுமையாக வாசித்து முடிவெடுக்கும் நேர அவகாசம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் இனப் படுகொலையில் ‘இந்தியாவின் பங்களிப்பு’ பற்றி தனியாக சிறப்பு தீர்ப்பாயத்தினை உருவாக்குவது என முடிவானது. இந்த தனிச்சிறப்ப்பு தீர்ப்பாயத்தில் இந்தியா பற்றி விவாதித்து முடிவெடுப்பது என ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின்’ ஒருங்கிணைப்பாளர்கள் முடிவெடுத்து அறிவித்தார்கள்.
இப்படியான புகழ்பெற்ற தீர்ப்பாயத்தினை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இதில் பங்களித்த மே17 இயக்கத்தினை கொச்சைபப்டுத்தும் விதமாகவும், இந்த தீர்ப்பாயத்தில் ஒருங்கிணைத்த தோழர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், அவதூறு முன்வைக்கப்பட்டது. இந்த பின்னனி தகவல்களை எல்லாம் மறைத்து, மே17 இயக்கம் இந்தியாவின் மீதான குற்றச்சாட்டை திட்டமிட்டு முன்வைக்கவில்லை எனும் அவதூற்றினை பிரச்சாரம் செய்தார்கள். இப்படியான அவதூறு பிரச்சாரத்தினை 2018இல் பிரேமன் தீர்ப்பாயத்தினை ஒருங்கிணைத்த செயற்பாட்டாளர்கள் அறிந்து கொண்டார்கள்.
இது குறித்து விசாரித்து, சக ஒருங்கிணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்கள். பின்னர் இந்த அவதூறு பற்றிய விளக்க அறிக்கையை வெளியிடுவதென முடிவெடுத்து மே17 இயக்கத்திற்கு தெரியப்படுத்தினார்கள். இந்த அவதூறு ஆதாரமற்றது என்று விரிவான ஒரு விளக்க அறிக்கையை இந்த தீர்ப்பாயத்தினை ஒருங்கிணைத்த செயற்பாட்டாளர்களான தோழர்.விராஜ் மெண்டிஸ் மற்றும் தோழர். ஜூட்லால் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து 2018 ஆகஸ்ட்டு மாதத்தில் வெளியிட்டார்கள். இந்த அறிக்கையின் தமிழாக்கத்தையும் ஆங்கில அறிக்கையையும் நாங்கள் உங்கள் முன் வெளியிடுகிறோம்.
இதுபோல ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவும், போராடும் இயக்கங்களை கொச்சைப் படுத்தும் விதமாகவும் நடைபெறும் முயற்சிகளை, இம் முயற்சிகளை முன்னெடுக்கும் நபர்களை தமிழ்ச்சமூகம் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த அறிக்கை இப்போது வெளியிடுகிறோம். அவதூறுகளால் மே17 இயக்கத்தை ஒருநாளும் முடக்கி விடமுடியாது என்பதை சொல்லிகொள்ள விரும்புகிறோம்.
ப்ரெமென் தீர்ப்பாயத்தை மையமாக வைத்து மே 17 இயக்கம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றிய அறிக்கை:
"இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தின்”பெயரை பயன்படுத்தி, தமிழ் நாட்டில் இயங்கும் மே 17 இயக்கத்தின் மீது அவதூறுகள் பரப்பப்படுவது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஈழ இனப்படுகொலையில், இந்தியாவையும் குற்றவாளியாக ப்ரெமென் தீர்ப்பாய நீதிபதிகள் தீர்ப்பளிக்காமல் போனதற்கு காரணமே மே 17 இயக்கம் தான் என்றும், இந்தியாவை காப்பாற்றும் நோக்குடன் ஆதரங்களை மே 17 இயக்கம் முன் வைத்தது என்றும், மே 17 இயக்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ப்ரெமென் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர்கள் என்ற முறையில், இந்த குற்றச்சாட்டுகள் எந்த வித அடிப்படையும் அற்றவை என்பதை நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இலங்கை மீதான இனப்படுகொலை குற்றத்துடன் சேர்த்து, ஈழ இனப்படுகொலையில், அமெரிக்க, ப்ரித்தானிய மற்றும் இந்திய அரசுகளின் பங்கையும் சேர்த்து ப்ரெமென் தீர்ப்பாயத்தில் விசாரிக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். ’தமிழ்நெட்’ இணைய தளத்தில் திருமுருகன் காந்தியின் நேர்காணல்களை நாங்கள் ஏற்கனவே பார்த்திருந்ததால், இந்தியாவின் பங்கை தீர்ப்பாயத்தில் முன்வைக்க மே 17 இயக்கம் சரியாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
ஒன்றை முதலிலேயே சொல்லி விட வேண்டும். ப்ரெமென் தீர்ப்பாயம் செய்து முடிக்க நினைத்தவைகளுக்கான போதிய கால அவகாசம் அதனிடம் இல்லை. 2010இல் டப்ளின் தீர்ப்பாயத்தில் இலங்கை மீதான இனப் படுகொலை குற்றத்தையும் விசாரிக்க நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் அந்த கால கட்டத்தில் அது சாத்தியப்படவில்லை. அதனால் ’போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகியவற்றை மட்டும் விசாரித்தோம். அதே சமயம் இலங்கை மீதான இனப் படுகொலை குற்றத்தை பின் வரும் காலங்களில் விசாரிக்கப் போதுமான ஆதரங்களை நீதிபதிகளிடம் அளித்தோம். அமெரிக்கா மற்றும் ப்ரித்தானிய அரசுகளின் மீதான இனப் படுகொலை குற்றங்களின் ஆதாரங்களையும் ஏற்கனவே கொடுத்திருந்தோம். டப்ளின் தீர்ப்பாயத்தில் நாங்கள் முன் வைத்த ஆதாரங்களே, அமெரிக்கா மற்றும் ப்ரித்தானிய அரசுகளின் மீதான இனப் படுகொலை குற்றங்களுக்கு ஆதாரமாக அமைந்தன. மூன்று வருடங்கள் கழித்து ப்ரெமென் தீர்ப்பாயத்திலும் அதை நாங்கள் மறுபடியும் முன்வைத்தோம்.
ஒரு குறுகிய கால கட்டத்தில், பல்வேறு தகவல்களை நீதிபதிகள் ஆராய வேண்டியிருந்தது. இனப்படுகொலை ஒரு சிக்கலான விவகாரம் என்பதால், கடைசிக் கட்ட போரின் நேரடி சாட்சியங்களின் அனுபவங்களை கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்க நீதிபதிகள் முயற்சித்தனர். இதனால் ஈழ இனப் படுகொலையில் சர்வதேச நாடுகளின் பங்கை விசாரிக்கப் போதுமான நேரம் இல்லாமல் போனது.
அமெரிக்கா மற்றும் ப்ரித்தானிய அரசுகளின் பங்கு பற்றி நீதிபதிகள் டப்ளின் தீர்ப்பாயம் தொட்டே அறிந்திருந்தனர். ஆனால் இந்தியாவின் பங்கு என்பது இந்த தீர்ப்பாயத்தில் தான் முதன் முறையாக விசாரிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ப்ரித்தானிய அரசுகள் ஈழ விடுதலைக்கு முதலில் இருந்தே எதிர் நிலையில் இருந்தன. ஆனால் இந்தியா தன் போக்கை இடையில் தான் மாற்றிக் கொண்டது. இவை எல்லாமே இந்தியா மீதான விசாரணையை சிக்கலாக்கின. இதை எல்லாம் கணக்கில் கொண்டு, மே 17 இயக்கத்திற்கு கூடுதல் நேரம் அளிக்க நினைத்தோம்.
ஆனால் கடைசியில் அமெரிக்க மற்றும் ப்ரித்தானிய அரசுகளின் பங்கை விசாரிக்க எவ்வளவு குறுகிய நேரம் ஒதுக்கப்பட்டதோ, அதே அளவு நேரம் தான் இந்தியாவை விசாரிக்கவும் ஒதுக்க வேண்டியதாயிற்று. வேறு வழியில்லாமலேயே நாங்கள் இதைச் செய்தோம். தீர்ப்பாயத்திற்குப் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்தியாவிற்கு ஈழ இனப் படுகொலையில் பங்கு இருக்கிறது என்பதை தாங்கள் நம்புவதாகவும், அதை வருங்காலங்களில் மேலும் நிச்சயமாக விசாரித்து முடிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இனப் படுக்கொலையில் இந்தியாவின் பங்கு நிரூபிக்கப்படாமல் போனதற்கு மே 17 இயக்கம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எவ்வளவு அபத்தமானது என்பதை சுட்டிக்காட்டவே நாங்கள் இவ்வளவு விளக்கங்களை தருகிறோம். தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு துடிப்பான இயக்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கு ப்ரெமென் தீர்ப்பாயத்தின் பெயர் பயன் படுத்தப்படுவது எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
இப்படிக்கு
விராஜ் மெண்டிஸ், சர்வதேச மனித உரிமைச் சங்கம், ப்ரெமென்
ஜூட் லால் ஃபெர்ணாண்டோ, இலங்கையில் அமைதிக்கான ஐரிஷ் மன்றம்
02.08.2018
Statement regarding allegations made against the May 17 Movement regarding the Bremen Tribunal
It has been brought to our attention that the ‘People’s Tribunal on Sri Lanka’ is being used in a widespread campaign to discredit the Tamil Nadu based ‘May 17th Movement’. It has been alleged that the reason that the jurors at the Bremen Tribunal did not rule on the issue of Indian complicity to genocide was because the May 17th Movement presented the evidence in such a manner as to deliberately sabotage the possibility of the jurors finding India guilty. As the organisers of the Bremen session of the ‘People’s Tribunal on Sri Lanka’, we wish to state that these allegations are unfounded.
We had decided that, as well as the charge of Genocide against the Sri Lankan State, we would add US, British and Indian complicity to the list of accusations for the panel of jurors at the Bremen session to examine. We had seen video interviews with Mr. Thirumurugan Gandhi of the May 17th Movement on tamilnet.com and decided that this movement would be well placed for putting forward the case for Indian complicity.
It must be said from the outset that the goals that the Bremen Tribunal had set for itself was difficult to achieve – due to the time limitations. Of course the Bremen session was the second part of the ‘Peoples Tribunal on Sri Lanka’. Originally, we had intended to include the charge of genocide against the Sri Lankan state at the Dublin Tribunal (held in 2010). However, at that time preliminary discussions with members of the panel of judges convinced us that this was not practical at that time and so we decided to restrict our accusations to ‘war crimes’ and ‘crimes against humanity’. At the same time, we provided enough evidence in Dublin to convince the panel of judges that the charge of genocide should be considered in the future. It was the same with the question of US and British complicity. Our evidence in Dublin (see background document presented to the panel in Dublin in 2010 http://pptsrilanka.org/accusations/crimes-against-peace/) laid the basis for the accusations regarding British and US complicity – which we also put forward three years later in Bremen.
In reality the panel of jurors had to process an enormous amount of information in a short period of time. As Genocide was a controversial issue, the panel of judges were pushing to hear evidence from witnesses who had direct experience of the last stages of the war – so that they can make an informed decision on this central accusation. This generated a time squeeze, and the time allocated for international complicity had to be reduced.
Whereas the judges had previous knowledge of US/UK complicity, from Dublin tribunal onwards, Indian complicity was new to the panel. Further, India’s changing role during the period of the Eelam struggle (as distinct to the US and UK’s constant opposition to it) added to the complexity. To compensate for these hurdles, we intended to give the May 17th movement extra time to make their presentation on Indian complicity. But due to time overrun we had to reduce the time slot for India to the same level as for US and for UK. We took this decision with a heavy heart. The judges stated at the press conference that although they ‘believed’ that India was in fact complicit, that they would like to examine this issue further at a later date to make a considered determination.
We explain this to show the reader that it is baseless to suggest that the May 17th movement deliberately sabotaged the Indian complicity determination. We are disturbed that the name of the Bremen Tribunal has and is being used to undermine a vibrant political movement in Tamil Nadu.
Viraj Mendis for the Internationaler Menschenrechtsverein Bremen e.V
Jude Lal Fernando for the Irish Forum for Peace in Sri Lanka
02.08.2018
- மே 17 இயக்கக் குரல்